குழந்தையின்மைக்கான ட்ரீட்மெண்ட்

தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்

நம்ம எல்லாருக்கும் பயன் படர மாதிரியான இழை ஆரம்பிச்சுருகீங்க...எனக்கு தெரிஞ்சத கண்டிப்பா பகிர்ந்துக்கறேன்...உங்க சந்தேகத்த கேட்டு ஆரம்பிச்சு வையுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ரேணு எனக்கு தெரிந்தது. குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுக்கும் போது தொடர்ச்சியாக மாத்திரை எடுக்க வேண்டாம். டாக்டரே ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் கொடுத்தாலும் நாம் ஒரு மாசம் சாப்பிட்டு ரிசல்ட் பாசிட்டிவா வரலன்னா உடனே அடுத்த மாசம் டேப்லட் எடுக்காம ஒரு 2, 3 மாசம் கேப் விட்டு திருப்பி எடுக்கலாம். அப்படி இல்லாம ரெகுலரா டேப்லட் சாப்பிட்டா ஓவரியன் சிஸ்ட் வர சான்ஸ் அதிகமா இருக்குமாம். நிறைய பேருக்கு இந்த சிஸ்ட் வர சான்ஸ் அதிகமா இருக்கிறதா சொன்னாங்க டாக்டர். இது வந்தால் பயப்பட தேவயில்லை. 2 மாசம் பர்த் கன்ட்ரோல் பில்ஸ் சாப்பிட்டா சிஸ்ட் கரைஞ்சிரும்.யாரும் தொடர்ந்து மாத்திரை எடுத்துகிட்டா கொஞ்சம் கவனமா இருங்க. நான் யாரையும் பயமுறுத்த சொல்லல. இது டேப்லட் குடுக்குற டாக்டருக்கு தெரியாதான்னு கேக்காதீங்க. அவங்களே இது சாதாரணமா டேப்லட் போட்டா கரு உருவாகலன்னா வரும், அப்புறம் கரைஞ்சிரும்னு விட்ருறாங்க.அப்புறம் தொடர்ந்து டேப்லட் போட இது கொஞ்சம் பெருசா வளர நம்ம அதை கரக்கிறதுக்கும் சேர்த்து டேப்லட் போட வேண்டி வரும். இதை சொல்லனும்னு தோனிச்சு, அதான் இங்க ஷேர் பண்ணிகிட்டேன்.

nazeem ...குழந்தைன்மைக்கான மாத்திரை ன்னா...எத பத்தி சொல்றீங்கன்னு சரியாய் புரியல...இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்ன நல்லாருக்கும்னு நினக்குறேன்.அப்புறம் நம்ம தோழிகளுக்கு நீங்க சொன்னதிலேயே ஏகப்பட்ட டவுட் வந்துடும்.என்ன குழந்தஈன்மைக்கான சிகிசைங்கரப்போ நிறைய type இருக்கில்லையா...அதான் சொல்றேன் ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

naanum குழந்தைகாக treatment எடுத்து கொண்டு இருக்கிறன்.எனக்கு முதல்ல
testrogene hormone அதிகமாக இருந்தது.அதுக்காக 2 months tablet எடுத்தேன்.
normal value வந்துட்டு..அப்பரம் 1 மாதம் letrosole,duphasan combination la tablet குடுத்தாக.ovalation ஆச்சி ஆனா conceive ஆகல.அடுத்த மாதம் folic acid tablet மட்டும் குடுத்து check பண்ணி பார்தாக ovalation ஆகல.போன மாதம் clomid,duphasan combination tablet குடுத்தாக conceive ஆகல. இன்னும் 2 மாதம் பார்த்துட்டு conceive ஆகலனா இந்தியா போயி laprescopy பன்னனும் சொல்லிருக்காக.அது பண்ணி 6 மாதத்தில ஆகலாம்னு சொல்லுராக.இத பத்தி தெரிந்தவர்கள் சொல்லுங்கபா.ரொம்ப பயமா இருக்கு.

நன்றி தோழீஸ் கேட்டதும் பகிர்ந்துகிட்டதுக்கு இன்னும் நிறைய கருத்துகள் எதிர் பாக்கிறேன் சதி காதிர் உங்களுக்கான பதிலை கண்டிப்பா பதில் தெரிஞ்ச தோழிகள் சொல்லுவாங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி கோமதி. இப்பதான் பார்த்தேன். விளக்கமா சொல்லனும்னா நார்மல் பீரியட்ஸ். நீர்க்கட்டி பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கிறவங்களுக்கு நான் சொல்றேன். அதாவது முதலில்
3 -7th day night clomifene acid tablet sappiduvom.(5 days)
next 14 or 15 day ovitrlle injection (glycoprotein hormone)
next 16th day night drydogestrone tablet athu 10 days அதெல்லாம் சாப்பிட்டு எல்லா மாத்திரையும் முடிஞ்சப்புறம் நம்ம எதிர்ப்பார்ப்போம். ஆனால் பீரியட் வந்துட்டா உடனே அடுத்த மாசமோ அல்லது அதுக்கடுத்த மாசமோ டாக்டர் மறூபடியும் டேப்லட் கொடுப்பாங்க. அதை தான் உடனே சாப்பிட வேணாம்னு சொல்றேன்பா. ஏன்னா நம்ம டேப்லட் எடுத்தப்போ கரு உருவாகாம டேப்லட் போட்டதால சின்னதா சிஸ்ட் மாதிரி வருமாம். அது உடனே சில பேருக்கு கரைஞ்சிரும். சில பேருக்கு கரைய டைம் எடுக்குமாம். நம்ம உடனே மருபடியும் டேப்லட் எடுத்தா கரையாத சிஸ்ட் கொஞ்சம் பெருசா வர சான்ஸ் அதிகமா இருக்கும். அப்புறம் அது கரையுறதுக்குனு தனியா டேப்லட் வேண்டி வரும். அதுக்காக தான் சொன்னேன்பா. டேப்லட் கன்டினியூவா சாப்பிடாம கொஞ்சம் கேப் விட்டு சாப்பிடலாம்னு. நான் எதும் தப்பா சொல்லயே. யாரையும் பயமுறுத்துரதுக்கா சொல்லல.

சாதிகா உங்க ஹஸ்பென்ட்க்கு செமென் டெஸ்ட் எடுத்தாங்களா. எல்லாம் நார்மலா. ? எல்லாம் நார்மல்னா நீங்க கொஞ்சம் ரிலாக்சா இருங்க. மேரேஜாகி எத்தனை வருஷம் ஆச்சு.னீங்க சொன்ன டேப்லட் எல்லாம் சாப்பிட்டா கன்சீவ் ஆக வாய்ப்பு நிறைய இருக்கு. நீங்க முதல்ல மனச அமைதியா வைங்க. கவலைப்படாதீங்க. நாம ரொம்ப எதிர்பார்த்துட்டே இருந்தோம்னா அதே நமக்கு ரொம்ப கவலைய அதிகப்படுத்தும். நீங்க டெய்லி பாதாம், பால் ரெண்டு பேரும் சாப்பிடுங்க. எங்களுக்கு தெரிஞ்ச ஒரு அரபி சாப்பிட சொன்னார். ட்ரை பண்ணி பாருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீங்க டேப்லட் எதும் சாப்பிடாம நார்மலா ஒரு 2, 3 மாசம் ட்ரை பண்ணி பாருங்க.

ரேணு உபயோகமானா தலைப்பு போடிருக்கீங்க,

இப்படிக்கு ராணிநிக்சன்

பர்ஸ்ட் வெறும் போலிக் ஆசிட் dropin மட்டும் குடுத்தாங்க அப்றம் siphence100 எடுக்க சொன்னாங்க 5 நாள் மட்டும் பாலிக்குலர் ஸ்டடி பண்ண சொன்னாங்க பண்ணப்பறம் susten200 எடுக்க சொன்னாங்க 10நாள் மட்டும் திரும்ப அடுத்த மாசம் siphene100 எடுக்க சொன்னாங்க செமன் டெஸ்ட் எடுக்க சொன்னாங்க போன மாசம் hsg test harmone test எடுக்க சொன்னாங்க இதுவரை எடுத்த டெஸ்ட் நார்மல் அதனால இன்னும் இரண்டு மாசம் கழிச்சி போகலாம்னு இருக்கேன் போலிக் ஆசிட் கண்டினீவ்வா சாப்பிடுறேன் இன்னும் என்ன மாதிரியான டெஸ்ட்லாம் இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

I am a silent reader and i have registered only today to answer u.My aunt is a Gynaecologist .திருமணம் முடிந்து 1 வருடம் வரை எந்த மருத்துவமும் இன்றி குழந்தைக்கு முயற்சி செய்யலாம்.அதன் பிறகும் கருதரிக்கவில்லை என்றால் அவசியம் ஒரு gynaecologistஐ பார்க்க வேண்டும். அவர் முதலில் சில basic test like (blood test,hsg test, semen test for male)எல்லாம் எடுப்பார்கள்.அதில் ஏதும் குறை இருந்தால் அதை சரி செய்ய 1 or 2 or 3 months tablet கொடுப்பார்கள்.Hormone levelஐ சரி செய்த பிறகு Follicular study எடுப்பார்கள். அதற்கு தான் ovulation stimulating tablets like clomid, 2nd to 6th day or 3rd day to 7th day எடுக்க சொல்வார்கள்.அதன் பிறகு follicle study செய்து size growth சரியாக உள்ளதா என்று பார்ப்பார்கள்.சரியாக வளர்ச்சி இல்லை என்றால் அடுத்த மாதம் tablet power increase பண்ணுவார்கள்.வளர்ச்சி சரியாக இருந்தும் கரு உருவாகவில்லை என்றால் அடுத்த 2 மாதமும் அதே tablet கொடுத்து try பண்ண சொல்வார்கள்.பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் laproscopy செய்து uterus,fallopian tube எல்லாம் test செய்து பார்ப்பார்கள்.Then they will give treatment depending upon the problem. You must not stop taking the tablets at any time.Then only the doctor can diagnose and set right ur problem.

மேலும் சில பதிவுகள்