weakly positive

அன்பார்ந்த தோழிகளே ,

எனக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன . திருமணத்திற்கு முன்னர் எனக்கு இர்ரெகுலர் பிரிட்ஸ் இருந்தது.திருமணத்திற்கு பின்னர் மாத மாதம் சரியாக பிரிட்ஸ் வருகிறது .மேலும் கடந்த வருடம் laproscopy செய்தேன் .இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போய் உள்ளது 48 நாள் .கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் டாக்டரிடம் சென்று urine டெஸ்ட் பார்த்தபோது weekly positive என்று கூறினார் .மேலும் 44 வது நாள் நானாக பார்க்கும் போது நெகடிவ் காட்டியது.இன்னும் எனக்கு periods வர வில்லை so ப்ளீஸ் தோழிகளே விவரம் அறிந்தவர்கள் கருத்து கூறவும்

தோழி எனக்கு ஒரு tube பிளாக் னு சொல்லிருகாங்க .இன்னொரு tube (left) limited peritoneal spill. என்று சொல்லி இருக்காங்க .tube ரொம்ப சின்னதா இருக்காம் .அதனால் நார்மல் கன்சீவ் ரிஸ்க் னு சொன்னங்க .but இன்னொரு திர.ஒரு tube நல்ல இருக்கு .நார்மல் ஆகலாம் என்று சொன்னங்க.இப்போ கூடவீக்லி பாசிடிவ் னு காண்பித்தது .இப்போ நெகடிவ் னு டேபில்ட் கொடுத்து இருக்காங்க .date வந்ததும் வர சொன்னங்க .யுய் பண்ணலாம்னு சொல்லுறாங்க .என்னவரும் சரின்னு சொல்லிட்டார் .மேல சொன்னது இப்போ எடுத்த hsg ரிப்போர்ட் .நான் என்ன செய்ய .என்னக்கு உறவினர் சப்போர்ட் கிடையாது .என்னவர் மட்டும் தான்.அதுக்குதான் அவரை கஷ்டபடுத்த விருப்பம் இல்லை .அதனால் தான் அறுசுவை தோழிகளிடம் கேட்கிறேன் .iui செய்தால் சான்ஸ் உள்ளதா அல்லது வேறு சிகிச்சை உள்ளதா plse தோழிகள் உங்கள் சகோதரி போல நினைத்து பதில் கூறுங்கள்.

நோர்மல் pregnancy ரிஸ்க் ஞரப்போ iui தான் பண்ணுவாங்கப்பா...
IUI ஆறு தடவ வரைக்கும் ட்ரை பண்ணலாம்.அதுலயும் conceive ஆகலன்ன கூட IVF ,இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கு.
நீங்க எதுக்கு பயபடுறீங்க...?உறவினர்கள் சப்போர்ட் ல்லாம் எதுக்கு எதிர் பாக்குறீங்க...இது ஆபரேஷன் லாம் இல்ல..உங்க husband க்கும் எந்த கஷ்டமும் இருக்காது.ஆனா அதுக்கு முன்னால ரெண்டு டாக்டர் வேற வேற ஒபினியன் கொடுக்கறதால இன்னொரு டாக்டர் consultation / opinion எடுக்கறது நல்லது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

iui ம் நார்மல் மாதிரிதானே கோமதி .

நோர்மல் pregnancy தான்பா...அதாவது இத வந்து செயற்கை கருத்தரிப்பு முறைன்னு சொல்லுவாங்க.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நோர்மல் pregnancy ரிஸ்க் ன்னு நீங்க போட்டதையே நான் use பண்ணின்னேன்.நீங்க பயந்துடாதீங்க...அதாவது tube blokage ல்லாம் இல்லாம கூட சிலருக்கு (பலருக்கு) குழந்தை உண்டாவது தள்ளி போகலாம்.அப்போ இத suggest பண்ணுவாங்க.அந்த மீனிங் ல தான் சொன்னேன்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

தோழி iui இல் சாத்தியம் என்றால் ஏன் நார்மல் ஆகவில்லை .என் கணவருக்கு செமன் டெஸ்ட் நன்றாக உள்ளது .iui கணவரின் விந்தணுவில் பிரச்சனை என்றால் தானே iui .இல்லையா .என்னிடம் உள்ள பிரச்சனைக்கு iui சாத்தியமா ?plse எனக்கு விளக்குங்கள் தோழி

ராஜப்ரபா...IUI செய்யலாம்னு டாக்டர் சொன்னங்கள இல்லையா...என்னா முந்தின பதிவுகள் ல எல்லாம் நீங்க கணவர் சொன்னதாகவே சொல்றீங்க...அப்புறம் நெகடிவ் ன்னு எதுல வந்தது?blodd report லையா...இல்ல urine ரிப்போர்ட் லையா...

அப்படி இல்லப்பா...கணவருக்கு பிரச்சன ன்னா மட்டும்தான் IUI ன்னு இல்ல..பெண்களுக்கு வரும் பல பிரச்சனைகளுக்கும் iui பண்ணுவாங்கப்பா...iui வந்து கருவுறும் வாய்ப்பை அதிகபடுத்தும் ஒரு கருத்தரிப்பு முறை.

உங்க tube blockage பத்தி முதல்ல நீங்க சிறப்பு மருத்துவரிடம் இன்னும் நல்லா discuss பண்ணுங்க...என்னா அவங்க தான் சான்ஸ் இருக்குன்னு சொல்லிருக்காங்க...அவங்க ஒபினியன் என்ன?அவங்களும் iui or ivfபண்ணனும் நு சொன்னங்களா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

பிரபா..என் friend dr கிட்ட கேட்டேன்.ஒரு tube blockage இருக்கறவங்களுக்கு first IUI தான் செஞ்சு பார்ப்பங்கலாம். success rate இருக்கும் நு தான் அவ சொன்னா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Dr சொன்னதினால் தான் என் கணவரும் நம்பிகையுடன் செய்ய சொல்கிறார் .லப்ரோச்கோபி ரிப்போர்ட் ivf னு சொன்னங்க .அந்த hospital ல லப்ரோச்கோபி அப்போ 5 நிமிடம் கூட சர்ஜரி செய்யல .தியேட்டர் க்கு போன அடுத்த 5 mints ல வெளிய அனுபிட்டாங்க .என்னவர் கேட்டதுக்கு இது நார்மல் ஸ்கேன் மாதரிதான் அதனால tube தெரியல நிர்கட்டி இருக்கு .ivf தான் பெட்டெர் னு சொன்னங்க (புகழ் பெற்ற மருத்துவமனை). next எங்கள் ஊரில் உள்ள dr இடம் சென்றேன் .அவர்கள் ரிப்போர்ட் பார்த்து இதல்லாம் தேவை இல்லை என்று சொல்லி hsg மட்டும் எடுத்தார்கள் .அதில் ஒரு tube பிளாக் அடுத்தது நன்றாக உள்ளது என்று கூறினார்கள்.அவரிடம் தான் இப்போது செல்கிறேன் .இப்பொது என்னவரின் சித்தி அவரும் dr .ரிபோர்டை பார்த்து நார்மல் ரிஸ்க் என்று கூறினார்.இப்போது என்னவர் hsg எடுத்த dr சொன்னதைத்தான் நம்புகிறார் .

பரிசோதனை கூடத்தில் வீரியம் உள்ள விந்தணுக்களை பிரித்து எடுத்து அதன் தரத்தை அதிகரித்து கருப்பையின் வாயில் செலுத்துவதே இந்த முறை.முன்காலத்தில் கருப்பை வாயிலே செலுத்துவதுதான் முறையாக இருந்தது.இப்பொழுது tube க்கு உள்ளே யே அணுவை செலுத்தும் அளவுக்கு வசதி உள்ளது.அதனால் ultrasound உதவியுடன் விந்தணுவை நேரடியாக tube குள்ளே செலுத்தி விடுவார்கள்.உங்களுக்கு ஒரு tubil அடைப்பு இருப்பதால் நன்றாக உள்ள tube வழியாக விந்தணுவை உள்ளே செலுத்துவார்கள்.மயக்க மருந்தோ,அறுவை சிகிச்சையோ தேவை இல்லை.வலியும் இல்லை.
விந்தணு எண்ணிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.உங்கள் கணவருக்கு எந்த பிரச்னையும் இல்லாததால் நீங்க தைரியமாக சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்