8வது மாதம் blood & delivery problem

ஹலோ தோழிஸ், என் மனைவிக்கு இது 8 மாதம், blood டெஸ்ட் செய்ததில் HB குறைவாக உள்ளது (8 .2 ) HB அதிகமாக என்ன செய்ய வேண்டும் tablet கொடுதிருகிரர்கள்,
மேலும் முதலில் அவங்களுக்கு due date மார்ச் 25 கொடுத்திருந்தார்கள், ஆனால் முதல் குழந்தை சிசேரியன் என்ற ஒரே காரணத்தால், இப்போது மார்ச் 15 சிசேரியன் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏன் இரண்டாவது குழந்தை நார்மலுக்கு வெயிட் பண்ண கூடாதா? அதுவும் 10 நாள் முன் கூட்டியே சிசேரியன் செய்யவேண்டும் என்கிறார்கள்? நானும் ஏன் மனைவியும் மிகவும் பயந்து குழம்பியுள்ளோம், நீங்கள் தான் ஆலோசனை கூறவேண்டும்.

உங்க மனைவி நலமா??? கவலை வேண்டாம். ஹீமோக்லோபின் கர்ப்ப காலத்தில் குறைவது சகஜம் தான். அவங்க கொடுத்த மருந்தை தவறாம சாப்பிட சொல்லுங்க. கூடவே இரவில் ஒரு கப் பால் ஃபிக்ஸ் (அத்திப்பழம்) சேர்த்து கொதிக்க வைத்து கொடுங்க. பகலில் 2 பேரீட்ச்சை கொடுங்க. தினமும் மாதுளை ஜூஸ் அலல்து பழமாக சாப்பிட கொடுங்க. இது நிச்சயம் ஹீமோக்லோபின் கூட உதவும்.

டெலிவரி தேதி சிசேரியனுக்கு கொடுத்தது முதல் குழந்தை ஏன் சிசேரியன் ஆனது என்பதை வைத்தே சொல்ல முடியும். போன முறை ஏதும் பெரிய பிரெச்சனை ஆகி சிசேரியன் செய்திருந்தால் அது போல் இம்முறையும் நடக்க வாய்ப்பிருந்தால் நிச்சயம் சிசேரியன் செய்வார்கள், அதுவும் குறிப்பிட்ட தினம் வரை காத்திருக்காம செய்வாங்க... உதாரணமா குழந்தை எடை டெலிவரி நெருங்கும் போது ரொம்ப கூடிட வாய்ப்பு இருக்கு, இல்ல டெலிவரிக்கு ரொம்ப முன்பே பனிகுடம் உடைவது, ப்லீடிங் போன்ற பிரெச்சனை வர வாஇப்பு இருந்தாலும் இருக்கு, குழந்தையை சுற்றி உள்ள நீர் ரொம்ப குறைவா இருந்தா இருக்கு, இல்ல குழந்தை ரொம்ப சிறியது என்றாலும் இருக்கு.

அவஙக் ஏன் முன்பே சொல்லி இருக்காஙக்ன்னு கேளுங்க. இல்ல வெயிட் பண்ணி பார்க்கலாமான்னு கேளுங்க. டெலிவரி தேதிக்கு 1 வாரம் பின்பும் காத்திருந்து பண்றவங்க இருக்காங்க... ஆனா அதில் பாதி கேஸ் குழந்தை எடை கூடிடும். சிலருக்கு ப்லீடிங் போன்ற பிரெச்சனை ஆகி அவசர அவசரமா சிசேரியன் நடக்கும். நார்மல் சாதியமில்லாம போகும். எதுக்கும் நீங்க டாக்டர் ஆலோசனை படி கேளுங்க.

பயம் வேணாம்... குழந்தை ஆரோக்கியமாக பிறக்க எங்கள் பிராத்தனைகள். உங்கள் அன்பு உங்கள் மனைவியையும், உங்கள் குழந்தையையும் நல்லபடியாக உங்களிடம் சேர்க்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெளிநாடுகளில் தான் முதல் பிரசவம் சிசேரியன் என்றாலும் இரண்டாவது நார்மல் ட்ரை பண்ணுவாங்க இந்தியாவில் அதிகம் இல்லை அல்லது வனி சொன்ன காரணங்களும் இருக்கலாம்..10 நாள் முன்பே செய்ய சொல்ல காரணம் எப்ப வேணா பிரசவ வலி எடுக்கலாம் என்பதால் தான்.இன்கேஸ் பிரசவ வலியேவந்து நீங்க அடிச்சு புடிச்சு போய் சிசேரியன் செய்வதை விட இன்ன நாள் என்றால் ப்ரச்சனை இல்லை

உண்மையில் சிசேரியனுக்கு பின் நார்மலுக்கு வழி இருந்தாலும், சிசேரியனே செய்வது பேட்டர். ஏன்னா சிசேரியன் செய்த கருப்பை ரொம்ப வீக்கா இருக்கும். ஒரு குழந்தையை நார்மலாக புஷ் பண்ணும் சக்தி அதுக்கு குறைவு. அப்படியே பெற்றாலும், பின் நாளில் கருப்பை இறக்கம் போன்ற பிரெச்சனைகளை சந்திக்க வாய்ப்பு அதிகம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அதனால் தான் டாக்டர் ஆலோசனை படி தேதியை முடிவு பண்ணுங்கன்னு சொன்னேன். இதில் பயம் ஏதும் தேவை இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சங்கர்,

பெண்களுக்கு ஹீமோ குளோபின் அளவு 11.4 இருக்க வேண்டும் என்பார்கள். எனக்கும் பிரசவ காலத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைந்து 8.4 என்ற அளவில் தான் இருந்தது. இத்தனைக்கும் எனக்கு இரட்டை குழந்தைகள். டாக்டர்களும் மருந்து, மாத்திரைகளை சிபாரிசு செய்வார்கள். இருந்தாலும் நீங்கள் இயற்கையான முறையில் உணவை உண்டு ஹீமோ குளோபின் அளவை கூட்ட பாருங்கள். மாதுளம்பழம் கைமேல் பலன் தரும் அருமையான பழம். அடுத்த மாதமே நல்ல ரிசல்ட் தரும். இது இல்லாமல் நடுநடுவே ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிட செய்யுங்கள்.

எனக்கு சிசேரியனுக்கு சொன்ன நாளைவிட 15 நாட்கள் முன்பாகவே ஆபரேஷன் செய்து விட்டோம். எங்கள் வீடும், ஆஸ்பிட்டலும் தொலைவில் இருந்ததால் எமர்ஜென்சி நெருக்கத்தில் மிகவும் மோசமாகி விடக்கூடாது என்று, நாங்களே முன்கூட்டி சொல்லி ஆபரேஷன் பண்ண சொன்னோம். இப்போது அந்த குழந்தைகளுக்கு மூன்றரை வயதாகிறது. கடவுள் அருளால் நல்லபடியாகவே இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் நீங்கள் தான் உங்கள் மனைவியின் குழப்பத்தை களைந்து தைரியம் சொல்லவேண்டும். நீங்களே குழம்பி நிற்காதீர்கள்.பிரசவம் நல்லபடியாக முடிந்து தாயும்,சேயும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Ungal manaivikku irukum problem enakkum irunthathu. Enaku HB 6 than irunthathu nan nalla sapida arambichean(dates, iron tonic, fruits, juices, non veg items etc) athuku apparam increase ayiduchu. Unga wife nalla sapida sollunga. Music ketka sollunga. Manasa freeya vaika sollunga. Enakum 2nd baby 15 days munnadi eduka sollitanga. Because 1st pannina operation thaiyal, stomach la baby irukirathunala virivu kuduka arambikum, weight yera yera thaiyaluku pathipaghum. Enaku therinju oruthavangaluku 2nd ceasarean pannum pothu 1st skin layer arakum pothae baby vanthuruchu(7 layers) baby weight athigham aghi thaiyal vituruchu. Munnadi edukirathu nallathunu dr prescripe panna accept pannikonga. Ippa en baby 9 months nalla active irukan. Unga wife 1st delivery la thanni sathu kammiya irunthuchunu ceasarean pannangala?

ஆலோசனைகளுக்கு நன்றி,
இப்போதுதான் சிசேரியன் தான் நல்லது என்ற தெளிவும், தைரியமும் வந்துள்ளது.
முதல் குழந்தைக்கு பிரசவ வலி வரவில்லை, மற்றும் குழந்தை எடை 4 கிலோவாக இருந்தது, அதனாலதான் சிசேரியன் செய்தார்கள்.
நீங்கள் சொன்னமாதிரிதான் தினமும் டேட்ஸ் காலை, மாலை இரண்டுவேளை தருகிறேன். மாதுளையும் கொடுத்துவருகிறேன், அத்திபழம் எங்கு கிடைக்கும் என்று தேரியவில்லை கிடைத்தால், அதுவும் வாங்கிகொடுக்கிறேன்.
நேற்றுமுதல் (33 Weeks) என் மனைவிக்கு அடி வயிறு, கீழ் இடுப்பு எழும்பு வலி என்கிறார்கள், குனிந்து நிமிர முடியவில்லை என்கிறாங்க, இது எதனால் ஏற்படுகிறது, இது நார்மல் தானா, இதற்க்கு என்ன செய்வது? பிரசவ வலி இதுபோன்று ஏற்படுமா? என் மனைவிக்கு பிரசவ வலி என்றால் எதுவென்றே தெரியாதாம்.

வலி தாங்கும் படியாக இருந்தால் பரவாயில்லை... அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள். ஃபிக்ஸ் டிபார்ட்மண்டல் ஸ்டோர்களில், நட்ஸ் விற்கும் கடைகளில் எல்லாம் கிடைக்கும். சில நேரம் தேனில் ஊற வைத்ததும் கிடைக்கும். பயன்படுத்தலாம். பிரச வலி என்பது பீரியட்ஸ் நேரத்தில் வரும் அதே வலி தான்... சற்று அதிகமாக ஒரே போல் இடைவெளியில் விட்டு விட்டு வலி எடுக்கும். நிச்சயம் வித்தியாசத்தை உணர முடியும். ஏற்கனவே சிசேரியன் என்பதால் வலியை தாங்கி கொண்டு இருக்க வேண்டாம்... டாக்டரை பாருங்க. சில நேரம் சூடு அதிகமானா கூட வலி வரும். ஆனா அதை டாக்டர் சொல்லிட்டா நிம்மதியா இருக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரசவத்தை நெருங்கும் காலத்தில் ஏற்படும் எந்த உபாதையை இருந்தாலும் டாக்டரிடம் செல்வதே உகந்தது......நீங்கள் மருத்துவமனைக்கு போக கூட வேண்டாம்...கிளினிக்குக்கு போன் செய்து எனக்கு இப்படி செய்கிறது என்ன செய்வது என்று கேட்டாலும் எமர்ஜென்சியாய் இருந்தால் வர சொல்வார்கள் இல்லையெனில் அவர்களே தகுந்த ஆலோசனை வழங்குவார்கள் ....கவலை வேண்டாம்..
சிசேரியன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி முடிந்ததும் தாமதிக்காமல் சிசேரியன் செய்வது நல்லது...எனக்கு குழந்தையின் வளர்ச்சி முடிந்தும் அடுத்த வாரம் பாத்துக்கலாம்னு சொன்னார்கள்...ஆனால் இரவு இரண்டு மணியளவில் பனிக்குடம் உடைந்து ஆஸ்பிடலில் அட்மிட் ஆனேன்..அவசரமாக ஆபரேசன் நடந்தது....முன்பே செய்திதிருந்தால் இந்த அவஸ்தை தேவை இல்லை .....நடுஇரவில் டிரைவர் வந்ததால் நான் ஆஸ்பிடல் போக முடிந்தது இல்லையெனில் நினைக்கவே நடுங்குகிறது.....நீங்கள் இதையெல்லாம் தவிர்த்து தக்க பாதுகாப்புடன் இருந்து நல்லபடியாய் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்யுங்கள்...வாழ்த்துக்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நேற்று வலிக்காக டாக்டரிடம் சென்றிருந்தோம், HB குறைவாக இருப்பதாலும், சிசேரியன் போது போடப்படும் மயக்க ஊசினாலும் தான் இதுபோன்று வலி வருமாம். வலிக்காக இன்ஜெக்சன் எதுவும் போடகூடாது என்று கூறிவிட்டனர்.
மேலும் குழந்தை எடை குறைவாக இருக்கிறது என்றும் கூறி உள்ளார் (32weeks - 2Kgs). பிரசவத்திருக்கு இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது அதற்குள் HB யும், குழந்தை எடையும் கூடனுமாம்.

இது பிரெச்சனை இல்லை... நீங்க மாதுளை, பேரீச்சை, அத்தியை விடாம பிடிங்க. நிச்சயம் கூடும். அனுபவத்தில் சொல்றேன்... 7வது மாதம் முடியும் சமயம் என் மகள் எடை 1.5 கிலோ. டாகடரெல்லாம் ரொம்ப சின்ன குழந்தைன்னு சொன்னாங்க... அம்மா வீட்டில் வந்து நல்லா சாப்பிட ஆரம்பிச்சு டெலிவெரி அப்போ என் மகள் 3.2 கிலோ. பயமே வேணாம்... கடைசி 3 மாதம் நல்ல எடை கூடும். 3 கிலோ இருக்க குழந்தைங்க கூட டெலிவரி 1 வாரம் தள்ளி வெச்சு பார்த்தா 4 கிலோ ஆயிடும். கவலை வேண்டாம். நல்ல சத்தான உணவு கொடுங்க. ஆரஞ்சு ஜூஸ் ஒரு முறை, மாதுளை ஜூஸ் ஒரு முறைன்னு நிறைய் ஜூஸ் கொடுங்க. ஸ்ப்ரவுட்டட் பச்சை பயிறு குடுங்க... நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்