வெளிநாட்டில் வாழும் தோழிகளே, pls help

வணக்கம் தோழிகளெ. என் மகனுக்கு 21/2 வயது ஆகிறது. நான் singapore இல் இருக்கிறென். ஒரு சில வார்த்தைகள் தான் சொல்கிறான். நாங்கள் தினமும் அவனிடம் பேசுகிறோம்.விளையாடுகிறோம், பாட்டு சொல்லி தருகிறோம்.வாங்க, போ, கொடு,tv, fan, light,mummy,daddy, athai,mama,He can identify alphabets, numbers, Rhymes first line only.ஆனால் புரிந்து கொள்கிறான். நாங்கள் தனியாக இருப்பதால் பேச lateஆகுதுனு புரியுது. அவன் சிறு சிறு வாக்கியம் ஆவது பேசினால் போதும். அதற்கு coming Juneல் India போய் 6 மாதம் baby class சேர்த்து விடலாமா. பேச்சு நல்லா வருமா. இல்லையென்றால் singaporeல் playgroup சேர்த்து விடலாமா. நல்லா english வருமா. ஜனவரியில் இருந்து singaporeல் Nursery போக போகிறான். அவன் புரிந்து கொள்ள வேன்டும் அல்லவா. வெளிநாட்டில் வாழும் தோழிகள் கண்டிப்பா இந்த problem இருக்கும். அதான் கேக்குறென். உங்க குழந்தைகளுக்கு என்ன செய்தீர்கள். அவருக்கும் எனக்கும் கவலையாக உள்ளது. Pls help pls தயவு செய்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

ஜெயா இதுக்காக நீங்க இந்தியா போகணும்னு அவசியம் இல்லை. என் ஃப்ரெண்ட் குழந்தை ப்ளே க்ரூப்பில் போடும் போது அவளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் . ஒன்றிரண்டு வார்த்தைகளை அதுவும் மழலையாக பேசுவாள். ஆனால் அங்கு சேர்த்த பின் பேச்சு நன்றாக வந்து விட்டது. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் சிரமப்படாமல் பேச ஆரம்பித்து விட்டாள். தைரியமா ப்ளே க்ரூப்பில் போடுங்க. மூன்று வயது வரை வெயிட் பண்ணுங்க. இரண்டரை வயதுதானே ஆகுது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயா, ஏற்கனவே இதுபோன்ற ஒரு சந்தேகத்திற்கு வேறு ஒரு தோழிக்கு பதில் தந்ததாக நினைக்கிறேன். இப்போது உங்கள் குழந்தைக்கு இரண்டரை வயது தானே ஆகிறது. அதனால் பயம் வேண்டாம். ப்ளே ஸ்கூல் போனால் மற்ற குழந்தைகளோடு பேசி பழகி தானாகவே பேச கற்றுக் கொள்வார்கள். என் குட்டிகளுக்கு மூணரை வயதாகிறது. இன்னும் சரியான பேச்சு வரவில்லை. நான் அது குறித்து எந்த கவலையும் கொள்வதில்லை. ஊருக்கு போய் பள்ளி சேர்த்தால் எல்லாம் சரியாகும். ஆனால், இவர்கள் இந்த ஊர் மொழிகளை ஓரளவு பேசுவார்கள். தமிழில் தத்து பித்துன்னு தான் பேசுவார்கள். தெளிவான பேச்சு இல்லை. இரண்டு,மூன்று மொழிகள் பேசும் இடத்தில் குழந்தைகள் வளர்ந்தால் அவர்க்ளுக்கு ஏற்படும் குழப்பத்தில் கூட இது போல பேச்சு வர தாமதமாகும். அதுதான் வெளிநாட்டில் வாழும் நம் போன்ற ஒரு சில குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வீண் கவலைகளை விடுங்கள். மற்ற குழந்தைகளோடு தொடர்ச்சியாக பழகும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் பேச தொடங்குவார்கள்.

நீங்கள் சொல்வதை அவர்கள் திரும்ப சொல்லவில்லை என்பதால், சொல்லிக் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவர்கள் வாயில் தான் சொல்லவில்லையே தவிர, மனதில் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். நான் சொல்லித்தருவது மூளையில் நன்கு பதியும். மொத்தமாக ஒரே நேரத்தில் சொல்லி தராமல், அவர்கள் விளையாடும்போதே ஒவ்வொரு பொருளையும்,நிறத்தையும் காட்டி விளையாட்டு போக்கிலேயே சொல்லி கொடுங்கள். அடுத்த முறை அந்த பொருளை பார்த்தால் அவர்கள் சொல்வார்கள். எங்கள் வீட்டில் இது தான் நடக்கிறது. வீண் கவலையை விடுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு இதில் உணர்வுபூர்வமான அனுபவம் இல்லைனாலும் என் சித்தி பசங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதனால் இதை பற்றி ஓரளவிற்கு தெரிந்ததால் சொல்ல வந்தேன். அவங்களுக்கு 2 பையனுங்க இருவருமே 3 வயதிற்கு மேல் தான் பேச ஆரம்பித்தார்கள் இத்தனைக்கு அவங்க கூட்டு குடும்பத்தில் தான் இருக்காங்க நிறைய பசங்களோட பழகும் பேசும் வாய்ப்பு இருந்தது ஆனால் ஒரு சில குழந்தைகள் பள்ளி சென்ற பின் தான் பேச ஆரம்பிப்பார்கள். இப்போ இருவருமே ஸ்கூலுக்கு போறாங்க 2 3/4 வயதிலேயே ப்ளே ஸ்கூல் சேர்த்துட்டாங்க அப்பப்பா அவங்க இப்போ பேசும் பேச்சுக்கு அளவே இல்ல அப்படி ஒரு பேச்சு பேசுறாங்க.
அதனால் நீங்க கவலைப்படவே வேண்டாம் உங்க பையன் இவ்வளவு வார்த்தைகள் பேசுறானேன்னு சந்தோஷப்படுங்கப்பா. அதுவும் நீங்க இருவரும் மட்டும் இருக்கும் அந்த சூழலில் இந்த அளவுக்கு பேசுறான்ல சந்தோஷம். நீங்க அவன்கிட்ட பேசிட்டே இருங்க அது போதும் 3 வயதில் ஸ்கூல் சேர்ந்ததும் நல்லாவே பேச ஆரம்பிச்சுடுவாங்க பாருங்க.
இந்த தகவல்கள் உங்களுக்கு ஒரு சந்தோஷத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும்னு தான்பா போட்டேன் எந்த வகையிலும் பயன்படலைனா ரொம்ப சாரிப்பா

நிறைய தோழிகள் விளக்கம் கொடுத்துவிட்டார்கள் நானும் அதை தான் கூற வருகிறேன். தாமதமாக பேசும் குழந்தைகள் பெரிய அறிவாளியாக வருவார்கள் என்று "டாக்டர் ப்ரய்டு" கூறியுள்ளார். யார் அந்த "ப்ரய்டு"ன்னு கேட்கறது புரியுது.. அவர் தான் உளவியல் தந்தை (father of Psychology). நம்புங்கள், நம்பிக்கை தான் வாழ்க்கை.. முயற்ச்சியை விடாதீர்கள்.. குழந்தையை ப்ளே ஸ்கூல் அனுப்புங்கள் சக குழந்தைகளுடன் பழகும் போது சீக்கிரம் பேசிவிடும்..

வணக்கம் ஜெயா

playgroup-ல் சேர்த்தாலே பேச்சு வரும் நானும் Singapore -தான் அட்மின்

அண்ணாவிடம் மெயில் ஐடி வாங்கி தொடர்பு கொள்ளவும்.

susi.

food

எனக்காக பதில் குடுத்த அனைவருக்கும் நன்றி... sorry pa தாமதமா பதில் தருவதற்கு. நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன் பா. சரி தோழிகளே singaporeஇல் playgroupலே சேர்த்து விடறேன். இதற்க்காக India போகனுமே பார்த்தேன். இங்கு சில பேர் சொன்னார்கள் indiaவில் babyclass 6 month சேர்த்தால் கண்டிப்பாக பேச்சு வரும்னு அதான் கேட்டேன். அப்புறம் lastஆ ஒரு doubt பசங்க எந்த வயதில் சுமாரா பேசுவாங்க.

jaya

complete 4 yrs when kids are speech vert well

complete 4 yrs when kids are speech very well

கவலையை விடுங்க. என் பையனும் அப்படிதான் இருந்தான். இங்கே பேச ஆள் இல்லாமல் இப்படி ஆயிட்டான் என்று நானும் புலம்பி இருக்கேன்.
நீங்க போதும் போதும்னு சொல்ற அளவுக்கு 3 வயதுக்கு மேல் தானா பேச ஆரம்பிச்சுடுவான். இதெல்லாம் மேஜிக் மாதிரி தானா நடக்கும்.
என்னை நம்புங்க. இயற்கையை நம்புங்க. அவன்கிட்ட யாரும் உக்காந்து பேசல. நானும் அவரும் பேசிப்போம். இவன் ஒட்டு கேட்டே பயங்கரமா பேச ஆரம்பிச்சுட்டான். எங்கள விட்டா ஈ , காக்கா கூட அவன் பார்த்தது கிடையாது. இதுக்கெல்லாம் கவலையே படாதீங்க.

hi jaya, i am also in singapore(jurong) u r staying where?

மேலும் சில பதிவுகள்