கத்தரிக்காய் குழம்பு

தேதி: February 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (13 votes)

 

சின்ன கத்தரிக்காய் - 4
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
சாம்பார் பொடி (மிளகாய், தனியா கலவை 1:2) - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5 - 7
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டிக்கும் குறைவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு


 

கத்தரிக்காயை நான்காக நறுக்கி (பிரிக்காமல் காம்போடு வகுந்து வைக்க வேண்டும்) வைக்கவும். வெங்காயம் நறுக்கி வைக்கவும். புளியை அரை கப் நீர் விட்டு ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு சேர்த்து வறுக்கவும். அடுப்பை விட்டு எடுத்து சூடாக இருக்கும் போதே கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும். இதே போல் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தேங்காய துருவல் சேர்த்து வதக்கி கடைசியாக சாம்பார் பொடி சேர்த்து வதக்கி எடுக்கவும். இவை அனைத்தையும் ஆற வைத்து சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். நீர் விட தேவை இல்லை.
அரைத்த கலவையை கத்தரிக்காய் நடுவே வைக்கவும். வைத்து நன்றாக அழுத்தி விடவும் அப்போது தான் மசாலா வெளியே வராது. மிச்சம் கலவை இருந்தால் அப்படியே வைக்கவும்.
கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்தரிக்காய்களை போட்டு எல்லா பக்கமும் பிரட்டி விட்டு வதக்கி எடுக்கவும். கத்தரிக்காய் வேக வேண்டும், ஆனால் விட்டு போக கூடாது.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சுற்றி எடுக்கவும். கடாயில் மீண்டும் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த வெங்காய விழுது சேர்க்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி அரைத்து ஊற்றி வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும் போது மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விடவும்.
இதில் மீதம் இருக்கும் வறுத்து அரைத்த மசாலா, வதக்கி வைத்த கத்தரிக்காய், சிறிது நீர் விட்டு மூடி கொதிக்க விடவும்.
கத்தரிக்காய் மசாலாவுடன் கலந்து தூளின் பச்சை வாசம் போனதும் புளி கரைசல் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வர கொதிக்க விட்டு எடுக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

கத்தரிக்காய் கடைசி வரை விட்டு போகாமல் இருக்க வேண்டும். கரண்டி போடும் போது பார்த்து கிளறவும். உள்ளே வைக்கும் மசாலாவில் போடும் உப்பு மிக குறைவாக இருக்கட்டும், குழம்பிலும் உப்பு சேர்ப்பதால் கவனமாக சேர்க்கவும். அரைத்த மசாலாவில் தூள் வாசம் இருந்தால் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்த விழுதை வதக்கி எடுத்து ஸ்டஃப் செய்யலாம்.

அரைத்த மசாலா சிறிதேனும் எடுத்து வைக்கவும். அதையும் குழம்பில் கலந்து கொதிக்கும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும். வெங்காயம் தக்காளி அரைத்து சேர்ப்பதாலும், மிளகாய் வற்றல், தனியா வறுத்து அரைக்காமல் தூள் சேர்ப்பதாலும் குழம்பு ரொம்பவே ஸ்மூத் க்ரேவியா கிடைக்கும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி கூட ஒன்றிரண்டாக அரைத்து விடுவதால் சாப்பிடும் போது குழந்தைகள் எடுத்து வைக்க மாட்டார்கள். வாசமும் குழம்பில் நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையான குழம்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி நான் ஒரு தடவ எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு நம்ம அறுசுவை குறிப்பை பார்த்து செய்தென் ஆனால் சுதப்பி விட்டது...அதில் இருந்து இந்த குழம்பு பண்ணனும் நெனச்சாலே கொஞ்சம் பயமா இருக்கு. இப்பொ உங்க குறிப்ப பார்த்ததும் திரும்பவும் ஆசை வந்துடிச்சு ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு. இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம்னு தான் இருக்கேன் நான்...ஹும்..என்ன ஆக போகுதோ...

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

வனி, இந்த மாதிரி எண்ணெய் கத்தரிக்காயை தான் தேடிட்டு இருந்தேன். சூப்பர் குறிப்பு. ஆனா படத்தில் இருக்கும் கத்தரிக்காய் வயலன்ட் கலரா இருக்கே. கசப்பாவும் இருக்குமா?. இந்த கத்தரிக்காய் ஓகேவா? லைட் வயலட் கலர் கத்தரிக்காய் கசப்பு இருக்காது. இந்த மாதிரி ஒருமுறை வாங்கி சமையலையே கெடுத்துருச்சி. அதான் கேட்டுடேன். அடுத்தமுறை கத்தரிக்காய் வாங்கி முதல் வேலையா இந்த குறிப்பை தான் செய்யப் போறேன். என்னை வாழ்த்துங்க வனி ;) உங்களுக்கும் வாழ்த்துக்கள் :) தயிர்சாதம், சாம்பார் சாதம் சூப்பர் காம்பினேஷன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நனும் இதுவரை பல குறிப்புகள் ட்ரை பண்ணி எனக்கும் சரியாவே வரல. அதனால் எனக்கு பிடிச்ச மாதிரி நிறைய மாற்றங்களை ஒவ்வொரு முறையும் செய்து பார்த்து இந்த குறிப்பை கொடுத்தேன். இது எனக்கு ரொம்ப பிடிக்கும். இவரும் இது ரொம்ப டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னார். அதனால் தைரியமா ட்ரை பண்ணூங்க. :) கீழே சொன்ன குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க. குழம்பு ரொம்ப சுவையா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இந்க்க கிடைக்குறதே இந்த கலர் கத்திரிக்காய் மட்டும் தான். ஆனால் நீங்க சொன்னமாதிரி எப்பவும் கசந்தது இல்லை. இது இல்லன்னா இதுலையே ரொம்ப பெருசா இருக்க இன்னொரு வகை தான் அதிகம். எப்பவாது பச்சை கிடைக்கும், ஆனா ரொம்ப ஃப்ரெஷா இதுவரை பார்த்ததில்லை.

இந்த குழம்பு சுவைக்க முதல் அவசியமே பிஞ்சு கத்தரிக்காய் தான். கததரிக்காய் நல்லா இருந்தா குழம்பு சுவையா இருக்கும். அதனால் வாங்கும் கத்தரிக்காய் பிஞ்சாக அதே சமயம் நல்ல சுவை உள்ளதாக பார்த்து வாங்குங்க. விதை விதையாக இருந்தால் சாப்பிட நல்லா இருக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சுவையான குறிப்புன்னு பார்த்தாலே தெரியுது சீக்கிரமே செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன் அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

வனி அக்கா உங்களோட பப்பாளி அல்வா, காஞ்சிபுரம் இட்லி செய்து அவரிடம் நல்ல பெயர் வாங்கிட்டேன்., நாளைக்கு லன்ச்க்கு இந்த குழம்பு தான்., பார்க்கும் போதே சாப்பிடனும் போல ஆசையாக இருக்கு., வாழ்த்துக்கள்.,

Super. Unga recipe super, photos nalla vanthu iruku. Different recipe

வனி எனக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரொம்ப புடிக்கும் இது வரை இங்கே கடையில் தான் வாங்கி சாப்பிட்டு இருக்கேன் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன் இந்த முறையில் அடுத்த முறை ட்ரை பண்றேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மிக்க நன்றி. செய்து பார்த்து பிடிச்சிருக்கான்னு மறக்காம சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அந்த குறிப்பெல்லாம் செய்தீங்களா?? ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க, காத்திருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணி பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணுங்க... எனக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடிச்சுது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கண்ணை பறிக்குதுங்க நான் செஞ்சதே இல்ல இதுவரை எனக்கும் பிடிக்கும் கண்டிப்பா செய்துட்டு வந்து சொல்றேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

unga kulambai seidhu pathu ippodhan sapitta udane vandhu padhivu podren. Super ponga enaku romba puduchuruku. Yen hus saptutu romba nalla irukunu sonnanga. Thanks vani

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அன்பு அனு... அதுக்குள்ள செய்தாச்சா??? அப்படியோ நல்லா வந்ததுன்னு கேட்டதும் நிம்மதியா இருக்கு. ஏன்னா எனக்கு பல எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சுதப்புச்சு, அப்பரம் தான் நானா ட்ரை பண்ணி இந்த குறிப்பு கொடுத்தேன். பிடிச்சிருந்ததுல எனக்கு பெரும் மகிழ்ச்சி அனு. செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

a lot taste the kuzhambu

vanitha...superrecipie

Naseema Razak

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா