எலுமிச்சை சேவை

தேதி: July 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

திடீர் சேவை - 200 கிராம் பாக்கெட்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கீறிய பச்சைமிளகாய் - 2
மிளகாய்வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் சேவையை எடுத்துக் கொள்ளவும். சேவை மூழ்கும் வரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும். ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் பின் நீரை வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்வற்றல் போட்டு வெடித்ததும் பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின் துருவிய தேங்காய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, வேகவைத்த சேவை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்