கொத்து பருப்பு

தேதி: July 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தேங்காய் விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலை
இஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்
பசு நெய் - அரை ஸ்பூன்


 

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கழுவி, தக்காளி, வெங்காயம் வெட்டிப்போட்டு, பச்சை மிளகாய் போட்டு வேகவைக்கவும்.
நன்றாக வெந்தவுடன், இன்னொரு பாத்திரத்தில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு பொன்முறுகலாகும் போது, வெந்த பருப்புகளைக் கொட்டி, அதனுடன் தேங்காய் விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பசு நெய் விட்டு இறக்கவும்.


இது ஆப்பத்திற்கு ஒரு அருமையான சைட் டிஷ். குழந்தைகளுக்கு வெள்ளை சோறோடு சேர்த்து பிசைந்தும் கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்