தேதி: February 24, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நூடுல்ஸ் - 100 கிராம்
தக்காளி - 2
குடைமிளகாய் - 2 சிறியது
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - இரண்டு பல்
வெங்காயத்தாள் - சிறிதளவு
டொமேட்டோ சாஸ் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, குடைமிளகாய், இஞ்சி, பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நூடுல்ஸ் பாக்கெட்டில் போட்டுள்ளபடி தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

வெந்த நூடுல்ஸை ஸ்ட்ரைனரில் போட்டு குளிர் நீரை அதில் ஊற்றி தண்ணீர் முழுவதையும் வடித்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, குடைமிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்க்கவும்.

அதனுடன் சிறியதாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

தக்காளி நன்கு மசிந்து கரையும் வரை வேக விடவும்.

இப்பொழுது வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு பிரட்டவும். டொமேட்டோ நூடுல்ஸ் ரெடி.

டொமேட்டோ நூடுல்ஸின் மேல் வெங்காயத்தாள் மற்றும் டொமேட்டோ சாஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Comments
Packia
Packia noodles pakumpotha super.naan tomata noodles tri panala.tri pandran.ithu randu nalliku munadi saitha noodles thana
Be simple be sample
பாக்யா
ஹாய் பாக்கிய சொன்ன மாதிரியே நூடுல்ஸ் குறிப்பு அனுப்பிடிங்களா நான் நைட் இதை பண்ணிட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள் பாக்கியா
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி..
"எல்லாம் நன்மைக்கே"
packialakshmi
பார்க்கவே ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. நான் பெரிய பக்கெட் நூடுல்ஸ் வாங்கி வச்சிருக்கேன். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஈவ்னிங் செய்து விட்டு பதிவு போடுறேன். வாழ்த்துக்கள்
ரேவதி
ஆமா, அப்போ செய்தது தான்.. நீங்களும் செய்து பாருங்க..
"எல்லாம் நன்மைக்கே"
பாக்யா
உங்ககுறிப்பு டொமேட்டோ நூடுல்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு. இன்னும் பல குறிப்புகள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்.
தனா
மிக்க நன்றி, செய்து பாருங்க.. எல்லோருக்கும் பிடிக்கும்..
"எல்லாம் நன்மைக்கே"
கௌதமி
ம்.. இன்னைக்கே வீட்டில் செய்து அசத்தீடுங்க.. தக்காளி உங்க விருப்பப்படி சேர்த்துக்கலாம்..
"எல்லாம் நன்மைக்கே"
வினோஜா
நன்றி.. தக்காளி சுவையுடன் வித்தியாசமா இருக்கும்.. நிச்சயம் எனக்கு தெரிந்த குறிப்புகளை குடுப்பேன்..
"எல்லாம் நன்மைக்கே"
உங்ககுறிப்பு டொமேட்டோ
உங்ககுறிப்பு டொமேட்டோ நூடுல்ஸ் பார்க்கவே அருமை இருக்கு. Superb
Mrs.Anantharaman
பாக்யலட்சுமி
பாக்யலட்சுமி உங்கள் குறிப்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. எளிமையான செய்முறை... வாழ்த்துகள்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
பாக்யலட்சுமி
பாக்யலட்சுமி உங்கள் குறிப்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. எளிமையான செய்முறை... வாழ்த்துகள்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
Packialakshmi
நான் உங்க நூடுல்ஸ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என் மகன் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டேன். taste, flavour நன்றாக இருந்தது. மொத்தில் சூப்பர்.
பாக்யா
ஹாய் பாக்கியா டொமேட்டோ நூடுல்ஸ் செய்தேன் என் பொண்ணுக்கு ரொம்ப பிடித்தது
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
டொமெட்டோ நூடுல்ஸ்
பாக்கி, டோமேட்டோ நூடுல்ஸ் சூப்பர் பா. இன்னைக்கு நைட் இதான் டின்னர்க்கு. கடைசி படம் அட்ராக்ஷனா நல்லார்க்கு. வாழ்த்துக்கள் பா :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பாக்யா
டொமேட்டொ நூடுல்ஸ் குறிப்பு நல்லா எளிமையான செய்முறை, நல்லா வந்திருக்கு. கடைசிப்படம் வெங்காயத்தாள் தூவி அலங்கரித்திருப்பது பார்க்க அழகா இருக்கு!. வாழ்த்துகள்.
அன்புடன்
சுஸ்ரீ
doubt
May i know which brand noodles u used
reply me soon
HAVE A NICE DAY
பாக்கியா
ரொம்ப நல்லா இருக்கு பார்க்க :) நான் இது போல் வித விதமாலாம் நூடில்ஸ் ட்ரை பண்ணதே இல்லை... இனி ட்ரை பண்ணிடுவோம். கடைசி படம் அழகு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாக்யா வாழ்த்துக்கள்.
பாக்யா பார்க்கவே ரொம்ப கலர்புல்லா இருக்கு. எளிமையான ரெசிப்பி. வாழ்த்துக்கள்.
பாக்கியா
வாழ்த்துக்கள் பாக்கியா.ரொம்ப ஈஸியா இருக்கு.செய்துட்டு சொல்றேன்.கடைசி படம் ரியலி சூப்பர்.
Expectation lead to Disappointment
nandri
கல்பனா மிக்க நன்றி..குடைமிளகாய் இல்லாமலும் செய்யலாம்..நம் விருப்பம் தான்
"எல்லாம் நன்மைக்கே"
சுஸ்ரீ
ஆமாம் இது ரொம்பவே ஈஸி தான்.. அவசியம் செய்யுங்கள்..
"எல்லாம் நன்மைக்கே"
ஜெயந்தி
நான் செய்தது சோபா நூடுல்ஸ்..இது buchwheat_ல் தயாரித்தது.. நம்ம ஊர் கைக்குத்தல் அரிசி சத்துக்கு நிகரானது..நீங்களும் செய்து பாருங்க..
"எல்லாம் நன்மைக்கே"
நன்றி
வனி..மிக்க நன்றி..இதையும் ட்ரை பண்ணி பாருங்க..நிச்சயம் பிடிக்கும்..
காயு ரொம்ப thanks தங்களுடைய வாழ்த்துக்களுக்கு..
"எல்லாம் நன்மைக்கே"
மீனாள்
நன்றி.. அவசியம் செய்து பாருங்கள்..
"எல்லாம் நன்மைக்கே"
பாக்யா
பாக்யா,
ஈஸி டொமேட்டொ நூடுல்ஸ்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
பாக்யா
பாக்யா....இன்றுதான் இந்த ரெசிபி பார்த்தேன். சூப்பரா இருக்கு! என் பேத்திக்கு நூடில்ஸ் பிடிக்கும். சத்தான இதை செய்து கொடுக்கிறேன்! வாழ்த்துக்கள் பாக்யா!
hi packialakshmi
Tomato noodles சூப்பர். செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்
பாக்யா
பாக்யா நூடுல்ஸ் சூப்பர் பா.அடுத்த முறை செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
டொமேட்டோ நூடுல்ஸ்
நான் எனது மகளுக்கு இதனுடன் இறால் போட்டு செய்து கொடுத்தேன் மிகவும் சுவையாக இருந்தது, இதெ போன்று எளிமையான குழந்தைகளிற்கு ஏற்ற உணவுகளை தொடர்ந்து தாருங்கள்
டொமேட்டோ நூடுல்ஸ்,
பாக்ய லக்ஷ்மி,
டொமேட்டோ நூடுல்ஸ் பார்க்கவே அழகா இருக்கு.எல்லா படங்களும் நல்லா வந்திருக்கு.கடைசி படத்தின் ப்ரெசண்ட்டேஷன் அழகா இருக்கு.வாழ்த்துக்கள்.
thanks
ராதாம்மா நிச்சயம் செய்து பாருங்கள்.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..
கவிதா மிக்க நன்றி.. அவசியம் செய்து பாருங்க..
ஸ்வர்ணா ரொம்ப தேங்க்ஸ்.. நன்றாக வரும்.. செய்யுங்க..
"எல்லாம் நன்மைக்கே"
packia
ஹாய் பாக்யா இன்னைக்கு காலையில உங்க டொமேட்டோ நூடுல்ஸ் செஞ்சேன்பா/. சூப்பரா இருந்துச்சுப்பா. நல்ல டேஸ்டா இருந்துச்சு/. தாங்க்ஸ்பா. தொடர்ந்து குறிப்பு கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்.