என் குறிப்புகள் காணாமல் போகுதே.

என் குறிப்புகள் காணாமல் போகுதே..எங்க போகுதுன்னு தெரியலையே..இன்று கொடுத்த மோர் குழம்பு குறிப்பு முன்பு கொடுத்த மீன் ரோஸ்ட் குறிப்பெல்லாம் எங்க போச்சு?

தளிகாக்கா நீங்க கொடுத்தது பூசணிக்காய் போர்க்குழம்பு தானே. அதான் முகப்பில் இருக்கே. நீங்க கவனிக்கலயா. இல்ல வேற எதும் கேக்குறீங்களா. காணோம்னு சொன்னீங்களென்னு சொன்னேன். நான் எதும் தெரியாம பதிவிட்டிருந்தா.தவறா எடுத்துக்காதீங்க.

தளிகா நீங்க முதலில் அறுசுவையில் லாகின் பண்ணியிருக்கீங்களான்னு பாருங்க. லாகின் பண்ணாம அறுசுவை ஓப்பன் பண்ணினால் சில பல மணி நேரங்களுக்கு முன்பு உள்ள பதிவுகள்தான் தெரியும். உங்க பூசணிக்காய் மோர்க்குழம்பு, பாகற்காய் ரோஸ்ட் வித் சாஸ் எல்லாம் பத்திரமா முகப்பில் இருக்கு :). மீன் ரோஸ்ட் உங்கல் குறிப்புகளில் இருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சலாம் தளிகா மேம் ,நான் உங்களிடம் மைசூர் பாக் பற்றி சந்தேகம் கேட்டிருந்தேன்,முடிந்தால் பதில் அளிக்கவும்.இங்கே குறுக்கிட்டதை தவறாக நினைக்க வேண்டாம் .என் கீபோர்ட் சரியாக வேலை செய்யாது,எனவே என்னால் விரிவாக எழுத முடியலே

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அறுசுவை நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த தளத்திற்கு நான் புதியவள்.. எனது ஆக்கங்களை எவ்வாறு பதிவது என்று புரியவில்லை.. சமையல், அழகு குறிப்புக்கள் போன்றவற்றை எப்படி இந்த தளத்தில் பிரசுரிப்பது தோழிகளே!! எனக்கு உதவுங்கள்.. நன்றி. பிழை இருப்பின் மன்னிக்கவும்.
அன்புடன்-பிரியை

பிரியை அறுசுவைக்கு அன்போடு அழைக்கிறேன் வருக வருக :)

உங்கள் ஆக்கங்களை இந்த முகவரிக்கு அனுப்புங்க

arusuvaiadmin@gmail.com

மேலும் நீங்க மன்றத்துக்கு போய் பார்த்தீங்கன்னா புரியும் என்ன கேள்வி கேட்கனுமோ அதற்க்கான தலைப்புகள் ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் அதில் போய் உங்க கேள்விகளை கேட்கலாம் அப்படி இல்லை எனில் புதிய கேள்வி சேர்க்கன்னு இருக்கு பாருங்க அதை கிளிக் பண்ணி உங்க கேள்விகளை கேட்கலாம்.

என்ன சந்தேகம்னாலும் கேளுங்க தோழிகள் பதில் சொல்லுவாங்க இதற்க்கு ஏன் மன்னிப்பெல்லாம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

nanri suvarna

மேலும் சில பதிவுகள்