பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?

அன்புகோழீஸ், என்ன வீக் எண்ட் அதுவுமா பறக்குறது, நடக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாத்தையும் வறுத்து பொரிச்சு வயத்துக்கு அனுப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா? உங்களை யார் நிம்மதியா விட்டா? இதோ வந்துட்டேன் பட்டிமன்ற தலைப்போட..

நம் அறுசுவையின் அன்புத்தோழி அன்பரசி அவர்களின் தலைப்பாகிய

*************************************************************
அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா ?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
*************************************************************

சிறு மாறுதல் செய்து இங்கே தந்துள்ளேன். அன்பு தலைப்புக்கு நன்றி பா :)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

என்ன தலைப்பை பார்த்துட்டீங்கல, இன்னும் என்ன வேடிக்கை? மளமளன்னு உங்க அழுத்தம், எதிர் வீட்டு அழுத்தம், பக்கத்து வீட்டு அழுத்தம் எல்லாத்தையும் போட்டு இங்கே அழுத்த வாங்க. எல்லாத்தையும் வாங்கி ஒரு பெரிய சாக்கு பைல போட்டு அழுத்தி வைக்க நான் இங்கே காத்திருக்கேன். வாங்க கோழிகளே!! வாங்க !! வாங்க !!

இல்லத்தரசிக்கே அப்புரம் வர்ரேன் என் வாதத்தோட

வாழ்க வளமுடன்

கோழிகளே, தடங்கலுக்கு வருந்துகிறேன். என்னால் ஒரு இரண்டு நாட்கள் தொடர்ந்து பதிவுகள் போட முடியாது. என் குட்டிகளுக்கு உடம்பு சரியில்லை. சாதாரண சளி, ஜுரம் தான். இருந்தாலும் இருவருக்கும் ஒரே சமயத்தில் வந்ததால் நான் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் நான் நிச்சயம் பதில் பதிவிடுகிறேன். நான் இல்லையென்பதால் தயவு செய்து பட்டியை மட்டும் தூங்க விட்டுவிடாதீர்கள். நான் கோழீஸ் உங்கள் அனைவரையும் நம்பி விட்டு செல்கிறேன்.

பட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க போகும், வீரப்புலி, சூரப்புலிகளுக்கும், மற்ற அனைத்து தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்த முறை பட்டி மன்ற தலைவி ஆகி இருக்கும் என் பாட்னர் க்கு வாழ்த்துக்கள் பசங்க உடம்பு சீக்கிரம் சரி ஆகிரும் நீங்க கவலை படாதிங்க
வீட்டில் இருக்கும் என்னை போல பெண்களுக்கே மன அழுத்தம் அதிகம் என்ற அணிக்கே என் ஓட்டு சீக்கிரம் நான் என் வாதத்தோடு வருகிறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பட்டி நடுவருக்கு வணக்கம்!! நிச்சயம் வேலைக்கு செல்லும் பெண்களுக்குதான் மனஅழுத்தம் அதிகம். இல்லத்தரசிகளுக்கு வீட்டுப்பிரச்சினை மட்டும்தான். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டு பிரச்சினையோடு, வேலை செய்யும் இடத்திலுள்ள பிரச்சினையும் சேர்ந்து கொள்ளும். எல்லாம் சேர்ந்து அவர்களை அதிக மனஅழுத்தத்திற்கு தள்ளிவிடும். ஆகவே நடுவரே!! வேலைக்கு செல்லும் பெண்களுக்கே அதிக மனஅழுத்தம் என்ற அணிக்காக வாதாட வருகிறேன்.
தோழி கல்பனா!! குழந்தைகள் விரைவில் நலமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

இல்லத்தரசிகளுக்கே என்று என் வாதங்களை முன் வைக்க பிறகு வருகிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பேரன்பிற்குரிய நடுவர் அவர்களே!!
இல்லத்தரசிக்கே மன அழுத்தம் அதிகம் அதிகம் என என் வாதத்தை ஆரம்பிக்கிறேன்

பேரன்பிற்குரிய நடுவர் அவர்களே!!
இல்லத்தரசிக்கே மன அழுத்தம் அதிகம் அதிகம் என என் வாதத்தை ஆரம்பிக்கிறேன்

நாட்டமைங்....ங்...ங்..ங்.க....க...க..க. வணக்கமுங்க. எனது ஓட்டு இல்லதரசிக்குத்தான். நானும் ஒரு இல்லத்தரசிதான் பாருங்க. அதுனாலத்தான் அடிச்சு???? சொல்றேன் இல்லத்தரசிக்குதான் மனஅழுத்தம் அதிகம்னு. இப்போ ஒரு சீட்டுக்கு துண்டுபோட்டு போயிட்டு நாளைக்கு வாறேனுங்கோ.

நீங்க ரொம்பநல்ல நடுவருங்கோ!!!!

நடுவரே... அருமையான தலைப்பு... வருகிறேன் நாளை காலை வாதங்களுடன் :) இக்காலத்தில் இல்லத்தரசிகளூக்கே மன அழுத்தம் அதிகம் என்று வாதிட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே, வணக்கமுங்கோ!!

தலைப்பு சுண்டி இழுத்துவிட்டதுங்கோ, அதான் எங்க அணிக்காக ஏதோ எனக்கு தெரிந்ததை உளறிட்டு போலாம்னு!!!!!

நடுவரே, முதல்ல வேலை செல்லும் பெண்கள் என்றாலே வேலைக்கு போறதுக்கு முன்னாடி அவங்க ஒரு இல்லத்தரசிதாங்க. இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம் என்று வாதம் செய்பவர்கள் கிட்ட ஒரே ஒரு கேள்வி, உங்களுக்கே இவ்வளவு அழுத்தம்னா, வெளியயும் வேலை செய்து, வீட்டிலும் வேலை செய்யும் எங்களுக்கு எவ்வளவு இருக்கு அழுத்தம்'னு கொஞ்சம் யோசித்து பாருங்க.

நடுவரே, அவங்க மாமியார், மாமனார், கணவர், குழந்தைகளை கவனித்தால் மட்டும் போதும். இதுவே பெரிய வேலை தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா எங்களுக்கு அப்படியில்லை நடுவரே, ஆபீஸ் போனா வீட்டை மறக்க முடியாம, குழந்தை என்ன பண்றானோ, மாமியார் அவனை ஒழுங்கா பாத்துப்பாங்களா'னு ஒரு பக்கம்.ஒரு வேளை வீட்டுக்கு லேட்டாயிட்டா, திரும்ப போய் எல்லாவேலையும் செய்யனுமே என்கிற வருத்தம் இன்னொரு பக்கம். ஏன் லேட்டு'னு வீட்டில் எல்லாரும் திட்டுவாங்களே'னு ஒரு பக்கம் பயம். வேலை முடிக்காம ஏன் கிளம்பறீங்க'னு பாஸ் திட்டுவாரே பயம் இன்னொரு பக்கம்.

மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி என்றால் எங்களுக்கு திரும்பும் அனைத்து திசைகளில் இருந்து இடி தான் நடுவரே!!

காலையில் 4 மணிக்கு எழுந்து, வேகம் வேகமா வேலையெல்லாம் முடித்து, கணவரை வேலைக்கு அனுப்பி, குழந்தையை பள்ளிக்கு அனுப்பி, நின்றுகொண்டே வாய்க்குள்ள எதையாவது தள்ளிட்டு, பஸ் பிடித்து வேலைக்கு வந்து உட்கார்ந்து, பறந்து பறந்து வேலை செய்து, மதிய நேரம் தான் ஓரளவுக்கு நிம்மதியா சாப்பிட்டு, திரும்பவும் வேலை பார்த்து, திட்டு வாங்கி, நொந்து நூடுல்ஸ் ஆகி வீட்டுக்கு வந்தா, காலையில் போட்ட பாத்திரம் முதல் எல்லாமே அப்படியே இருக்கும். ஏன்னா வேலைக்காரி வச்சா மாமியாருக்கு பிடிக்காதாம்!!

இப்படி வீட்டுக்கு வந்தும், எல்லாத்தையும் முடிச்சுட்டி படுக்க, 11, 12 மணி ஆயிடும். மெஷினுக்கு கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் கிடைக்கும் நடுவரே ஆனா எங்களுக்கு!!!

இப்படி இருக்கும் போது மன அழுத்தம் மட்டும் இல்லை, உலகத்தில் உள்ள எல்லா வியாதி சீக்கிரம் வந்திடும். ஆனா இல்லத்தரசிகளுக்கு அப்படியா???! அரசி என்கிற போது அவங்களுக்கு எப்படிங்க நடுவரே அழுத்தம் இருக்க முடியும். இன்று டிவியில் சீரியல்கள் மெகா சைசில் விஸ்வரூபம் எடுப்பதற்கு முக்கிய காரணமே இவர்கள் தானே!! அப்படியிருக்க எங்கிருந்து வருகிறது மன அழுத்தம்?!

வொய் திஸ் கொலவெறி நடுவரே!!

அதுவும் மதியானம் ஒரு தூக்கம் போடுவாங்க, எங்களுக்கு இரவு தூக்கமே வராது, இதில் எங்கிருந்து மதியம் தூங்கறது:(குழந்தையை ஒழுங்கா பக்க்தில் இருந்து கவனித்து கொள்ள முடியாம, திணறும் வேலை செய்யும் பெண்மணிகள் எத்தனை பேர் தெரியுமா?? அந்த குழந்தையை நினைத்தாலே வந்து விடும் மன அழுத்தம்.

நடுவரே, ஒரு வேலை பார்க்கும் போது மன அழுத்தம் வராது நடுவரே. நிறைய வேலைகள் யார் மனதும் கோணாமல் ரெண்டையும் பேலன்ஸ்டா பண்ண வேண்டும் என்கிற போது தான் அங்கு மன அழுத்தம் வருகிறது.

இப்ப கூட பாருங்க, உங்க குழந்தைக்கு உடம்பு முடியலை என்றதும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கணும்னு சொல்றீங்களே, இதுவே வேலை செல்லும் பெண்களில் எத்தனை பேரால் லீவ் போட்டு குழந்தையை உடல் சரியில்லாத பார்த்து கொள்ள முடிகிறது??!

நான் இவ்வளவு சொன்னதுக்கப்புறம் இல்ல இல்லத்தரசிகளுக்கு தான்'னு தீர்ப்பு மட்டும் சொன்னீங்க, உங்க வீட்டுக்கு உங்களை தேடி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும் வேலையில் சேர!!!

கண்டிப்பாக உங்களை குழப்ப, மறுபடி வருவேன்!!!

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்