பான்புகியோ பஜ்ஜி

தேதி: February 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பான்புகியோ(Bread fruit)- 10 ஸ்லைஸ்
கடலை மாவு- 1/2கப்
அரிசி மாவு- 1மேசைக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/4தேக்கரணி
சோடா மாவு- 1பின்ச்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு


 

ப்ரெட் ஃப்ரூட் ஐ தோல்நீளவாக்கில் குறுக்கே வெட்டி அதை மீண்டும் நீளவாக்கில் குறுக்காக வெட்டவும்.
இதை தோல் நீக்கி மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டவும்.
எண்ணெய், ப்ரெட் ஃப்ரூட் தவிர மெற்ற எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
ஒவ்வொன்றாக பஜ்ஜி கலவையில் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சூடாக டீ டைம் ஸ்னாக் ரெடி


மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டினால்தான் பஜ்ஜியில் காய் முழுவதுமாக வெந்து இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அட! கலக்கல் குறிப்பு கவி. ஈரப்பலாக்காய் எங்க வீட்டு ஆல்டைம் ஃபேவரிட். அப்பிடியே பொரிச்சு சாப்பிடுவேன். பஜ்ஜி பண்ணணும் என்று எப்பவும் தோணினது இல்லை. ட்ரை பண்ணணும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா! இந்த காயை நான் சுத்தமாக மறந்துட்டேன். இங்கே எப்பவாவதுதான் கிடைக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா இதை விதம் விதமா செய்வாங்க. வனி ரெசிப்பியை பார்த்ததும் ஞாபகம் வந்திடுச்சு! ஒருவாட்டி டேஸ்ட் பண்ணினவங்க எல்லோருக்குமே ரொம்ப பிடிச்சுடும். சும்மா தணலில் போட்டு சுட்டு சாப்பிட்டாலே சுவையா இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!