தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்
renu
hsg ன்ன என்ன ரேணு?
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
Gomathi
ஹாய் கோம்ஸ் எப்படி இருக்க? Hsg அது ஒன்னும் இல்ல dey use பண்ணி கருகுழாய் அடைப்பு மட்டும் பார்ப்பது தான் hsg டெஸ்ட், அதான் கோம்ஸ்.
laproscopy vs hsg
தொப்புளுக்கு கீழே சிறு அளவில் வெட்டி அந்த தூவரத்தின் வழியாக telescope ஒன்றை அடிவயிற்று பகுதிக்குள்ளே உட்செலுத்தி ,அதன் உதவியோடு செய்யப்படும் அறுவை சிகிச்சை முறை.இதனால் கீழ் இடுப்பு பகுதியின் உட்புற உறுப்புகளை டாக்டர் நன்றாக பார்க்க முடியும். மகபேறின்மைக்கு காரணமாக உள்ள பாதிப்புகளை இதன் முலம் கண்டறிய முடியும். இது ஒரு minor surgery வகையை சேர்ந்ததுதான்.
hsg என்றால் hysterosalpingogram . இதை tubogram என்றும் சொல்வார்கள்.இதில் அறுவை சிகிச்சை,மயக்க மருந்து,மருத்துவமனையில் தங்குவது போன்ற எதுவுமில்லை.செலவும் குறைவு.இரண்டுக்கும் உள்ள வித்தாயசம் லப்ரோச்கோபி பண்ணும் போது எதாவது பிரச்னை இருந்தால் அப்போதே சரி பண்ணும் வாய்ப்பு உள்ளது. அனால் hsg யில் என்ன பிரச்னை என்று அறிந்து கொள்ள மட்டுமே முடியும்.
மருத்துவர்களே லப்ரோச்கோபி முறையை தான் சிபாரிசு செய்கிறார்கள்.
இன்னும் laproscopy பற்றி detail ஆக வேண்டும் னாலும் சொல்லுங்க நான் தருகிறேன்.
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
ஃப்ரண்ட்ஸ்
நான் ரொம்ப நாள் கழிச்சு வரேன் ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ஹாய்... அப்பறம் கோம்ஸ் எனக்கு இப்ப தான் ஃபாலிகுலர் ஸ்டடி ந்னு ஒண்ணு பண்ணாங்க ஸ்கேன். அதுல ஒண்ணும் ப்ராபளம் இல்ல அடுத்து என்ன டெஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சா தோழிகள் சொல்லுங்க பா... அது பண்ணப்ப Benforce M ங்கற டேபிளட் சாப்ட சொன்னாங்க 30 நாள் நானும் கரெக்டா சாப்டு வரேன். இன்னைக்கு எனக்கு 32 வது நாள் இன்னும் பீரியட் வல்ல டாக்டர் யூரின் டெஸ்ட் பண்ண சொன்னாங்க அது நெகடிவ் சோ அடுத்து என்ன டெஸ்ட் பண்ண சொல்வாங்க ப்ளீஸ் யாராவது சொல்லுங்கபா...
ரேணு நீங்க என்ன டெஸ்ட் பண்ணப்ப உங்களுக்கு இதுலாம் பண்ண சொன்னாங்க.
வர்தினி நீங்க இப்ப laparoscope பண்ணிருக்கிங்களா?
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
Meenu
மீனு வாங்க நானும் ஒரு மாசம் இல்ல மீனு இந்தியா போய்ட்டு வந்தேன், எனக்கு ப்ரியட்ஸ் வந்த முதல் நாள் வர சொன்னங்க , எனக்கு டிக்கெட் இல்ல நான் 3 நாள் போக முடிந்தது , எனக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வர சொன்னங்க, முட்டை வளர்ச்சி எப்படி இருக்குனு பார்த்தாங்க, மீனு, எல்லாம் நார்மல் தான் மீனு,
மீனு குட்டி
எப்படி இருக்க? என்ன ஆச்சு ஆளை காணும் இன்னும் ஒருவாரம் கழித்து ரத்த டெஸ்ட் பண்ணி பாருங்க 32 நாள்ல எதுவும் தெரியாது
இப்படிக்கு ராணிநிக்சன்
வர்தினி ஜெஸிமா..
ஹாய் ஜெஸி எப்டி இருக்க நான் நல்லா இருக்கேன்டா... எங்க ஆபிஸ்ல கொஞ்சம் கெடுபிடி அதான். அப்டியா ஓகே நான் ரத்த டெஸ்ட் பண்ணி பார்க்குறேன். அதுக்கு முன்னாடி பீரியட்ஸ் வந்துட்டுனா அடுத்து என்ன டிரீட்மெண்ட் பண்ணுவாங்க.. ஏன்னா எனக்கு வயறு பீரியட் டைம்ல வலிக்குற மாதிரி வலிச்சது... அதான் கேக்குறேன். அப்டியா இந்தியா வந்திங்களா எல்லாம் ஓக்கே நா நிம்மதியா இருங்க.. வர்தினி...
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
meenu n thozhis
இங்கு நலம் விசாரிப்பு வேண்டாமே தோழீஸ் அரட்டைல பேசிக்கலாம் எவ்ளோ வேணுண்ணாலும் ம் சரியா என் தோழிகளே மீனு எனக்கு பாலிக்குலர் ஸ்டடி பண்ணப்பறம் அவருக்கு செமன் டெஸ்ட் பண்ண சொன்னாங்க அதும் நார்மல் அதுக்கப்பறம் தா hsg test blood test பண்ண சொன்னாங்க நா இன்னும் பண்ணலப்பா இனிதா போகப்போறேன்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
renukadeva nd frnds
ஹெல்ப் பண்ணூங்க தோழிஸ்... இந்த டாப்லட்ஸ் எல்லாம் எதுக்கு நு தெரியுமா?.. இது சாப்பிடருதுனால எதாவது symptoms தெரியுமாT.
clome 100:3rd to 8th(daily nit 1)
capsule ovigyn D: daily morn 1 nd nit 1 for 30 days
T.Duphaston: 20th day to 24th day morn 1 nd nit 1
ALL IS WELL
hi
hi friends,anybody in trichy? please inform me best doctor in trichy and also tell me நீங்க திருச்சியில் எந்த டாக்டர் கிட்ட காண்பித்தீர்கள்?