முதல் கல்யாண நாள்

friends, அடுத்த வாரம் எங்களோட 1st wedding anniversary வருது, அதை எப்படி கொண்டாடலாம்னு Idea கொடுங்கப்பா..... அப்படியே உங்க முதல் கல்யாணநாளை எப்படி எல்லாம் celebrate பண்ணிங்கனும் சொல்லுங்க....

முதல் திருமணநாளை சந்தோசமாக கொண்டாட வாழ்த்துக்கள்.

அன்னிக்கு கோவிலுக்கு போய்ட்டு வரலாம்,கணவருக்கு பிடிச்ச சமையலை செய்து அசத்தலாம்,அவருக்கு பிடித்தமான கிஃப்ட் ப்ரசண்ட் பன்னலாம்,

என்னோட திருமணநாளுக்கு இதான் செய்தேன் அம்மா,அப்பா வந்தாங்க வடை,பாயாசத்தோட சமையல்,காலையிலயே கோவில்,மாலை சினிமா,இரவு ஹோட்டலில் டின்னர்.என்னவர் எனக்கு புடவை வாங்கிதந்தார்.நான் அவருக்கு சர்ட் வாங்கி தந்தேன்.இதுதான் ஒவ்வொறு திருமணநாளுக்கும் வழக்கமா தொடருது :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அப்பாடா நீங்க பதிவு போட்டுடீங்களா ,,,romba thanksnga என்ன பன்னலாம்னு யோசிச்சு வைநு சொல்லிட்டு அவங்க office போய்ட்டாங்க... நான் இங்க மண்டையை உருட்டிட்டு இருக்கேன்.. அன்(காதலர்)பர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு..

உங்க முதல் கல்யாண நாளுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....
நீங்க உங்க கல்யாண நாளை ஏதாவது ஒரு ஹில் ஸ்டேஷன் போய் கொண்டாடலாம்... ரொம்ப நல்லா இருக்கும்....
இது மாதிரி ஹாலிடேஸ் போகும் போது ஒரு அற்புதமான தனிமை கிடைக்கும்...... சூப்பரான கிளைமேட்டை அனுபவிச்சுக்கிட்டு அப்படியே உங்க ஒரு வருட காலத்தில் நடந்த இனிமையானா தருணங்களை அசைபோட்டு பாருங்கள் அதில் இருக்கும் இன்பமே அலாதி...... கனவணன் மனைவி இருவருக்குள்ளும் மன நெருக்கத்தை இது அதிகரிக்கும்..... :)

ஹாய்.என் முதல் கல்யாண் நாளின் போது டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில் இருந்தேன்.பாப்பா ஐசியூ.சிறிய பிரச்சனை குணமாக ஆரம்பித்த சமயம்.ஹில் ஸ்டேஷன் ஐடியா இருந்தது.அது ஐசியூ ஏ/சி யானது :-) .ஆனால் நா ஆஸ்பத்திரிக்கு டெலிவரிக்காக அட்மிட் ஆவேன்னு எதிர்பார்த்தால கிஃப்ட் 1 மாதம் முன்னாடியே வாங்கி வச்சு அங்கேயே பாப்பா கையால கொடுத்தேன். சித்தி பாயசம்,சாப்பாடு கொண்டு வந்தாங்க.இவர் வெட்டு வெட்டு வெட்டினாருப்பா..நான் பூண்டு ரசம் வச்சிகிட்டு முறைச்சிட்டு நின்னேன்.அன்னிக்கு நைட்டே டாக்டர் நான்வெஜ் சாப்பிடலாம்னு சொன்னதால KFC treat..parcel...என்ன எங்க 100வது நாளையே நாங்க கேக் வெட்டினோம்னு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.இந்த மார்ச்15 எங்க 3 வது கல்யாண் நாள்.
இது உங்களுக்கு.நீங்க கொடுக்கர கிஃப்ட் மறக்கமுடியாததாக இருக்கணும்.பாப்பா படம் வர்ற மாதிரி.இனி அதுதானே எதிர்பார்ப்பாக இருக்கும்.அவருக்கு பிடித்த கேக் வெட்டுங்க.அது மாதிரி இன்னொன்னு கல்யாண் நாள் முடியற நேரத்துல அதாவது நைட் படுக்க போறத்துக்கு முன்னாடி திரும்பவும் 2 வது ச்ர்ஃப்ரைஸ் கிஃப்ட்.கண்டிப்பாக கோயில்,பெரியவங்க ஆசிர்வாதம் சேர்த்துகோங்க.முடிந்தால் 1 கிராம் தங்க காயினை தாலியில் கோர்த்துகோங்க.
உங்க முதல் கல்யாண நாளுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்