என் மகளுக்கு 31/2 வயது ஆகிறது. அவளுக்கு தலையில் பொடுகு உள்ளது. அது போக ஏதாவது வழிமுறை கூறுங்களேன். முட்டயின் வெள்ளை பகுதி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வைத்தால் போய்விடுமா. உதவுங்கள் தோழிகளே....
என் மகளுக்கு 31/2 வயது ஆகிறது. அவளுக்கு தலையில் பொடுகு உள்ளது. அது போக ஏதாவது வழிமுறை கூறுங்களேன். முட்டயின் வெள்ளை பகுதி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வைத்தால் போய்விடுமா. உதவுங்கள் தோழிகளே....
தோழி...பொடுகு
தலை ரொம்ப வரண்டு போய் இருக்கும்.என் மகளுக்கும் இப்படித்தான்.அவளுக்கு தினமும் எண்ணை வைத்து வாரத்திற்கு 2,3 முறை தலைக்கு குளிக்க வைத்தால் பொடுகு இருக்காது.எண்ணை வைக்காமலோ குளிக்காமலோ விட்டால் வந்துவிடும்.
இது பற்றி தெரிந்த தோழிகள் பதிலளிப்பார்கள்.காத்திருங்கள்.
கவிதாசிவகுமார்.
anbe sivam
பொடுகு
தலைக்கு எலுமிச்சை சாறு தேச்சு 1/2 மணி நேரம் விட்டு தலைக்கு ஊற்றி விடுங்க. வாரம் ஒரு முறை செய்யுங்க. தினமும் எண்ணெய் தேச்சு விடுங்க. தலை காயாம பார்த்துக்கங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி கவிதா, வனிதா
நான் தினமும் தலைக்கு எண்ணை தேய்க்கிறேன். 2 நாளைக்கு ஒரு தடவை தலைக்கு குளிக்க வைக்கிறேன். எலுமிச்சை குளிர்ச்சி இல்லையா , சளி பிடிக்காதா.முட்டையின் வெள்ளை பகுதி தேய்க்கலாமா..
மீனா
எனக்கு முட்டை பற்றி தெரியல... எலுமிச்சை எப்படி இருக்கும்னு நல்லா தெரியும்... சளி பிடிக்காது. நல்லா பஞ்சு வெச்சு தேச்சு விடுங்க. கொஞ்சம் எரிச்சல் இருக்கும், ஆனா கண்டிப்பா நல்லா கேட்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
FOR PODUGU
பொடுகு வந்தால் அதற்கு உடனடி கவனம் தேவை.உங்கள் குலந்தைக்கு தனியாக சீப்பூ , TOWEL ,பயன்படுத்துங்கல். அதை
அடிகடி wash பன்னுங்கல்.மருதுவரிடம்
கான்பிப்பது நல்லது
GEETHAA
himalaya product
himalaya shampoo use pannungge..
பொடுகு பிரச்சினை நிரந்தரமாகப் போக
பொடுகு பிரச்சினை நிரந்தரமாகப் போக 1 கைப்பிடி மருதானி இலை, 1 கைப்பிடி கறிவேப்பிலை, 2 நெல்லிக்காய் போன்றவைகளை தண்ணீர் சேர்க்காமல் எலுமிச்சை சாறு மட்டுமே கலந்து மைய அரைத்து ஒரு ப்லாஸ்டிக் ஷீட்டில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு அடை தட்டி நிழலில் மட்டுமே உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளித்த அடுத்த நாள் தலைக்கு எண்ணெய் போடும் போது தலைக்கு தேவையான் அளவு தேங்காய் எண்ணெயை சிறிய பேனில் அந்த காய வைத்து எடுத்த இரண்டு அடைகளை சேர்த்து சிம்மில் வைத்து காய்ச்ச வேண்டும்.
பின்பு எண்ணெய் ஆறி சற்று வெது வெதுப்பான பதத்தில் இருக்கும் போது அந்த அடையை நீக்கிவிட்டு எண்ணெய்யை பஞ்சில் தொட்டு முடியை வகிடு வகிடாகப் பிரித்து முடியின் வேர்க்காலில் படுமாறு தலை முழுதும் நன்கு தேய்க்க வேண்டும்.
இது 2 வயதுக் குழந்தை முதல் எத்தனை வயது காரர்களும் பின் பற்றலாம். இது முடி கொட்டுதல், பொடுகு, நறை, செம்பட்டை போன்ற பிரச்சினைகளௌக்கு நல்ல மருந்து.
அதிகமாக மேற்கண்ட பிரச்சனைகள் இருந்தால் வாரம் 3 முறைய்ம், மற்றவர்கள் வாரம் 2 முறைய்ம் செய்யனும்.
இது எங்க அம்மா நாங்கள் சிறுவயதிலிருக்கும் போதிலிருந்தே இந்த முறையை கடைபிடித்து வராங்க. நானும் பற்பல ஷாம்பூகளால் பாதிக்கப்பட்டு கடைசியில் அம்மா வழிக்கே வந்துவிட்டேன்.
எந்த ஷாம்பூ போட்டு குளித்தாலும் இந்த முறையில் எண்ணெய் போட்டால் எந்த பிரச்சனையும் நேராது.
என் மகளுக்கும் 3 வயதாகிறது. வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வரும் போது ஏற்படும் தண்ணி மாறுதலால் பொடுகு, முடிகொட்டுதல் ஏற்பட்ட காரணத்தால் அவளுக்கும் இதே முறைதான். முடியும் நன்கு வளரும்.
சிரமம் பார்த்தால் பலன் இல்லைல.....
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ப்ரியா
சின்ன நெல்லிகாயா ? பெரிய நெல்லிகாயா ? கொட்டை நீக்கி விட வேண்டுமா ?
1 கைப்பிடி மருதானி இலை, 1 கைப்பிடி கறிவேப்பிலை, 2 நெல்லிக்காய் - அனைத்தும் காய வைத்து அரைக்க வேண்டுமா ?
இப்படி செய்தால் முடி கொட்டுவது நின்று விடுமா ?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
THALAI MUDI NIRAIYA
THALAI MUDI NIRAIYA KOTTUGIRATHU,MUDI KOTTUVADHU NIRKA,ADARTHIYAGA MUDI VALARA ENNA SEIYA VENDUM.PLS SOLLUNGS
ஹாய் வினோ...பெரிய
ஹாய் வினோ...பெரிய நெல்லிக்காயை விதை இல்லாமல் மேற்சொன்னவைகளோடு பச்சையாக அரைத்து பின்பு சிறு சிறு வில்லைகளாகத்தட்டி காய வைத்து எடுத்துக்கனும் பா....
கண்டிப்பா பலன் தெரியும் பா.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.