விருந்தாளிகளுக்கான மெனு,டிப்ஸ்

8 பேருக்கு செய்ய கூடிய சமையலுக்கு மெனு சொல்லுங்க.வெஜ்,நான் வெஜ் எதுனாலும் பரவாயில்லை.பார்ட்டி மெனு இல்லை.ஒரு 4 பேர் நம் வீட்டில் 2 அல்லது 3 நாட்கள் தங்குவதாக இருந்தால் என்னன்ன மெனு செய்வீர்கள். 2 வயது குழந்தையோடு நான் மட்டும் தனியாக செய்ய வேண்டி வரும்.வந்தவர்களை கிச்சனுக்குள் சமையலுக்குள் இழுக்காமல் செய்யனும்ப்பா .விரைவாக செய்யவும் டிப்ஸ் கொடுங்க.

ஜெயா 4பேர் வீட்டுல தங்குறாங்கன்னா கண்டிப்பா ப்ளானிங் அவசியம்.
விருந்தினர் வரும் முன்னே செய்ய வேண்டியதுல முக்கியமா மாவு வகைகள் தயார் செய்து வச்சுக்கலாம். தோசை மாவு, ஆப்ப மாவு, அடை(உப்பு சேர்க்காமல் ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை புளிக்காம இருக்கும்.)மாவு, பெசரெட்டு மவு இதெல்லாம் தயாரா வச்சுக்கலாம். ஃப்ரிட்ஜில் இதுக்கெல்லாம் இடம் வேணாமான்னு கேட்காதீங்க நல்ல சிப் லாக் கவரில் போட்டு வைத்தால் இடம் அடைக்காது. இதெல்லாம் ரெடியா இருந்துச்சுன்னா ப்ரேக் ஃபாஸ்ட் பிரச்சினை இல்லை. தேங்காய் துருவி சின்ன சின்ன பாக்கெட்டுகளில் கட்டி ஃப்ரீசரில் போடுங்க. கட்லெட் எண்ணெயில் பொரிக்கும் முன் வரை உள்ள ஸ்டெப்ஸ் எல்லாம் முடித்து ஃப்ரீஸ் பண்ணி சிப்லாக்கில் போட்டு ஃப்ரீசரில் வச்சுட்டீங்கன்னா டீ டைம் ஸ்னாக் கொடுக்க ஈசியா இருக்கும். புளியை வெந்நீரில் ஊறவச்சு அரைச்சு வச்சுக்கிட்டீங்கன்னா புளிக்கரைச்சுக்கிட்டு நிற்க வேணாம். ச்சின்ன வெங்காயம் பூண்டு எல்லாம் உரிச்சு ஏர் டைட்டா கட்டி ஃப்ரிட்ஜில் வச்சுக்கலாம்.

நீங்களும் அவங்களோட வெளியில் போக வேண்டி வரும்னா ப்ரேக் ஃபாஸ்ட்டும் லஞ்சும் கம்பைன் பண்ணி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கற மாதிரி செய்யணும். தோசை இட்லி ப்ரேக் ஃபாஸ்ட்னா சாம்பாரும் வச்சு கூடவே ஒரு சட்னியும் வச்சுட்டோம்னா மதியத்துக்கு அதே சாம்பார் சாதத்துக்கு எடுத்துக்கலாம். கூடுதலா ரசம் அல்லது மீன் குழம்பு சிக்கன்னு ஏதாவது செய்யலாம். உங்க டைம் அட்ஜஸ்ட் பண்ணி பிளான் பண்ணுங்க.

டின்னருக்கு சப்பாத்தி, பூரி குருமான்னு ப்ளான் பண்ணுங்க. டீ டைம்லயே மாவு ரெடி பண்ணி குருமாவும் ரெடி பண்ணிட்டோம்னா டின்னர் ஈசியாயிடும்.

ஒருநாள் சாதம் குழம்பு கூட்டுன்னு வச்சீங்கன்னா அடுத்தநாள் புலாவ், சிக்கன் குருமா, தயிர் சாதம்ன்னு வெரைட்டி காட்டுங்க. பிரியாணியை விட புலாவ் ஈசியா செய்துடலாம். அடுத்த நாள் ஒரே சாதமா செய்து கோக்கனட் ரைஸ் லெமன் ரைஸ் (ரெண்டுக்குமே சாம்பார் பொருந்தும்) இறால் தொக்கு உருளைக்கிழங்கு வறுவல்னு அசத்துங்க. இந்த ஐட்டம் எல்லாம் ஈசியா விரைவா செய்துடலாம்.
ரஃபா ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம்பா...கட்லட் சாப்பிட மட்டும் தெரியும்பா..என் கணவர் ஊருக்கு போனேன்ப..ஒரு அக்கா 7 வயது பொன்னு,5 மாச கை குழந்தை வச்சிகிட்டு போட்ட மெனு யப்பா சான்ஸே இல்லை. மட்டன் குழம்பு,மட்டன் வறுவல்,மீன் குழம்பு,மீன் வறுவல்,ரசம்,..எப்டின்னு கேட்டால் ரச பொடி,மாயவரம் குழம்பு பொடி முறையில் மீன் குழம்பு,மட்டன் குழம்பு வைக்கும்போது அவித்த மட்டனை எடுத்து மட்டன் வறுவல்,soup.:-( .இப்ப தெரியுதா நா எப்டி கேட்டென்னு.மீன் பொரித்த ஆயிலை குழம்பில் ஊற்றி செம டேஸ்ட். எனக்கு இப்டி யாராவது சொல்லி கொடுத்தா நல்லார்க்கும்.நானும் விரைவாக சமைக்க கூடியவள்.சுவையும்தான்பா.அடுப்பில் சட்டியை வைத்தே காய் வெட்டுவேன்.ஆனால் இப்டி ஒரே அவித்து தட்டி வித்தியாசம் காட்ட முடியாது. நீங்க சொன்னதுல பூரி,குருமா டைமிங்ல இவ்ளொ நாளா கோட்டை விட்டுருக்கேன்.:-) ..எடுத்து சொன்னதுக்கு நன்றி,

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

எல்லாம் ப்ளானிங்தான் ஜெயா. மீன் சிக்கன் மட்டன் எல்லாம் க்ளீன் பண்ணி ஒவ்வொரு நேரத்துக்கும் தேவையானதை தனித்தனியா பாக்கெட் பண்ணி ஃப்ரீசரில் வைக்கலாம். ஃபிஷ் ஃப்ரை, சிக்கன் ஃப்ரை செய்ய மசாலா புரட்டி ஃப்ரீஸ் பண்ணி வச்சுட்டா தேவைக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி வெளியில் எடுத்து வச்சுட்டா ஃப்ரை பண்ணிடலாம். கட்லெட் ரெசிப்பி அறுசுவைலயே ஏகப்பட்டது இருக்கு. டீ டைம்லயே தயிருக்கு வேண்டிய பாலையும் காய்ச்சி வச்சுட்டோம்னா ஆறியதும் நைட் உரை குத்தி வச்சிடலாம். அதுக்குன்னு நேரம் ஒதுக்கி நிற்க வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயாம்மா மாயவரம் குழம்புப்பொடின்னா என்ன அது எங்க கிடைக்கும்

ஜெயா & கவி அக்கா,

எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு வேலை செய்யரீங்க ..... நீங்க சொல்லும் டிப்ஸ் எல்லாம் வேலைக்கு போகும் பெண்களுக்கு ரொம்ப உதவிய இருக்கும் . ஜெயா நீங்க அடுப்பில் சட்டியை வைத்தே காய் வெட்டுவேன்
சுவையுடன் என்று சொல்லியிருகிறீர்கள் ... எப்படி???? எனக்கு வெங்காயம் தோலுரிக்க & காய்கறி கட் செய்யவே நெறைய நேரம் எடுத்திடும்.

உங்களுக்கு தெரிந்த ஹவுஸ் கீபிங் டிப்ஸ் சொல்லுங்க ...

கவி அக்கா... உங்க டிப்ஸ் superb . இன்னும் இருந்தால் சொல்லுங்கள் ..... மீன் மட்டன் ... freezer packing ...எதாவுது போட்டோ விளக்கம் தர முடியுமா ?

நன்றி ஷர்மி! மீன் மட்டன் ஃப்ரீஸ் செய்வது எல்லாம் ரொம்ப கஷ்டம் ஒன்னும் இல்லை.நான் பொதுவாகவே ஒருவாரத்துக்கு வேண்டிய மீன், சிக்கன், காய்கறி எல்லாம் மொத்தமாக வாங்கி வந்துடுவேன். வாங்கி வந்ததும் மீன் சிக்கன் எல்லாவற்றையும் சுத்தமாக்கி ஒவ்வொரு வேளைக்கும் தேவையான அளவுகளில் சிப்லாக் பேக் அல்லது ப்ளாஸ்டிக் கன்டெய்னர்களில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடுவேன். மொத்தமாக ஒரே பாக்சில் அல்லது கவரில் போட்டு வைத்தால் ஒவ்வொரு வேளைக்கு மட்டும் தனியே எடுப்பது கஷ்டம். எல்லாவற்றையும் டிஃப்ராஸ்ட் செய்து தேவையானதை எடுத்து விட்டு மிஞ்சியவற்றை மீண்டும் ஃப்ரீஸ் செய்வது நல்லதில்லை. ஒருமுறை டிஃப்ராஸ்ட் செய்தால் அதை மீண்டும் உள்ளே வைக்கக் கூடாது.

பொரிக்க வேண்டிய மீன், சிக்கனில் அது அதுக்கு தேவையான மசாலா சேர்த்து பிரட்டி சிப்லாக்கில் போட்டு ஃப்ரீஸ் செய்து விடுவேன்.

இப்படி செய்வதால் வாரத்தில் ஒருநாள் தான் நான் வெஜ் சுத்தம் செய்யும் வேலை இருக்கும். நான் வெஜ் சுத்தம் செய்த இடத்தை க்ளீன் செய்வது ஒரே தடவையில் முடிந்து விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி அக்கா, நன்றீ ...வீடு பராமரிப்பு பற்றி எதாவுது குறிப்பு இருந்தால் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்