இட்லி பொடி

தேதி: February 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (17 votes)

 

உளுத்தம் பருப்பு - கால் கிலோ
கடலை பருப்பு - 100 கிராம்
கட்டி பெருங்காயம் - 5 கட்டி
பூண்டு - முழுதாக ஒன்று
கறிவேப்பிலை - 10 கொத்து
வரமிளகாய் - 30 எண்ணிக்கை அல்லது காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து, அதில் கடலை பருப்பு சேர்த்து லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
அதோடு உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
கறிவேப்பிலை சேர்த்து பருப்பு வகைகள் நன்கு சிவக்க வறுக்கவும்.
கடைசியாக இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்சியில் முதலில் மிளகாயும், உப்பும் சேர்த்து பொடிக்கவும். பின் பருப்பு வகைகளை சேர்த்து கொர கொரப்பாக பொடிக்கவும். சுவையான இட்லி பொடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி கௌதமி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எல்லோருக்கும் அவசியமான பயனுள்ள குறிப்பு.. செய்முறை மிகவும் நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் ஸ்வர்ணா...

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் ஸ்வர் வழக்கம் போல எளிமையா சூப்பர் படங்களோட தந்திருக்கீங்க. அம்மாவும் இப்படி தான் செய்வாங்க ஆனா கறிவேப்பிலை சேர்த்ததில்லை ஸ்வர் இந்த முறை சேர்க்க சொல்லி சொல்றேன். சூப்பர். ரொம்ப அவசியமான குறிப்பு ஸ்வர்

சூப்பர்... இட்லி பொடி....... எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்.....
படங்கள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு..... எடுத்தது யாரு எங்கண்ணா
தானே...... :)
நா இட்லி பொடி வழக்கமா கடைல தான் வாங்குவேன்..... இந்த பொடியை பாக்கும்
போதே ரொம்ப ஆசையா இருக்கு.... வீட்டில் செய்துட வேண்டியதுதான்......

ஹாய் ஸ்வர்,

இட்லி பொடி எனக்கு ரொம்ப பிடிக்கும்,விருப்ப பட்டியல்ல

சேர்த்திட்டேன்.அவசியமான குறிப்பை வழக்கம் போல அசத்தலான படங்களோட

கொடுத்திருக்கீங்க,வாழ்த்துக்கள் ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

ஸ்வர்ணா,உங்க இட்லி பொடி பார்த்ததும் செய்துட்டேன்.பூண்டு வாசனையுடன் சூப்பரா இருக்கு.வழக்கமா பருப்புகளை ட்ரை ரோஸ்ட் தான் பண்ணுவேன்.இந்த முறை கொஞ்சமா எண்ணெய் விட்டு வறுத்தேன்.நல்லா இருக்கு.நல்ல குறிப்புக்கு நன்றி.

சூப்பர் கம கம இட்லி பொடி... செய்துருவோம் சீக்கிரமே, அதான் வீட்டுக்கு வந்தாச்சே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஸ்வர் அம்மாவும் இப்படி தான் செய்வாங்க வாழ்த்துக்கள் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

பாக்யா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழி எப்படி இருக்கப்பா? பேசியே ரொம்ப நாள் ஆகுதே
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.கறிவேப்பிலை சேர்த்து செய்தா சுவையும் மணமும் கூடுதலா இருக்கும்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் தீப்ஸ் எப்படிப்பா இருக்கீங்க பார்க்கவே முடியல உங்களை?
த்ருசி குட்டி நல்லாருக்காரா?

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தீப்ஸ்,கண்டிப்பா செய்து பாருங்க பா.படங்கள் எல்லாம் நான் எடுத்ததுதானுங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிடா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் அன்பு அதுக்குள்ள செய்து பார்த்தாச்சா ரொம்ப சந்தோசம் பா,உங்களுக்கு பிடிச்சது கூடுதல் சந்தோசம் :))))
மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி மிக்க நன்றிங்க,வீட்டுக்கு வந்தாச்சா என்னடா பார்க்க முடியலயேன்னு நினைச்சேன்.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் தேவி எப்படி இருக்க? நீ எப்போ வரன்னே தெரிய மாட்டேங்குது

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
பொடிவகைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம்..
அவசியம் செய்து பார்க்கிறேன்..
பிரெஷ் கறிவேப்பிலை தான் சேர்க்கணுமா?
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
கவிதா

swarna akka photo & kurippu super

ஹாய் கவி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிப்பா.ப்ரெஷ் கறிவேப்பிலைதான் சேர்க்கனும்னு அவசியம் இல்லைப்பா கிடைக்காத ஊரில் என்ன பண்ணமுடியும் அதனால நீங்க பழசா இருந்தாலும் சேர்க்கலாம்.எப்படி சேர்த்தாலும் வாசனை வந்திடும் பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வள்ளி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா,

இட்லிப்பொடி சூப்பர்! போட்டோஸ் எல்லாம் பளிச், பளிச்!! :)

எனக்கு எப்பவும் இட்லிப்பொடி அம்மா, இல்லைன்னா மாமியார் வீட்டில இருந்து அரைத்து கொடுத்திடுவாங்க... அதிலேயே ரகரகமா, கறிவேப்பிலை சேர்த்து, சேர்க்காம என்று! எனக்கு, அரைக்கும் வாய்ப்பு கிட்டும்போது கண்டிப்பா உங்க மெத்தட்தான்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

SUPER. THANK YOU

சுவா, இட்லி பொடி அம்மா கைப்பக்குவத்தில் பண்ற அதே டேஸ்ட் பா. கறிவேப்பிலை இங்கே கிடைக்காததால பண்றதில்ல. ஊருக்கு போனா தான் அம்மா கையால பண்ணீ ஆசை தீர சாப்பிடனும். அம்மாவை ஞாபகப்படுத்திட்டீங்க ;( படங்கள் வழக்கம்போல சூப்பர் பா. எங்கண்ணாவா? கொக்கா? வாழ்த்துக்கள் பா. அண்ணாக்கும் சேர்த்து சொல்லிடுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hai swarna

idly podi super. today poyi panniduven. but one doubt. katti perunkayam than sekkanuma. i have perungayathool ma. sekkalama?

வாழ்த்துக்கள்.

உங்கள் குறிப்பை செய்து பார்த்தேன் மிக மிக அருமை .மிக சுலபமாக செய்ய கூடிய பொடி குறிப்பு .எந்த ஒரு மிகை படுத்துதல் இல்லாத குறிப்பு .

இன்று உங்கள் இட்லி பொடி செய்தேன் நல்லா வாசமா சுவையா இருந்தது...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

I tried yesterday,it was very tasty. Thank u very much.

எண்ணை செர்பதால் எதினை நாள் டப்பவில் வைக்கலாம் . நாள் ஆனால் எண்ணை வாசனை வவருமா? இல்லை fridge இல் தான் வைக்க‌ வெண்டும‌?

Nevr tel ur problms to any1.20% don't care nd d othr 80% r glad u hav thm.