உங்களுக்கு தெரியும உலகத்தை பற்றி

ஹாய் தோழிகளே,

எல்லோறுக்கும் வணக்கம் நான் இங்குள்ள எல்லா பதிவுகளையும் படித்துள்ளேன். எனக்கு நெடுநாட்களாக ஒரு சந்தேகம். உலகம் எப்படி தோன்றியது எந்தெந்த சென்சுரியில் (Century) யார் யார் வாழ்ந்தார்கள் இது போல் நிறய நிறய சந்தேகங்கள் இதற்க்கு தீர்வு எங்கே தேடுவது, எப்படி தேடுவது என்று தோழிகள் உதவ வேன்டும். உங்களிள் நிறய பேருக்கு நிரய விஷயங்கள் தெரியும். அதை இங்கே பகிர்ந்து கொண்டால் எனக்கு உபயோகமாக இருக்கும். உஙளுக்கு தெரிந்த புத்தகங்கள் எனக்கு அரிமுகபடுத்துங்கள், நான் என்ன கேட்கவருகிறேன் என்று புரிந்திறுக்கும் என்று நம்புகிறேன். ஆதி வாசிகள் யார் எப்படி தோன்றினார்கள், நாடு எப்படி பிரிக்கப்பட்டது, சட்டம், ஒழுங்கு, மின்சாரம், etc எனக்கு இங்கிலிஷ் நல்ல படிக்க வரும் ஆனால் அற்தம் புரிவது கடிணம், ஸாதரண பேச்சு வழக்குப் புரியும், பொதுஅரிவில் புஞ்சயம் (zero), எனக்கு புரியும் படி எதேனும் நல்ல தமிழ் புத்தங்களை கூறுங்கள் தோழிகளே (Always welcome your own ideas)

புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுக்க ஆர்வமா... அதுவும் நல்ல விஷயம் தான்... இங்கையே யாராவது அவங்களுக்கு தெரிஞ்ச தகவலை பகிர்ந்து கொண்டாலும் எல்லாரும் தெரிஞ்சுக்க நல்ல பயனுள்ளதா இருக்கும்.

புத்தகங்கள்... நான் அதிகம் படிப்பதில்லை... ஆனா என்னவருக்கு இதெல்லாம் ஆர்வம் அதிகம், அவரை கேட்டு சொல்றேன் உங்களுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தெரிந்தவர்கள் வந்து பதில் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்

உமாகனேசன்.... நல்ல முயற்சி தோழி... நீங்க கூகிள் சர்ச்ல் "புவியியல்" நு டைப்பண்ணி பார்த்தீங்கன்னா புவியியல் விக்கிபீடியா வரும். அதில் பாருங்க. தலைப்பு வாரியாக அழகாக கொடுத்திருக்காங்க. ரொம்ப இன்ரஸ்ட்டிங்கா இருக்கும். எனக்கும் நம்முடைய பழமை குறித்தும் தோற்றம் குறித்த மிக்க ஆர்வம். உங்களுடைய முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் தோழிகளே,

எல்லோருக்கும் வணக்கம் கூடவே நன்றி என்னுடைய தெடுதலுக்கு அதரவு அளித்த அனைத்து நல்லுள்ளுங்களுக்கு மிக்க நன்றி.. இன்னும் உங்களிடமிருந்து நிறய எதிர்பார்க்கிரேன் தெரிந்தவர்கள் என் தெடுதலுக்கு விடை கூறுங்கள்..

மிக்க நன்றி.. இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிரேன். நீங்கள் கூறிய படி கூகுலில் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை என்ன தலைப்பு என்று தெளிவாக கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும்.. சிரமத்திற்கு மண்ணிக்கவும். நீங்கள் படித்த இனையதளத்தின் பெயர் (Website name) அல்ல்து நீங்கள் தேடிய வார்த்தைகள் (Google search words spelling)..

பிரியா சொன்னதை (புவியியல்) காப்பி பண்ணி கூகுளில் போடுங்கள். உங்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும்.

என் அறிவு கண்ணை திறந்ததிற்கு நன்றி தோழி என் தேடளுக்கு ஒரு ஓளி கொடுத்துவிட்டிற்கள்.. நன்றி தோழி

உங்க நன்றியெல்லாம் ப்ரியாவிற்கு தான். அவங்க புரியும்படி தெளிவாக பதில் கொடுத்துட்டாங்க.

மேலும் சில பதிவுகள்