இப்படியும் சில ஜென்மங்கள்.

இப்படியும் சில ஜென்மங்களா என்று உங்களை ஆச்சரியபடுத்தும் அல்லது கோபபடுத்தும் மனிதர்களை பற்றி பேசலாமா?

கோடம்பாக்கத்தில் தெருநாய்களுக்கெல்லாம் ஒருவர் பிஸ்கட் வாங்கி போடுரார்.இதை பார்த்ததும் அவர் தெய்வபிறவி என்றே தோன்றியது

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

சரவணா நகைகடையில் ஒரு சேரில் உக்கார்ந்து காலில் கொலுசு போட்டு சரிபார்த்துகொண்டிருந்தேன்.கொலுசை பார்த்து கொண்டே சேரில் உக்காரபோனால் அங்கே சேர் இல்லை.பக்கத்தில ஒரு பெரிய குடும்பம் 7 பேர்.யாரோ எடுத்திருக்காங்க..வெறுப்பாக இருந்தது,கூட்ட நேரமும் இல்லை. கொஞ்சம் தள்ளிபோய் எடுக்க சோம்பேறித்தனம். அட்லீஸ்ட் கேட்டு எடுத்திருக்கலாம். நான் விழுந்திருந்தால்..அய்யோ நெனச்சு பார்க்கவே அவமானமா இருந்தது. அங்கு வேலை பார்ப்பவங்க சேரை ஒரு 2 நிமிடம் மட்டும் தரும்படிதிருப்பி கேட்டாங்க. 7 பேரில் 12வது படிக்கும் மாதிரியன 2 பசங்களும் உண்டு. சேரை தரமாட்டோம்னு சொன்னதுதான் ஹைலைட்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

போன வாட்டி ஊருக்கு போயிருந்தப்போ திருவனந்தபுரம் போயிட்டு ஊருக்கு பாசஞ்சர் ரயிலில் திரும்பி கொண்டிருந்தோம். செம கூட்டம். ஒரு வட இந்திய குடும்பம் நண்டு சிண்டுன்னு நிறைய பேர் பெட்டி படுக்கையோட வந்தாங்க. லக்கேஜ் வைக்கும் இடத்தில் சாமான்களையும் வைத்து குழந்தைகளையும் தூக்கி மேலே வைத்தார்கள். அதில் ஒன்னு 6 அல்லது 7 வயதான பெண் குழந்தை. மேலே உட்காரும் போது ஸ்கர்ட்டை ஒழுங்க்கா வைக்காமல் உள்ளாடை தெரிந்தது.சிறு குழந்தைதானே அதற்கு தெரியுமா. அவசரத்தில் ஏறி உட்கார்ந்திடுச்சு.
ஒரு ஜென்மத்துக்கு அது குழந்தைன்னு கூட தெரியாம அப்படியே வெறிச்சு பார்க்குது. எனக்கு எழும்பி பளார்னு விடலாம்னு வந்துச்சு. ஆனா அதுக்குள்ள இதை கவனிச்ச அவங்க அம்மா குழந்தையின் உடையை சரியாக்கி உட்கார வச்சாங்க. குழந்தையின் முன் சண்டை போடக் கூட முடியவில்லை அந்த தாயால். கள்ளமில்லாத அந்த குழந்தைக்கு புரிந்தும் புரியாமலும் வேதனைப்படுமேன்னு அடக்கிக்கிட்டாங்க போல :( இதுங்களை எல்லாம் என்ன பண்ணினா தகும்?!. போகும் போது வண்டி ஏறி சாவுடான்னுதான் சாபம் விட முடிஞ்சுது என்னால் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பஸ் ல போறப்போ முன்னாடி உக்காந்து இருக்கும் சில ஜென்மம் வேகமா பஸ் போயிட்டு இருக்கபோ எச்சில் துப்பும் பின்னாடி லாஸ்ட் வர ரீச் ஆகும் நு ஒரு அறிவே இல்லாம இந்த மாதிரி பண்ணுறவங்கள பாக்குறப்போ அப்படிதான் வரும் எனக்கு வாயிலே குத்தனும் போல இருக்கும் இதுனாலேயே பஸ் ல ஜன்னல் சீட் தவிர்த்து வரேன்.
கவி அக்கா சொன்ன மாதிரி ட்ரைன் ல நெறையா ஜென்மம் இப்டி யாரடா பாக்கலாம்னு இருக்காங்க மூணு முறை தான் ட்ரைன் ல பயணம் பண்ணிருக்கேன் அதுல நாலு அஞ்சு டைம் பாத்துட்டேன் இந்த மாதிரி மூதேவிங்கள.
இவங்கலாம் எப்போ தான் திருந்த போறாங்களோ !!!!!!!!
by Elaya.G

நான் நேத்து ட்ரெயின் டிக்கட் எடுக்க போனேன். அப்ப 3 டிக்கட் குடுங்கன்னு கூண்டுக்குள்ள உக்காந்துருக்குறவர்கிட்ட கேட்டேன்.. டிக்கெட் விலை 12, சோ நான் 40 (3 டிக்கட்) குடுத்தேன்... ரெண்டு 20ரூபாய் நோட்டு... சில்லரை குடுன்னு தூக்கி வீசிட்டார்.. அவர் வீசுனதுல டேபிள் தாண்டி கீழ விழுந்து உக்காந்துருந்தவங்க கிட்ட போய் கிடக்கு நோட்டு சார் பார்த்துக்குடுங்க அப்டினு சொன்னதுக்கு நீ மட்டும்தான் நிக்கிறியா பின்னாடி பாருன்னு.. கேவலமா ஒரு பார்வை... சரின்னு திரும்பி பார்த்தா எண்ணி பத்து பேர் நிக்குறாங்க.. டிக்கெட் எழுதி கிழிச்சிலாம் தரவேணாம் சும்மா ஒரு மெஷின் தட்டினா வெளில டிக்கட் வருது அதுக்கு அவருக்கு இவ்வளோ ஆத்திரம் சோம்பல்.. பணத்த எடுத்து குடுத்து டிக்கெட் வாங்கிட்டேன் டிக்கட்கும் அதே கதிதான் கீழ விழுந்துட்டு சரி பணத்துக்கே மரியாதை இல்ல இதுல டிக்கட்கு இந்த கதியாவது கிடைச்சதே... (நல்ல வேளை துக்கி பொட்டு ரெடி 1..2..3.. போய் எடுத்துக்கோங்கன்னு சொல்லாம விட்டாரேன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டேன்...) சரி நமக்கு மட்டும் தான் அப்டி குடுத்தாரான்னு உக்க்க்க்காந்து பார்த்தேன்.. எல்லாருக்கும் அதே கதி தான் அவர ஒண்ணுமே சொல்ல முடில ஏன்னா அவங்களாம் சென்டரல் கவர்மென்ட்... :( ஏதோ இங்க சொல்லணும்னு தோணுச்சு அதுனால இந்த இழைய தேடி பிடிச்சு சொல்டேன்... :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

:-) போன வாரம் நெல்லையில் கவர்மென்ட் பஸ்ஸில் 10ரூபாய் கொடுத்தேன்.மீதி 6ரூபாய் இறங்கும்போது தருவதாக கண்டக்டர் சொன்னார்.ஸ்டாப் வந்ததும் கேட்டால் உன் பர்ஸில் இருந்து 4ரூபாய் எடுத்து தா ந்னு சொல்ரார்.எல்லாரும் என்னயவே பார்க்க நான் அமைதியாக சில்லரை இல்லைன்னு சொன்னென். மீதியை அவரே வச்சிக்கட்டும்னு பேசாமல் இருந்தேன்.அப்புறம் அவரே தந்தார்.முதலிலே சொல்லிருந்தால் சில்லரை தேடியாவது கொடுத்திருப்பேன்..அந்த கோபம் எப்டி போச்சுன்னு தெரியுமா..என் தோழியை சில்லரை இல்லாததால் பஸ்சில் அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்ட கதையை கேட்டு

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

எங்க ஊர் பஸ் ஸேன்ட்ல ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பாவம் அவங்க ஒரு குடிகார நாய் இல்ல அது ஒரு பிறவி பெண்ணை கூப்பிட அதுக்கு ஒன்னும் புரில எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல ஆனா அவங்களுக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி ஓங்கி ஒன்னு விட்டாங்க பாருங்க..... அப்பாட ( இதுல என்ன ஹ்லைட்னா இந்த காட்சியை ஒரு போலீஸ்காரரும் பார்த்தார்)

GOD IS LOVE

நானும் அப்பாவும் பஸ்ல போறப்ப டிக்கட் வாங்கிட்டோம், கண்டக்டர் 5 சில்லறை கொடுக்கணும்.
அப்பா முதல்முறை கேட்டப்போ கொடுக்கிறேன் அப்படினு காட்டமா சொன்னாரு. அடுத்த முறை கேட்டப்போ இருய்யா கொடுக்கிறேனான்.
அப்பவும் அப்பா அமைதியா இருந்தாரு.
எறங்குறப்ப இந்தாங்க மீதி அப்படீன்னான். உடனே அப்பா கூலா
"பிச்சக்காரனுக்கு போட்டதா நினைச்சுக்கிறேன் நீயே வெச்சுக்கோ"
அப்படீனு சொல்லிட்டு எறங்கி வந்துட்டோம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்