குழந்தை சாப்பிட என்ன செய்ய வேண்டும்???

அன்பு தோழிகளே என் மகளுக்கு 6 மாதம் முடிந்து 7வது மாதம் தொடங்கிவிட்டது,நான் இது வரை தாய்ப்பால் மட்டும் தான் குடுத்து வந்தேன் ஒரு 15 நாட்களாக cerelac குடுக்கிறேன் அது அவள் விரும்பிதான் சாப்பிடுகிறாள்,ஆனால் இப்பொழுது 10 நாட்களாக சோறு கஞ்சி,வாழைப்பழம் பாலில் மசித்தது,இட்லி பருப்பில் மசித்தது,பருப்பு தண்ணீர்,எதை குடுத்தாலும் 1 வாய் கூட வாங்க மாட்டேங்குறாள்,கட்டாயபடுத்தி வாயில் வைத்தாலும் வாந்தி எடுப்பது போல் செய்கிறாள்,Cerelac கூட இப்பொழுது தினமும் குடுத்தால் சாப்பிட மாட்டேங்குறாள்,2 நாட்களுக்கு 1 முறை குடுத்தால் சாப்பிடுகிறாள்.

அவள் விரும்பி சாப்பிட நான் என்ன செய்ய வேண்டும்,ராகி பவுடரை கூழ் காய்ச்சி வெல்லம் சேர்த்து குடுத்தேன்,4 ஸ்பூன் சாப்பிட்டால் ஆனால் 4 நாட்களாக கருப்பு தூள் சேர்த்து மலம் கழித்தால்,அதனால் குடுப்பதை விட்டு விட்டேன்.நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து உதவுங்கள் தோழிகளே

ராகியை நல்லா தன்னியில் கலக்கி வடிகட்டி கொஞ்சம் தனியா வைத்தால் அடியில் பால் போல் இருக்கும் மேலுள்ள தன்னீரை கொட்டி விட்டு useபன்னுங்க ராகியை வடிகட்டாமல் கொடுத்தால் மலம் கருப்பாகத்தான் போகும் கொஞ்சமாக முயர்சிப்பன்னுங்க்என் பயனும் அப்படிதான் இருந்தான் போகபோக சரிஆகிடும்

வாழ்க வளமுடன்

உப்பு சுவை பிடிக்குதான்னு பாருங்க ,கொஞ்சம் பிரேக் விட்டு இந்த சாப்பாட்டை தொடருங்க .1 தடவை அப்படிதான் இருக்கும்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மஞ்சு எப்படி இருக்குறீங்க,
வாரம் ஒரு உணவு என்று புதிதாக குடுத்து பாருங்கள். எடுத்த உடனே எந்த உணவையும் டக்குனு சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். போக போக சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். வேற வேற டேஸ்டில் குடுத்து பாருங்கள். ராகியை வடிகட்டி குடுத்து பாருங்கள். ராகி சாபிடரதால stool அந்த மாதிரி தான் போகும். ஏழு மாதம் தானே கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட பழகி விடுவாள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்