தோழிகளே அபிக்கு கடந்த 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலம்.... அந்த இளவரசனின் பெயர் jainesh . அனைவரும் அபியையும் குட்டியையும் வாழ்த்துங்கள்...... முதல் வாழ்த்து என்னுடையது "Best wishes abi welcome jainesh. "
தோழிகளே அபிக்கு கடந்த 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலம்.... அந்த இளவரசனின் பெயர் jainesh . அனைவரும் அபியையும் குட்டியையும் வாழ்த்துங்கள்...... முதல் வாழ்த்து என்னுடையது "Best wishes abi welcome jainesh. "
அபி
அபி வாழ்த்துக்கள் பா. உங்களுக்கும் அண்னாவுக்கும் . ரொம்ப சந்தோஷம்பா. பாப்பா எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்களும் , ப்ரார்த்தனைகளும்.
ஆகா
அட... பையன் பிறந்துட்டானா??? ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க. தாயும் மகனும் நலமோடு வாழ பிராத்தனைகள். அபி... உங்களூக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். மனசு உங்களை பற்றியே யோசிச்சுட்டு இருந்தது... வலின்னு சொன்னாங்களே... என்னாச்சுன்னு தினமும் எல்லாரையும் கேட்டேன்... யாருக்கும் தெரியல. இப்போ தான் நிம்மதியா இருக்கு. :) ரொம்ப மகிழ்ச்சிங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலை
வலின்னு 15 ஆம் தேதியே சொன்னாங்களே... என்ன ஆச்சு??? 17ன்னு போட்டிருக்கீங்களே அதான் எதாவது தெரியுமான்னு கேட்டேன். தெரிஞ்சா சொல்லுங்க கலை. தகவலுக்கு நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Abi
நன்றி கலை நல்ல தகவல்க்கு நானும் நினைச்சிட்டி இருந்தேன் எங்கள் வாழ்த்தை அபிக்கும் குட்டிப்பையனுக்கும் சொல்லுங்கள் உடம்பையும் நல்லாப்பார்த்துக்கச்சொல்லுங்க
வாழ்க வளமுடன்
அபி
நல்ல செய்தி சொன்ன கலைக்கு நன்றி அபியும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் அபின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
வாழ்த்துக்கள் அபி!
அப்பாடா, நல்லபடியா மகன் பிறந்தாச்சா?! ரொம்ப சந்தோஷம்.
வாழ்த்துக்கள் அபி! குழந்தையையும் உங்க உடல் நலத்தையும் நல்லபடியா பார்த்துக்கோங்க.
எதேச்சையா நீங்க உங்க வலி குறித்து, வனிக்கூட உரையாடிய இழை கண்ணில்பட என்ன ஆச்சின்னு தெரியலையேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்த கலைக்கு நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
தோழி vani.,
அபிக்கு 17ம் தேதி தான் சுகபிரசவத்தில் குழந்தை பிறந்து உள்ளது வனி.... அபி எனக்கு mail அனுப்பினால், 15 இரவு கூட பேசிக்கொண்டு இருந்தோம். 2 ,3 நாள ஆள காணொம் இன்று காலை இந்த மகிழ்ச்சி யான செய்தி கிட்டியது, அதை உங்கலுடன் பகிற்ந்து கொண்டேன்.. இந்த மாதிரியான நம்முடைய வாழ்த்துகள் அபிக்கு சந்தோசத்தை கொடுக்கும் .... அதுக்காக தான் இந்த இழை,,,, நன்றி எல்லாம் சொல்லாதிங்க ,. மேலும் தகவல் கிடைத்தால் பதிவிடுகிறேன்.
BE HAPPY MAKE OTHERS HAPPY
வாழ்த்து
அன்புத் தோழி அபிக்கும், அவர்கள் குடும்பத்தார்க்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
குட்டி இளவரசன் நோய் நொடியற்று ஆரோக்கிய வாழ்க்கை வாழவும், வாழ்வில் சீரும் சிறப்புமாக விளங்கவும் வாழ்த்துகிறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாழ்த்துக்கள் :)
அபிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
அபி
அபி வாழ்த்துக்கள், குட்டியும் நீங்களும் அண்ணாவும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்....
இப்படிக்கு ராணிநிக்சன்