kulandhai senungal

en payiyan porandhu 2ndu masam ahudhu.. evening ana senungi aludhutae erukan.. n8 varaikum aludhutae erukan.. doctor ta kaeta apdidhan kulandhainga alunu solraru.. edhuku ena panalam..

ம்ம்... முதல் குழந்தையா??? அதான் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் ஒவ்வொரு இழையா போட்டு கேட்டுகிட்டிருக்கீங்க ;)

உங்க இரண்டு கேள்விக்கும் இங்கையே பதில் சொல்றேன்... உங்க குழந்தைக்கு நீங்க பயன்படுத்தும் சோப்பே போதுமானது. வேறு எதுவும் வேண்டாம்... அதையே தொடர்ந்து பயன்படுத்துங்க. பொடி வகை ஏதும் வேண்டாம்.

இரவில் அழுவது சில குழந்தைகளுக்கு வழக்கம். சில நேரம் பகலில் போதுமான தூக்கம் இல்லைன்னா தூக்க கலக்கத்தில் மாலை நேரத்தில் சினுங்கும்... இரவு தூங்கும். அப்படி இருந்தா பகலில் அடிக்கடி தூங்க வைங்க. சில நேரம் மாலை நேரம் காற்று இல்லாம கூட அழும்... நல்ல காத்தோட்டமா படுக்க வைங்க. நல்ல வெய்யில் அடிக்கும் நேரம் என்றால் மாலை சாயும் போது ஒரு 5-6க்குள்ள குழந்தைக்கு சூடா தண்ணி ஊற்றி ஒரு குட்டி குளியல் போடலாம். அப்படி போட்டா குழந்தை அழாம நல்லா தூங்கும். உடம்பு வலி இருந்தா கூட சரி ஆகும். ஆனா குழந்தைக்கு சளி பிடிக்காம பாத்து செய்யுங்க.

அப்பறம்... இந்த மாதிரி சந்தேகத்துக்குலாம் புது இழை வேண்டாம்.. நீங்க புதுசுன்னு நினைக்கிறேன்... அதனால் உங்களுக்கு நானே இழை தரேன்...

http://arusuvai.com/tamil/node/21604

இதில் கேளுங்க, உடனே பதில் கிடைக்கும்... ஆனா தமிழில் கேட்கனும். சரியா??? :) தங்க்லீஷில் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு தப்பு தப்பா பதில் வரும் சில நேரம்... அதான் சொல்றேன். தோழிகள் பலர் இது போல் ஆங்கில தலைப்புகள், பஹ்டிவுகளை படிக்கவே மாட்டாங்க. அப்போ உங்களுக்கு அனுபவசாளிகள் பதில் கிடைக்காம போகலாம். கோவிக்காதீங்க... புதுசா வந்திருக்கீங்க, அதனால் சொல்லி தரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ராதிகா,
எனக்கு இப்ப 6 மாத குழந்தை இருக்கு,அவளும் அப்படிதான் பிறந்த 2 ம் மாதத்தில் இப்படி மாலை ஆனதும் அழுவாள் அழுது கொண்டே இருப்பாள்,இரவு தூங்கும் வரை கையில் வைத்து இருந்தால் பேசாமல் இருப்பாள்,நான் இங்கு வெளிநாட்டில் தனியாக கணவருடன் வசிக்கிறேன்,குழந்தை பிறந்த பிறகு கூட இரவு நான் தான் சமைப்பேன்,இரவு சமைக்க ஆள் கிடைக்க மாட்டார்கள்.என் கணவர் இரவு 8 மணிக்கு தான் வருவார்,எனக்கு என்ன பண்ணுவது என்பதே தெரியாது,கையில் வைத்து கொண்டே சமாளித்தேன்,குளிப்பட்டினாலும்,என்ன செய்தாலும் அழுது கொண்டுதான் மாலையில் இருப்பாள்.4 மாதத்திற்கு பிறகு தானாக சரியாகிவிட்டாள்.அவளுக்கு வேடிக்கை பார்ப்பதில் ரொம்ப விருப்பம்,அதனால் வெளியில் எடுத்து சென்றால் பேசாமல் இருப்பாள்,நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.எப்படியும் இன்னும் 2 மாதத்தில் தானாக சரியாகிவிடும் கவலை படாதீர்கள்

vanitha ka sry enta tamil frnt ella.. en payan prblmku solutn sonadhuku thkska..

பரவாயில்லைங்க... கீழே தமிழ் எழுத்துதவின்னு ஒரு லின்க் இருக்கு, அதில் போய் தமிழில் தட்டலாம். இல்லன்ன NHM ரைட்டரை கூகிலில் தேடி டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கங்க. :) ஈசியா தமிழ் தட்டலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

manju., nenga sona madriyae dhn en payanu seyivan pa..

மேலும் சில பதிவுகள்