PCOS symptoms doubt

ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு.2 வருஷத்துக்கு மேல ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகல.ஆமா இந்த month tablet (harmoni ) சாப்டல.வழக்கம்போல periodum வரல.குழப்பம் தான் மிஞ்சியது.எனக்கு pcos இருக்குதானு டாக்டர் சொல்லல என்னோட ஸ்கேன் ரிப்போர்ட் லையும் வரல ஆனால் symptoms அப்படி தான் தெரியுது அப்டோமேன் sidela left & ரைட் சைடு திடீர் nu வலி வருது 5 secsla போயிருது.white discharge டெய்லி இருக்கு.my ovaries measures about 3.44*2.36cms lft:3.07*2.08 cms .androgen also in excess .facial hair வேற.period tab sapdalanna 3 months கு once தான் வரும்.bodyweight நார்மல் hairfall அதிகமா இருக்கு.plz friends யாருகிட்ட சொல்றதுன்னு தெரியாம புலம்பிட்டேன் தப்பா இருந்தா சாரி.எனக்கு pcos தானா ?.ovaries சைஸ் நார்மல் தானா.frndz உங்களின் விளக்கமும் ஆறுதலும் அவசியம் தேவை.rply பண்ணுங்க plz...

அன்பு தோழி... உங்க மன வருத்தம் புரியுது. ஆனா அதுக்காக வருத்தப்படாம என்ன சந்தேகமோ அதுக்கான செக்கப் செய்துடுங்களேன். எனக்கு இதை பற்றி தெரியாது, நீங்க வருத்தமா இருக்குன்னு சொன்னதும் கஷ்டமா போச்சு. நம்ம தோழிகள் தெரிஞ்சவங்க சொல்வாங்க. கவலைப்டாதீங்க... நம்பிக்கையோடு இருங்க. உங்களுக்காக எங்கள் எல்லோர் பிராத்தனைகளும் உண்டு. இந்த காலத்தில் மருத்துவம் ரொம்ப அட்வான்ஸ்டு... என்ன பிரெச்சனைன்னாலும் சரி பண்ணிடுவாங்க. அதனால் பயப்படாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai anis, கவலை வேண்டாம். டாக்டர் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் சாப்பிடவும். நீங்க எடை அதிகமாக இருந்தால் எடையை குறைக்கவும். அனைத்தும் சரியாகிவிடும்.

வனிதா அக்கா ரொம்ப நன்றி.எனக்காக
பிரார்த்தனை செய்யுங்க.
sharmila அக்கா ரொம்ப நன்றி.எடை
ஏறாமல் பாத்துகறேன்.

Anything is good for something

எனக்கு தெரிந்து உங்களுக்கு பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை.ஏன்னா ஒவ்வொரு ஓவரியிலேயும் 5cmமேல் இருந்தால் அதனை pcodஎன்று சொல்வார்கள்.அதிக மன அழுத்தம்,இட மாற்றம் இருந்தாலும் முடி அதிகம் கொட்டும்.மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.நல்ல இசைகேளுங்கள்.டிரிட்மெண்ட் எடுத்து கொள்ளுங்கள்.எல்லாம் சரியாகிவிடும்.ஓ.கேவா?

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மனோ அக்கா ரொம்ப நன்றி.இப்போ தெளிவாயிட்டேன்.ஆனால் androgen அதிகமா இருக்கு.என் அப்பாவின் குடும்பத்தில் எல்லோருக்கும் hirsutism ஓரளவுக்கு இர்ருக்கு.எனக்குதான் அதிகம்.periods 3 monthsku ஒரு தடவை வர்றது தான் பெரிய பிரச்னை.period சரியா வர என்ன பண்ணலாம்.எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் androgen marriageku அப்புறம் balance ஆகிடும்.bodyhairs எல்லாம் கொட்டிவிடும் என்று .அது உண்மைதானா? pcod ப்ரோப்லேம் இல்லைன்னா இது common androgen excess ஆ?தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க plz

Anything is good for something

மேலும் சில பதிவுகள்