நானும் சமைக்கலாமா?

மதிப்பிற்குரிய மன்றத்தினருக்கு
நானும் எனக்கு தெரிந்த சில சமையல் குறிப்புக்களை விளக்க படங்களுடன் இன்னும் ஒரு சில மாதங்களில் தரலாம் என நினைக்கிறேன். ஆனால் அவற்றை எவ்வாறு அறுசுவையில் சேர்பது என்று தெரியவில்லை. தபால் மூலமா? அல்லது எப்படி என்று விளக்கம் தாருங்களேன்.

do you know how to ready to the currry masala powder? tell me friends please

வெறும் குறிப்புகள் மட்டும் அனுப்ப விரும்புவோர் கீழே உள்ள "தொடர்புக்கு" என்ற பக்கத்தின் மூலம் எங்களுக்கு அனுப்பலாம். அல்லது feedback@arusuvai.com என்ற முகவரிக்கு நேரிடையாக மின்னஞ்சல் அனுப்பலாம். தொடர்ந்து குறிப்புகள் அனுப்ப விரும்புகின்றவர்கள் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கப்படுவர். அதில் இணைந்தவர்கள், குறிப்புகளை எங்களுக்கு அனுப்பாமல், நேரிடையாகவே இத்தளத்தில் வெளியிடலாம். அவர்களுக்கென்று ஒரு தனிப்பக்கம் கொடுக்கப்படும். அவர்களுக்கு வரும் கருத்துகள் அனைத்தையும் அறிந்து கொள்ளவும் முடியும். தேவையான மாற்றங்களை செய்து கொள்ளவும் இயலும்.

விளக்கப்படங்களுடன் கூடியக் குறிப்புகளை தற்போது நாங்கள் மட்டுமே வெளியிடும் வசதி உள்ளது. நீங்கள் நேரிடையாக சேர்க்க இயலாது. உங்களிடம் உள்ள படங்களையும் அதற்கான குறிப்பையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு எப்படி அனுப்பவேண்டும் என்றத் தகவலை தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு நான் அனுப்பியுள்ளேன். பார்த்து அறிந்து கொள்ளவும்.

தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. உங்களது படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

நன்றி அன்பிற்குரிய admin ரொம்ப அழகாக கூறி இருந்தீர்கள் மீண்டும் ஒரு முறை நன்றி.

அன்பிற்குரிய நண்பி nageswari
நாம் கறி மசாலா இவ்வாறு தான் செய்வோம். ஆனால் இதற்கு இன்னும் வேறு சில முறைகளும் உண்டு .நான் அறிந்ததை இங்கு தருகிறேன். தேவையான பொருட்கள்

சின்ன சீரகம் 250 g
மல்லி 200 g
பெ. சீரகம் 20 g
மஞ்சள் 50 g
வேர் கொம்பு சிறிய துண்டு
ஏலக்காய் 5
மிளகு 20g

இவற்றை காய வைத்து அல்லது மெல்லிய சூட்டில் வறுத்து அரைத்து, அரிதட்டில் அரித்து எடுத்துக்கொள்ளவும். காரம் அதிகமாக தேவை என்றால் 4 அல்லது 5 காய்ந்த மிளகாயை சேர்த்து கொள்ளலாம். இவற்றை மீன்,இறைச்சி கறிகளுக்கும் சாம்பார் மற்றும் மரக்கறி வகை சமையல்களுக்கும் உபயோகிக்கலாம். ஒரு முறை செய்து பார்த்து விட்டு சொல்லும் OK.

thank you thayaparan vagitha .naan ennum try pannavillai.try pannivitu eppadi erukkunu solran. erunthalum kurippu kidaithathume iam very very happy.thanks a lot.

hi im from malaysia. Manjal yenbathu yentha manjal. thayavu seithu vilakkavum. Nandri

*** Im just a beginner and trying myself at cooking section.

வேர் கொம்பு என்றால் என்ன? உங்களுடைய தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதே.. நீங்கள் இலங்கை தமிழரா? உங்களது பெயரை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும்? இலங்கை தமிழரென்றால் இலங்கைச் சமையலை எங்களுக்கு கற்று கொடுங்கள். நன்றி.

அன்பின் jayashiri
மஞ்சளில் 2 வகை தான் நான் அறிந்தது
1-கறி மஞ்சள் -பொடி செய்து கறிகளுக்கு பயன் படுத்தலாம்.இது கறிக்கு வாசனையாகவும் மற்றும் மீன்,இறைச்சி என்பவற்றை சமைக்கும் பொழுதும் பயன் படுத்தலாம்.ஏன் என்றால் அவற்றில் உள்ள வெடுக்கு மணம் போய் விடும் அப்பொழுது எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்க்ள்.
2-கஸ்தூரி மஞ்சள் -இதை பெண்கள் மேனிக்கு பூசி குளிப்பார்கள். இதை நான் இந்தியாவிற்கு விடுமுறையில் சென்ற போதுதான் அதிகம் பார்திருக்கிறேன்.
வேறு யாராவது இதற்கு நல்ல விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.
நன்றி

Thangaal Karuthukku Nandri.

மேலும் சில பதிவுகள்