ஆரம்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்யக்கூடாது ?

இன்னிக்கி தான் நான் கர்ப்பம்னு தெரிஞ்சுது . ரொம்ப சந்தோஷமா இருக்கு. நெடு நாள் கனவு. இன்னிக்கி தான் அந்த வரம் கிடைச்சிருக்கு. அந்த பெரும் பொக்கிஷத்த பத்திரமா வச்சிருக்கணும்னும் பயமா இருக்கு. இப்ப தான் 5 வது வாரம் . எனக்கு என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாதுணு தெரில. அது மட்டும் இல்ல முதல் 5 மாதம் என்ன விஷயங்கள் செய்யணும், செய்யக் கூடாதுணு தெரில. என்னுடையது பெற்றோர் எதிர்த்து செய்த காதல் திருமணம்.
இப்ப பேச ஆரம்பிச்சசு . ஆனால் , எனக்கு பக்கத்தில் இருந்து எனக்கு தேவையான விஷயங்கள் சொல்ல பெரியவங்க யாரும் இல்ல. அதனால, உங்களுக்கு தெரிந்த விஷயங்கல எனக்கு சொல்லி. எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வழி சொல்லுங்க?

வாழ்த்துக்கள் சக்திலதா...இந்த லிங்க் பாருங்க...
http://www.arusuvai.com/tamil/node/19991

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்க சொல்லும் போதே தெரியுது எவ்வளவு சந்தோசமா இருக்கீங்கனு. வாழ்த்துக்கள். நல்ல டாக்டரா பாருங்க அவங்க சொல்வதை வைத்து தான் நீங்க வேலை பார்க்கணுமா வேண்டமா என்று தெரியும். டாக்டர் கிட்ட போற வரையும் கடினமான வேலைகள் செய்யதீங்க. வெயிட் தூக்கவே கூடாது. நீங்கள் விரும்பியவற்றை சாப்பிடுங்கள். கூடுமான வரை சூட்டைக் கிளப்பும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். ட்ரவல் செய்யாதீர்கள். folic acid மருந்துகளை எடுத்து கொள்ளுங்கள் அது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பிடித்த பாடல்களை கேட்டு மனதை சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள். பழங்கள் நிறைய உண்ணுங்கள்.

congrats pa..
take care of u nd kutty papa...
eat healthy foods nd fruits....
all the best

ALL IS WELL

வாழ்த்துக்கள் சக்திலதா

இப்போ பேச ஆரம்பிசிடாங்கள்ள, குழந்தை பிறக்கும் போது உங்கள் உறவுகள் அனைவரும் உங்கள் பக்கத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். எப்பவும் சந்தோசமா
இருங்க, டென்ஷன் ஆகாதிங்க. நல்ல படியா, குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள். நிறைய காய், பழங்கள், தினம் ஒரு கீரை, வேக வாய்த்த முட்டை சாப்பிடுங்கள். தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுங்கள். அயன் , கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். முதல் 5 மாதங்களுக்கு, தினமும் 4 பாதாம்பருப்பை முதல் நாள் இரவு ஊறவைத்து
அடுத்த நாள் காலையில் தோல் நீக்கி சாப்பிடுங்கள், இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நன்கு உதவும். டாக்டரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுங்கள். 5 மாதம் வரை கவனமாக இருங்கள். கஷ்டமான வேலை செய்ய வேண்டாம். வெயிட் தூக்க வேண்டாம்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கர்ப்பிணிகளின் கவனத்திற்க்கு - http://www.arusuvai.com/tamil/node/7855
pregnant - advice please - http://www.arusuvai.com/tamil/node/8027
கர்ப்பிணி பெண்கள் - உணவு-http://www.arusuvai.com/tamil/node/1816
tips please for eatable items and non eatable in early pregnancy-http://www.arusuvai.com/tamil/node/16326
கர்ப்பிணிப் பெண்களின் உணவு - http://www.arusuvai.com/tamil/node/3407
என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் - http://www.arusuvai.com/tamil/node/9520
6வாரம் கர்ப்பம் எந்த பயிர் வகைகள் சாப்ட வேண்டும்-http://www.arusuvai.com/tamil/node/16838

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

valthukkal tholi....take care

அந்த லிங்க் எல்லாம் பாருங்க...எனக்கு தெரிஞ்சது...(படிச்சு தெரிஞ்சுகிட்டது) இங்க சொல்றேன்...

1)கால்சியம் சத்து நிறைந்த கம்பு, தினை, கேழ்வரகு, பால், நார்ச்சத்து நிறைந்த காய்கறி வகைகள், பழம், புரோட்டீன் சத்து நிறைந்த தானிய வகைகள் முக்கியமாக கொண்டைக் கடலை, காராமணி, முளை கட்டிய பயறு வகைகள் சாப்பிடுவது நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் பொரித்த மீன்களைத் தவிர்த்து குழம்பு மீன்களை நிறைய சாப்பிடலாம். வடிகட்டாத ஜூஸ் வகைகளைச் சாப்பிடலாம். கிழங்கு வகைகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து தோலை நீக்காமல் சாப்பிடுவதும் நல்லது

2)வழக்கமாக அருந்தும் நீரைவிட எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நீர் அருந்த வேண்டும். இது உடலில் அதிக வறட்சியை ஏற்படுத்தாமல் தடுக்கும். ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் வரை சாப்பிடலாம். வைட்டமின்-சி சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி பழ வகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

3)தினம் ஒரு கீரை சமையல், உலர்ந்த திராட்சை, நாட்டு வெல்லம் முதலியவற்றில் இரும்புச் சத்து போதுமான அளவு பெறலாம். புதினா, கொத்தமல்லியிலும் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. கர்ப்பமான பெண்கள் தினம் ஒரு வேளை புதினா அல்லது கொத்தமல்லியைத் துவையல் செய்து ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டாலே போதும்.

3)தினம் அரை லிட்டர் பால் அருந்துவது நல்லது. வேக வைத்த முட்டையும், மோர் சாப்பிடுவதும் ஆரோக்கியத்தைத் தரும். சிலருக்கு வாயு தொந்தரவு ஏற்பட்டு ஏப்பம் உண்டாகும். இந்த நேரத்தில் சூடான பாலை அரை கப் அருந்தலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவருமே தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான பால் அருந்திவிட்டு செல்வது நல்ல உறக்கத்தைத் தரும்.

4)பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, கொய்யா, கேரட், முக்கியமாக வேர்க்கடலை, பாதம் போன்றவற்றில் புரோட்டீன் சத்து அதிக அளவில் இருக்கும். வாரத்துக்கு முறை ஒரு கப் சோயா மாவை, கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து தோசை அல்லது ரொட்டி செய்து சாப்பிடுவதும் புரோட்டீன் சத்தை அதிகரிக்கச் செய்யும்.

5)வெளியிடங்களில் அசைவ உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. வெளியில் செல்லும்போது சூடான தண்ணீரை ஆற வைத்து எடுத்துச் செல்வதும் நலம். அதேபோல் குளிர் பானங்கள், ஐஸ் போட்டுத் தயாரித்து தரும் ஜூஸ் வகையைத் தவிர்த்து நிறைய பழங்களைச் சாப்பிடலாம். பழங்களில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தருவதுடன் மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

6)காய்கறிகளை பொரியல், வறுவல் செய்து சாப்பிடுவதைவிட, இட்லி போல் ஆவியில் வேக வைத்து சாலட் முறை-யில் சாப்பிடுவது நல்லது.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எல்லா தோழிகளுக்கும் ரொம்ப நன்றி .
சாயங்காலம் தான் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்தேன். நீங்க எல்லாம் சொன்னது போல தான் டாக்டர் சொன்னாங்க.
பழம் சாப்பிடலாமா?
அது தான் என் சந்தேகம். எங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்க. 4 மாதம் வரைக்கும் பழம் சாப்பிடாதனு சொல்லுறங்க. பப்பாளி , அண்ணாசி, பலா இது தான் சாப்பிட வேணாம்னு டாக்டர் சொன்னாங்க. ஆனா, எங்க அம்மா பழமே சாப்பிட வேணாம்னு சொல்லுறங்க . பழம் ரொம்ப சக்கரை அதிகம் அதனால வேண்டாம்ணு சொல்லுறங்க. என் உடம்புக்கு ஸ்வீட்டா சாப்பிட்டா மாதவிலக்கு வந்துடும், அதனால எடுத்துக்க வேணாம்னு சொல்லுறங்க. இது சரியா, இல்ல நான் பழம் சாப்பிடலாமா? எனக்கு ஆரஞ்சு, மாதுளம், ஸ்ட்ராபெர்ரி ரொம்ப பிடிக்கும். இத்ுலாம் சாப்பிடலாமா? எனக்கு கொழப்பமா இருக்கு.

பழங்கள் சாப்பிடலாம். பழங்களில் இருக்கும் இனிப்பினால் மாத விலக்கு வராது. மாதுளம் பழம் கர்ப்ப பையை வலுவாக்கும். இளநீர், தர்பூசணி இவற்றில் போலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. ஆப்பிளில் எ வைட்டமின் எ இருக்கிறது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் தேவியான அளவு தண்ணீர் சத்து கிடைக்கும். ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு ஆரஞ்சு இல் உள்ள சத்து ஒரு பெரிய நெல்லிக்காயில் கிடைக்கும். பொதுவாக பலருக்கு கர்ப்ப காலத்திலும், அயன் ரிச் food அதிகமாக எடுக்கும் பொது constipation வரும். அதை சரி பண்ண வாழைப்பழம் ரொம்ப நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள். முதல் 5 மாதங்களுக்குள் குழந்தையின் அனைத்து உறுப்புகளும் develop ஆயிடும். அந்த சமயங்களில் நாமும் நல்ல சத்தான உணவு எடுத்து கொள்ள வேண்டும். அம்மா சொன்னதை பற்றி எதாவது பயம் அல்லது சந்தேகம் இருந்தால் udane டாக்டரிடம் போன் பண்ணி கேட்டுவிடுங்கள்.
grapes சாப்பிட வேண்டாம் என்று எனக்கு சொன்னார்கள். ஏன்னா அது மேல நேரடியா பூச்சி மருந்து அடிக்கிரதனால உடம்புக்கு நல்லதில்லைன்னு சொன்னாக.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ரொம்ப நன்றி பா...
நீங்க எல்லாரும் அப்பப்போ எனக்கு டிப்ஸ் கொடுத்துடே இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். ஏன்னா , உங்க எல்லார்க்கிட்டயும் பேசுறது எனக்கு ரொம்ப சந்தோஷமா , அதே சமயம் கும்பலா நீங்க என் பக்கத்துல இருந்து என்கிட்ட பேசுற மாதிரி சூப்பாரா சந்தோஷமா இருக்கு. நான் எப்பவும் கும்பலா இருந்து பழகப்பட்டவ . இப்ப என் புருஷன், மாமியார் அவளோ தான். இப்ப உங்ககிட்ட பேசும் போது சொந்தம் மாதிரி இருக்கு.

மேலும் சில பதிவுகள்