பப்ஸ் செய்வது எப்படி?

நான் பப்ஸ் செய்யலாம் என்று இருக்கிறேன். அதற்கு கண்டிப்பாக டால்டா சேர்த்து தான் செய்ய வேண்டுமா? அதற்கு பதில் வேறு ஏதெனும் பயன் படுத்தி செய்யலாமா? தெரிந்தால் சொல்லுகளேன் Advance thanx

பேக்கரிகளில் தயாரிக்கப்படும் அனைத்து வகை பப்ஸ்களும் வனஸ்பதி சேர்த்துதான் செய்யப்படுகின்றன. வனஸ்பதிக்கு பதிலாக வேறு எதையேனும் முயற்சித்து, யாரேனும் வெற்றி கண்டார்களா என்பது தெரியவில்லை. Bake செய்வதற்கு என்று தனித்தரத்துடன் வனஸ்பதிகள் (மார்கரீன்) கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். லில்லி மார்கரீன் (Lily Margarine) என்று பப்ஸ் க்கென தனிரக வனஸ்பதி கிடைக்கின்றது. இது சிறிய அளவில் கடைகளில், சூப்பர் மார்கெட்களில் கிடைக்குமா என்பது சந்தேகமே.

பப்ஸ் செய்முறை பழையத்தளத்தில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. விரும்பினால் பார்வையிடவும்.

<a href="http://www.arusuvai.com/baking/puffs.html" target="_blank"> பப்ஸ் செய்முறை </a>

என்னுடைய கேள்விக்கு உடனடியாக பதில் எழுதியத்திற்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக செய்து பார்த்து பதில் எழுதுகிறேன்

நீங்கள் கூறியிருந்தப்படி நான் பப்ஸ் செய்தேன். ஆனால் கடைகளில் இருப்பதுபோல் இல்லை. மிகவும் மெறு மெறுப்பாக உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் அதில் இருந்தபடி தான் செய்தேன். விளக்கம் கூறுங்களேன்

நாங்கள் விளக்கப்படங்களுடன் கொடுத்துள்ள பப்ஸ் செய்முறை, பேக்கரி தொழிலில் நீண்ட வருடங்கள் அனுபவம் வாய்ந்த, நகரில் பிரபலமான பேக்கரியில் இருந்து பெறப்பட்டது. அவற்றைப் படங்கள் எடுத்தது நானே. எனது கண்முன்னால் செய்யப்பட்டவை அவை. அளவுகளும் மிகச் சரியான அளவுகள்தான். பேக்கரி தொழிலில் அளவுகள்தான் மிக முக்கியம். நீங்கள் கேக், பிஸ்கட், பப்ஸ் செய்வது குறித்து எந்த பேக்கிங் மாஸ்டரைக் கேட்டாலும் அளவுகளைத் துல்லியமாகச் சொல்வார்கள். தண்ணீர் சேர்ப்பது முதற்கொண்டு அளவுகள் மிகத் துல்லியமாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரே மாதிரியான output கிடைக்கும்.

உங்களது பிரச்சனையை அந்த பேக்கரி மாஸ்டரிடமே கேட்டேன். அவர் காரணங்களைப் பட்டியலிட்டார். இதில் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் என்றார். முதலில் மாவு பிசைதல். நீங்கள் செய்முறைப் படங்களில் பார்த்தாலே தெரியும். மாவு பிசையும் போது எப்படி இருக்கின்றது. பிசைந்த பின்பு எப்படி இருக்கின்றது என்று. அந்தப் பதத்திற்கு இருக்க வேண்டுமாம். இதற்கு கைகளால் பிசைந்தால் கடினம். இயந்திரம் மூலம் பிசைதல்தான் சிறந்தது என்றார். அடுத்து மார்கரீன்(Margarine). தரமான மார்கரீனைப் பயன்படுத்த வேண்டும். சாதாரண வனஸ்பதி இதற்கு சரிவராது. நீங்கள் பயன்படுத்தியது என்னவென்று தெரியவில்லை. அடுத்ததாக மாவினை விரித்தல். இதனையும் இயந்திரம் கொண்டு செய்தால்தான் ஒரே மாதிரியான அளவில் விரிக்க இயலும். மாவை விரித்து, மீண்டும் மடக்கி, இவ்வாறு நான்கு மடிப்புகளாகச் செய்யவேண்டும். இதையும் கைகளால் செய்யும் போது அவ்வளவு சரியாக வராது என்றார். இறுதியாக, இதனை சாதாரண ஓவனில் செய்தால்தான் நன்றாக வரும். மைக்ரோவேவ் ஓவனில் அவ்வளவு நன்றாக இருக்காது என்றார்.

கடைகளில் கிடைப்பது போல் output கிடைக்க வேண்டுமெனில் அவர்கள் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களையும் நாம் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் போல் இருக்கிறது. மொறுமொறுப்பு இருப்பது தவறில்லை. bake செய்யும் நேரத்தையும், வெப்ப அளவையும் சற்றுக் குறைக்கலாம். கடைகளில் உள்ளது போல் layer layer ஆக வந்ததா? சுவை எப்படி இருந்தது?

முதலில் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் உங்கள் நேரத்தை செலவழித்து பதில் எழுதியதற்கு மறுபடியும் நன்றி.

நான் செய்த பப்ஸில் margarine சேர்த்து இருந்தேன். microoven செய்யவில்லை oven தான் செய்து இருந்தேன். பப்ஸ் நன்றாக இருந்தது. but laylayra வரவில்லை. நான் செய்த முறையில் தான் தவறு இருக்க வேண்டும். மறுபடியும் ஒரு முறை try செய்து பார்க்கிரேன். மிக்க நன்றி.

மாவு பிசைய்யும் இயந்திரம் நம் நாட்டில் எங்கு,எந்த விலைகலில் கிடைக்கிறது?ஃபிரான்ஸில் ,20000,அல்லது 30000ரூபாய்க்கு தரமான இயந்திரம் கிடைக்கிறது,நம் நாட்டில் குறைந்தவிலையில் தரமானதாக கிடைத்தால் வாங்கலாம் உடன் பதில் தருவீற்களா?மிக்ஸி கிரைன்டெர் போன்ற பொருட்க்கள் நம் நாட்டுக்கு நிகர் இல்லை இங்குள்ள மிக்ஸியில் இஞ்சி பூண்டைக்கூட விழுதாக அரைக்க முடியவில்லை அதனால் தான் மாவு பிசைய்யும் இயந்திரம் வீட்டு உபயோகத்திர்க்கு ஏற்றார்ப்போல் கிடைக்கிறதா?தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்பு சகோதரி ரஸியா அவர்களுக்கு

வீட்டு உபயோகத்திற்கு ஏற்றார்போல் சிறிய வகை இயந்திரம் சில காலங்களுக்கு முன்பு ஒரு Trade Fair ல் பார்த்தேன். கம்பெனி குறித்த தகவல்கள் என்னிடம் இல்லை. பெரிய அளவிலான (ஹோட்டல்ஸ், பேக்கரிக்கு உகந்த) இயந்திரங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் நிறைய உள்ளன. உங்கள் தேவைக்கேற்றார்போல் இயந்திரம் உள்ளதா என விசாரித்து வைக்கின்றேன். நீங்கள் இந்தியா வந்தவுடன் தெரிவிக்கின்றேன். எப்போது எனது இல்லத்திற்கு வருவீர்கள்?

தங்கள் உடன் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா!நீங்கள் விசாரித்துவையுங்கள்,மேலும் நாகையில் எங்களுக்கு பெரிய விருந்து அடுத்த வாரம் காத்திருக்கிறது,(சமீபத்தில் என் மாமா மகள் மருமகளாக நாகைக்கு வந்திருக்கிறாள் மாப்பிள்ளை வீட்டார் தரும் விருந்தை என் வருகைக்காக காத்திருந்து செய்கிறார்கள்° அதன் சமையம் நாகைக்கு வர நேரிடும் இருந்தாலும் நான் அங்கு வந்த பிறகு தான் நேரத்தை சரியாக சொல்ல முடியும் பின்பு நேரில் பார்ப்போம்!

நலமா? ஊருக்குப் போகும் உற்சாகம் தங்கள் எழுத்திலேயே தெரிகிறது. ஊர் போய் வந்ததும் கல் ஒட்டுவதைப்பற்றி தெரிவிக்கவும். தங்களுக்கு கொடிக்கால்பாளையமா?
நன்றி.

எனக்கு திருவாரூர் பிறந்த ஊர், என் அம்மா ஊர் கொடிக்கால்பாளையம் எனது பெரியம்மா ஊர்,எனது தகப்பனார் ஊர் கூத்தூர் ஆக எனது ஊர் கூத்தூர்,மேலும் நாங்கல் இந்தியா போய் 4 வருடமாகிவிட்டது அதனால் உண்மையில் சந்தோசமாக இருக்கிரது இன்ஷா அல்லாஹ் நாங்கள் நல்லபடியாக போய் திரும்ப அல்லாவிடம் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லஹ் ஆகஸ்ட்டில் திரும்புவோம் பிறகு பார்ப்போம்

மேலும் சில பதிவுகள்