மாவு திரிக்கும் முறை & பிராண்டு

ஹாய்..அனைத்து வகை மாவுகளையும் திரிக்கும் முறை,பாதுகாக்கும் வழிகளையும்,எவ்ளோ திரித்தால் இத்தனை மாதம் வரும் என்றும், கடையில் என்றால் என்ன பிராண்டு உபயோகப்படுத்தறீங்கன்னு சொல்லுங்கப்பா..

கோதுமை ,தனியாவில் தொடங்கி புட்டு மாவு வரை..

எனக்கு அளவுலாம் சொல்ல தெரியாது... ஏன்னா நானே என் அம்மா செய்து கொடுப்பதை வாங்கி வந்து தான் காலத்தை ஓட்டுறேன் :) சாம்பார் பொடி, ரச பொடி, மாவு வகை எல்லாம் அம்மா தான் அரைப்பாங்க. எனக்கு தெரிஞ்ச சில விஷயம் மட்டும் இந்த இழை உள்ள போயிட கூடாதே யார் பதிவும் வராமன்னு சொல்லிட்டு போறேன்...

1. எந்த மாவு அரைக்கனும்னாலும் முதல்ல அந்த உணவு பொருள் நல்லா வெய்யிலில் காய்ந்திருக்கனும். நீர், அல்லது ஈர் தன்மை இருந்தாலோ அது சீக்கிரம் கெட்டு போகும்.

2. அரைத்த மாவையும் உடனே மூடி போட்ட மாத்திரத்தில் கொட்டி மூட கூடாது. பொடியோ, மாவோ அரைத்ததும் பேப்பர் போட்டு விரிச்சு மாவை நல்லா கிளறி விட்டு கொட்டி சூடு ஆற விட்டு தான் ஸ்டோர் பண்ணனும்.

3. மாவு அடிக்கடி அரைக்க முடியாம ரொம்ப நாள் ஸ்டோர் பண்ணி வைக்க “zandu tablets” என்று ஒன்று கடைகளில் கிடைக்கும். இதை சிறு சிறு துணியில் வைத்து மூட்டை போல் கட்டி 1 கிலோ மாவுக்கு 1 அல்லது 2 மாத்திரைகள் போட்டு வெச்சா கெடாது. இந்த மாத்திரை மற்ற தானிய வகையில் போடுவது போல் அப்படியே போடம துணியில் கட்டி தான் போடனும், இல்லன்னா அது மாவாகி இதோட கலந்துடும் வாய்ப்பு உண்டு. கூடவே மாத்திரைகளை சமைக்க எடுக்கும் முன் ஜாக்கிரதையா எடுத்துடனும். இது முழுக்க முழுக்க ஹெர்பல் என்றாலும் சாப்பாட்டில் கலந்துடாம இருக்குறது தான் நல்லது.

பிராண்டு என்றால்... நான் சில நேரம் வாங்கும் கோதுமை மாவு... பில்ஸ்பரி அல்லது ஆஷிர்வாத். இரண்டுமே நல்லா இருக்கு. ரவை எப்பவுமே நாகா டபுல் ரோஸ்டட் தான்... அது 1 வருஷம் வெச்சிருந்தாலும் எனக்கு பூச்சி வெச்சதில்லை, அதனாலயே எனக்கு ரொம்ப விருப்பம். மைதாவும் அப்படி தான்... நாகா பப்லி மைதா தான் எனக்கு பிடிச்சது. பரோட்டாக்கு ரொம்ப நல்லா வரும். அரிசி மாவெல்லாம் நான் வாங்கியதில்லை, வீட்டில் செய்வது தான். அதனால் பிராண்டு தெரியலங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயா

புட்டுக்கு மாவு அரைக்கும் போது பச்சரிசியை நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி சற்று ஈரம் இருக்கும்போதே மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். பின் நன்றாக சூடு ஆறியபின் டப்பாவில் போட்டு கை படாமல் எடுக்க வேண்டும். புட்டு, கொழுக்கட்டை இரண்டும் நன்றாக மெதுவாக இருக்கும்.

வாங்க... வனிதா மாத்திரை டிப்ஸ் கேள்விபட்டதே இல்லை.
வாங்க... காயத்ரி இடியாப்பத்திற்கு பட்டு போலவும்,புட்டுக்கு கரகரப்பாகவும் அம்மா திரிக்க சொன்னாங்க.இது மத்த எல்லா வகை அரிசி பண்டத்துக்கு சரிபடுமா?

சென்னையில் பெரிய கடையில் வாங்கினால் ஏ/சி என்பதால் அரிசி மாவு,அவல் சீக்கிரமாக பூச்சி,புழு வைக்கிறது. சிறிய கடைகளில் சுத்தமாக இருப்பதில்லை.

ஊரில் கணேஷ் ப்ராண்டு,பால்மர் ப்ராண்டு அரிசி மாவு உபயோகம்.இடியாப்பம்,புட்டு,களி,பணியாரம்,கொழுக்கட்டை என எதற்கும் ஒரே மாவுதான்.ஒரே கஷ்டம்..தூக்கி சுமப்பது.half day train travel.அரிசி மாவு திரித்தால் டேஸ்ட் இருக்குமா, 7 இன் 1 ஆக இருக்குமான்னு குழப்பம்.

எப்பவும் நாகா அல்லது அணில் ரவை.கோதுமை பில்ஸ்பெரி மட்டுமே. மைதா உபயோகமில்லை.கோதுமை நாமே திரித்தால் நல்லாருக்குமேன்னு சிந்தித்தன் விளைவு . ஆனால் எப்டி வாங்க,புடைக்க ஒன்னும் தெரியல போங்க. அம்மா திரித்து தரேன்னு சொன்னாலும் அதே தூக்கி சுமக்கற வேலைதானே.

கணேஷ் ப்ராண்டு சென்னையில் கிடைக்குமா?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்