நண்பன்

ஹாய்

எல்லாரும் நண்பன் படம் பார்த்தீங்களா ?

உங்கள் கருத்துகளை இங்கே வந்து சொல்லுங்களேன் பேசுவோம்

படம் நல்ல இருந்தது. புரிந்து படித்தல் தான் உண்மையான கல்வி என்று சொல்லி இருப்பது அருமை. பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. Assku பாடல் சங்கரின் பழைய படங்களின் எதிரொலிப்பு (அந்நியன் - அண்டங்காக்கை, குமாரி ; சிவாஜி - சஹானா, Style ). நட்பை நன்றாக காட்டி இருக்காங்க.

பயப்புட்டே படிப்பை விடுரவுங்களின் எதிரொலிப்பு ஜீவா. அப்பா அம்மாக்காக மட்டுமே தன் கனவுகளை தொலைத்து விட்டு படிப்பவர்களின் எதிரொலிப்பு ஸ்ரீ காந்த். பிள்ளைகளுக்கு புரிஉதோ இல்லையோ எப்படியாவது மனப்பாடம் செய்து அவர்கள் பாஸ் அகிவிடனும். அப்போது தான் கல்லூரி & பள்ளிக்கு பெருமை என்று நினைக்கும் ஆசிரியர்களின் எதிரொலிப்பு சத்யராஜ். மொட்டை மனப்பாடம் செய்து பரிட்சையில் கொட்டும் எதிரொலிப்பு சத்தியன். அனைவரின் நடிப்பிற்கும் ஒரு சபாஷ். ஆனால் ஒரு கட்டத்தில் கூட புக்கை தொடாமல் இறுதியில் 1st class வரும் கதாநாகன் cinemaththanam.

ஆனா என்னதான் கோடி கொடியாய் கொட்டி படம் எடுத்தாலும் கதாநாயகிக்கு மட்டும் துணி தருவதில் நம் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்த கஞ்சத்தனம் எதற்கு என்று எப்படி யோசித்தாலும் புரியவே மாட்டேன்குது. தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நானும் நண்பன் படம் பார்த்தேன் படம் நன்றாக இருந்தது கல்வி முறை எப்படி அமைய வேண்டும் என்பதை நன்றாக கூறி உள்ளார்கள் சத்தியன் நடிப்பு நன்றாக இருந்தது Assku பாடல் நன்றாக இருந்தது நண்பருக்காக எதையும் செய்வார்கள் சங்கரின் மற்ற படங்கள் போலவே இதுவும் நன்றாக இருந்தது
எனக்கும் எல்லா படத்திலும் கதாநாயக்கிக்கு மட்டும் ஏன் எப்படி உடை தருகிறார்கள் என்ற சந்தேகம் இருந்து கொண்டே வருகிறது இன்னும் விடை தெரியவில்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நண்பன் நானும் பார்த்தேன் ரொம்ப பிடித்தது. என்னோட பழைய ப்ரண்ட்ஸ எல்லாம் நினைச்சு பார்க்க வச்சுது. வழக்கமான சங்கர் படங்களை விட சற்றே வித்தியாசமானது முதல் முறையா சங்கர் கூட சுஜாதா அவர்கள் இல்லாத படம் ரொம்ப வறுத்தமான விஷயம் எந்திரன்ல கூட அவரோட பங்களிப்பு இருந்தது. நல்ல ப்ரண்ட்சிப், வெற்றியை தேடி நாம ஓட வேண்டாம் நம் வேலைகளை நாம கரைக்டா செய்துட்டு இருந்தோம்னா வெற்றி நம்மளை தேடி வரும்னுகிறது, கல்வியை பற்றின விழிப்புணர்வு, மனசுக்கு பிடிச்சத செய்றது, ALL IS WELL, இப்படி ப்ளஸ் சொல்லலாம்.
முஸ்தபா முஸ்தபா பாட்டுக்கு அப்பறம் ப்ரண்ட்ஸ்காக ஒரு சூப்பர் சாங்,
பா. விஜய்யின் வரிகள் சூப்பர்ப்,
///தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலி தாண்டியும் உள்ளப்படி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பாத்துப்படி///
எஸ். ஜே. சூர்யா ஏன் வந்தாறுனு தெரியல வந்ததும் ஓடிட்டாரு, விஜய் படிக்காமலே மார்க் வாங்குறாமாம் இதுலாம் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியல
பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க இப்படிலாம் சேர்த்தாதான் சினிமா சினிமாவ இருக்கும்

நண்பன் படம் ஹிந்தி 3-idiots ரீமேக்.
ஒரிஜினல் ஸ்டோரி Chetan Bhagat எழுதின "Five point someone" என்ற நாவலோட தழுவல் தான்.Novel kooda compare பண்ணி பாக்க முடியாது. But movie is good. இது ஷங்கர் படம் நு பாடல்-ல நல்ல தெரியுது.

+points
1.விஜயோட மாறுபட்ட வேடம்.பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது

2. 3 ஹீரோஸ் சேர்ந்து நடிச்சது.

3. நல்ல மெசேஜ்.பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும்.

Negative points:

1.ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை

2.வசனங்களில் ஆபாசத்தை தவிர்த்திருக்கலாம் .

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

பெண்கள்,களை இப்படி பயன்படுத்துவது படங்களை பார்க்கவும்,அவர்களின் கடன்களை அடைக்கவும்,வாலிபர்களை நல்ல வழியில் சிந்திக்க விடாமல் தடுக்கவும்,ஜொள்ளர்களின் ஆசையை தீர்க்கவும்,வறுமயில் வாடும் பெண்களின் வாழ்கையில் செல்வம் என்ற ஆசையை தூண்டி சீரழிக்கவும்,இன்னொருவனின் மனைவியை ரசிப்பது தப்ப்ப்பே இல்லடா(ஆண்களா) இப்படி கேவலமான சிந்தனையை தூண்டிவிடுவதுதாங்க இந்த ஆடை குறைப்பு வேலை

என்ன சொல்வது? படத்தில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக, ஹீரோவில் ஆரம்பித்து கூட ஆடும் ஜீரோக்கள் வரை அத்தனை பேரையும் ஆங்காங்கே மேலாடை, கீழாடை இல்லாமல் வெறும் ஜட்டியில் ஆடவிட்டு, கன்னிகளை நல்ல வழியில் சிந்திக்க விடாமல், ஜொள்ளிகளின் ஆசையை தீர்க்கவும், இன்னொருத்தியின் கணவனை ரசிப்பது தப்பே இல்லைடி (பெண்களே) என்று கேவலமான சிந்தனையை தூண்டிவிடுவதும்படியாக படம் எடுத்திருக்கும் அத்தனை பேரையும் ஆண்கள் இனம் சார்பாக, வன்மையாக கண்டிக்கின்றோம்.

கண்ணியமான சிந்தனயைக் கொண்டவர்கள் இவ்வாரு பார்பதை வெருக்கிறார்கள். டேரக்டர்களே டேரக்டா மரத்தடியில் உட்கார்ந்து சிந்தியுங்க....(10 அரைகுரை பெண்களை பக்கத்தில் வைத்து இப்போது கதை,பாட்டு எழுதராங்களாமே)

நம்ம ஊர் directors எல்லாம் ஒரு தடவை heroine க்கு போடும் ஆடையை தன் வீட்டு பெண்களுக்கு போட்டு பார்த்திட்டு பிறகு heroine க்கு குடுத்தா சரியாய் வரும்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

வாழ்க்கையிலே ரீலீஸ் ஆன முதல் நாளே பார்த்த படம்னா இதை சொல்லலாம். பொங்கல் சாப்பிட்டு முடித்து விட்டு செரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும்போது தான் இந்த படம் ஞாபகம் வரவே போக முடிவு செய்தோம். போகும் முன்பே எல்லோரும் சொன்னார்கள் இது "" போலவே தான் இருக்கு. எதுவுமே மாற்றவேயில்லை என்று. சரி ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றோம். எனக்கோ போயும் போயும் விஜய் வெச்சு சங்கர் படம் எடுத்தாரா என்று ஒரு பக்கம். இருந்தாலும் இது விஜய் படம் மாதரியும் இல்லை சங்கர் படம் மாதிரியும் இல்லை.

இருந்தாலும் காமெடி என்ற பெயரில் சில நேரங்களில் நம்ப பாக்கியராஜ் படத்தில் வருமே "அண்ணன் காசை கீழே போட்டுட்டேன், அதை தேடுங்க" என்று தங்கைகளை தேட வைப்பாரே அதே போல் நானும் குழந்தைகளை அடிக்கடி திசை திருப்ப வேண்டியாதாயிற்று. இந்த படத்தில் பெண்களை விட ஆண்களுக்கு தான் ஆடை குறைப்பு மாதிரி இருந்தது. படத்தில் பாட்டில் மட்டும் பெண்கள் அரைகுறையாய் வந்த நிலைமை போய் இப்பொழுது ஆண்களும் இந்த போட்டியில் களமிறங்கி உள்ளனர். உங்களால் ஒரு பாட்டில் மட்டும் தானே இப்படி வர முடியும் எங்களை பாருங்கள் படம் முழுக்கவே இப்படி வர முடியும் என்று முகம் சுளிக்க வைக்கின்றனர். பெண்களை அரைகுறை ஆடையில் காட்டினால் ஒரு சோப்பில்ருந்து படம் வரை வியாபாரம் ஆகிறது. இது காலம் காலமாக இருந்து வரும் வியாபார தந்திரம். இப்பொழுது ஆண்களும் இப்படி வருகிறார்கள் என்றால் அதற்கென்ன அர்த்தம்?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆமாம் நானும் படம் பார்த்தேன்... பொதுவா வெளிநாடுகளில் பெண்கள் வெளியே வருவது நம்ம ஊர் சினிமா நடிகைகள் போடுவது போல தான்... அதனால் அது இப்போ ட்ரெண்டுன்னு ஆயிடுச்சு. ஆனா ஆண்கள் என்றால் எங்க வேணும்னா எப்படி வேணும்னா வரலாமா என்ன?? யாரா இருந்தாலும் மானத்தை மறைக்க ஆடை தேவை. இப்படி சங்கர் படம் எடுத்தது புதுசா ஒரு மட்டமான ட்ரெண்ட் கொண்டு வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்