குழந்தையின்மைக்கான ட்ரீட்மெண்ட்

தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்

hi milky,clome 100 for egg growth, T.Duphaston for good ovulation.

சித்தா முறையில் இதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலாம்னு எனக்கு ஒருத்தங்க சொன்னாங்க இதன் மூலம் பயனடைஞ்சவங்க யாரேனும் இருந்தால் உதவவும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னை பாக்கறவங்க எல்லாரும் தைராய்டு இருக்கானு கேட்கிறாங்க என் கழுத்து குண்டா இருக்கும் என் அப்பா போலவே சின்ன வயசுல டெஸ்ட் பண்ணி இல்லைனு சொல்லிட்டாங்க இப்ப திரும்ப டெஸ்ட் பண்ண சொல்றாங்க தைராய்டு டெஸ்ட் எப்டி பண்ணுவாங்க தெரிந்தவங்க உதவவும் குழந்தையின்மைக்கு தைராய்டு முக்கிய காரணமா கருதப்படுவது ஏன் இதப்பத்தி ஏற்கனவே பேசியிருந்தா அந்த லின்க் குடுத்து உதவவும் தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தைராய்டு டெஸ்ட் ரத்த பரிசோதனையில் தான் செய்வாங்க. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் வர சொல்லுவாங்க.. கொஞ்சம் ரத்தம் எடுத்து அதில் தான் தைராய்டு டெஸ்ட் எடுப்பாங்க.. வேறு ஒன்றும் இல்லை.. இதில் நீங்க குழம்ப வேண்டிய அவசியமே இல்லை.

"எல்லாம் நன்மைக்கே"

-

hsg என்றால் என்ன? விளக்கம் தரவும் . மயக்க மருந்து இல்லாமல் உள் உறுப்புக்குல் சோதனை செய்வதா??

god with us

எனக்கு தைராய்டு இப்பதா ஸ்டார்ட் ஆகி இருக்கு மருந்து எடுக்குகிறேன் இரத்தசோகை இருந்தது 7 பாய்ண்ட் எச்பி தான் இருந்தது ட்ரீட்மெண்ட்கு அப்பறம் 12.5 ஆகிடுத்து ஒரு மாசத்திலேயே இப்ப டேப்ளட் எடுக்குறேன் குழந்தையின்மைகாக அதனால குழந்தையின்மைகான ட்ரீட்மெண்ட் போறவங்க தைராய்டு இரத்தசோகை அப்றம் வீட்டுபிரச்சைகளை முதலில் சரி பண்ணிட்டு அப்றம் ட்ரை பண்ணுங்க சக்ஸஸ் ஆகும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் ஒரு வருடமாக அறுசுவையில் உறுப்பினராக உள்ளேன். திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. ஒரு வருடத்திற்குள்ளாகவே டாக்டரிடம் சென்று பார்த்தோம் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் முதலிலேயே சரி செய்து கொள்ளலாம் என்பதற்காகவே சென்றோம். கருப்பை மற்றும் கருமுட்டை வளர்ச்சியும் நன்றாக இருந்தது. பிறகு மேலும் ஒரு வருடம் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம். காத்திருந்தோம். பலனேதுமில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பாக மீண்டும் சிகிச்சையை தொடங்கினோம். முதல் மாதம் சில மருந்துகள் கொடுத்து ஸ்கேன் செய்து 12 ஆம் நாள் ஊசி போட்டு IUI சிகிச்சை செய்தார்கள். Success ஆகவில்லை. என் கணவருக்கான பரிசோதனைகளும் எனக்கு இந்த மாதம் 7ஆம் நாள் கருக்குழாய் அடைப்பு போன்ற பரிசோதனைகளும் செய்தாகி விட்டது. எந்த பிரச்சனையும் இல்லை என்றே பதில் வந்தது. அடுத்த மாதம் ஹார்மோன் test எடுக்க சொல்லியிருக்கிறார்கள்.அடுத்த மாதம் 2ஆம் நாள் செல்ல வேண்டும். அது எப்படி எடுப்பார்கள் என்ற விவரங்களை தோழிகள் தந்து உதவ வேண்டும். அடுத்த மாதம் high dose tablets கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். IUI செய்து success ஆனவர்கள் யாராவது இருந்தால் சிகிச்சை எடுக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகளை சொல்லுங்களேன். உங்கள் பதில்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்களுடைய பெயர் புரியவில்லை தோழி.
HSG என்பது கருக்குழாய் அடைப்பு இருந்தால் அதை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனையாகும். Folicular study செய்யும்போது நமக்கு வலி தெரியாமல் இருக்கும். ஆனால் HSG செய்யும்போது வலி இருப்பது போல் உணருவோம். ஆனால் டாக்டர் சொல்லும் Instruction follow செய்தால் சுலபமாக சமாளித்து விடலாம். பயப்படாமல் செய்து கொள்ளலாம்.

hai,trichy la best dr na srirangam punitha rajesh pa .

dont delay in your work.

மேலும் சில பதிவுகள்