தேதி: February 29, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நீள கத்தரிக்காய் - 2
பூண்டு - 5 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி/காரத்திற்கேற்ப
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை 2 இன்ச் அளவு நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, அதில் பூண்டு, கத்தரிக்காய் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து காய் வேகும் வரை விடவும். ரொம்பவும் குழைய வேண்டாம். (விரும்பினால் ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி சேர்க்கலாம்.)

காய் வெந்ததும் அதை வடிக்கட்டி, தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து சாம்பார்பொடி போடவும். சில நொடிகளே சாம்பார் பொடியை வதக்கி, வேக வைத்த காயைக் கொட்டவும்.

எல்லாமாக சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் சாம்பார்பொடி வாசனை போக வதக்கி எடுக்கவும். உப்பு சரிப்பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். வெகு சுலபமாக செய்யக்கூடிய கத்தரிக்காய் பொரியல் தயார்! வீட்டில் வெங்காயம், தக்காளி எதுவுமே இல்லையென்றாலும் கூட சட்டென்று செய்துவிடக் கூடிய சுலப கத்தரிக்காய் பொரியல் இது. தயிர் சாதத்துடன் சாப்பிட சூப்பரான மேட்ச்சாக இருக்கும்.

Comments
Susri
மறுபடியும் நல்ல ரெசிபி கொடுத்து இருக்கீங்க. கத்திரிக்காய் பார்க்கவே சூப்பரா இருக்க. சிம்பிள், சுவையான ரெசிபி கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள். படங்கள் அருமையா வந்திருக்கு.
சுஸ்ரீ
வாவ்... என்னங்க... எல்லாரும் போட்டோவும் குறிப்புமா கலக்குறீங்க ;) லாவிதும் போட்டோ சூப்பர், உங்களோடதும் சூப்பர். ரெசிபி ரொம்ப சிம்பிள், சுவையான குறிப்பு. செய்துடறேன் இன்னும் ஒரு 2 நாளில். வாழ்த்துக்கள் சுஸ்ரீ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஸ்ரீ
சுஸ்ரீ சிம்பிள் பொரியல்,பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.போட்டோஸ் சூப்பர்ர்ர்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுஸ்ரீ..
இங்க பஞ்சமே இல்லாம கிடைக்கும் கத்தரி வகை இது.. நானும் சாம்பார் தூள் சேர்த்து தான் செய்வேன்.. :) காயைத்தனியாக வேக வைத்து நீரை வடிப்பதற்கு குறிப்பிட்ட காரணம் ஏதும் இருக்கா.. ? சாதாரணமாக சத்துக்கள் வீணாகிவிடும் அதனால் நீரை வடிக்கக்கூடாது என்பார்கள்..
சுஸ்ரீ
சுஸ்ரீ,
சுலபமான பொரியல்..
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
கவிதா
சுஸ்ரீ
ரெம்ப நல்லாருக்குப்பா...இங்க இதே போல பச்சை கலர் கத்திரி வகை தான் கிடைக்கும் அத வச்சு பண்ணி பாக்குறேன்... ...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
சுஸ்ரீ,
சுஸ்ரீ,
வெங்காயம்,தக்காளி இல்லாமல்,ஈஸியான செய்முறையில் கத்தரிக்காய் அழகா செய்து இருக்கீங்க.செய்து பார்த்து சொல்றேன் சுஸ்ரீ.கடைசி ஃபோட்டோவில் அந்த குட்டி கடாய் ரொம்ப அழகா இருக்கு.கடாய் கத்தரியா? :-)
மிக்க நன்றி!
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை நண்பர்களுக்கு நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி கௌதமி
தோழிகள், உங்களோட பதிவுகளுக்கு ரொம்ப தாமதமா பதில் கொடுக்கறேன். சாரி, ஏதேதோ வேலை... வீக்கென்ட் கொஞ்சம் வந்தப்ப, இது படித்து பதில் போட விட்டுப்போச்சு! :)
முதல் ஆளாக வந்து தந்த பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கௌதமி!
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி வனி
வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வனி!
போட்டோஸ் சூப்பர்ன்னு நீங்க சொன்னதுல, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! :) குறிப்பும் பிடிச்சிருக்கா?! நேரம் கிடைக்கும்பொது செய்துப்பார்த்து சொல்லுங்க வனி. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி சுவர்ணா & சாந்தினி
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சுவர்ணா!
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சாந்தினி!
இது அங்க ஈஸியா கிடைக்குமா?! எங்களுக்கும் இங்க(இந்தியன் ஸ்டோர் போனால்) எல்லா வகை கத்தரியும் ஈசியா கிடைக்கும். நீங்க சொல்வது கரெக்ட்! பொதுவா வேகவைத்து நீரை வடித்தால் எல்லா சத்துக்களும் வீணாகிவிடும். நானும் ஃபாலோ பண்ணும் ஒரு விஷயம் இது. இங்கே வேகவைத்து தண்ணீரை வடிக்க குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை. கத்தரிக்காயை நறுக்கும்போதே கொஞ்சம் விதையா இருக்கற மாதிரி தெரிந்தால் ஒரு வேக்காடு விட்டு, தண்ணீரை வடித்துவிட்டால், லைட் கசப்பு தெரியாமல் கொஞ்சம் நல்லா இருக்கும் என்பதற்க்காகத்தான். ரொம்பவும் பிஞ்சு காயாக கிடைத்தால் (தோட்டத்து காயாக இருந்தால்), லேசா தண்ணீர் தெளித்து வேகவிட்டு, தாளித்துவிட்டு அப்படியே வெந்த காயை சேர்த்தும் செய்யலாம். தண்ணீர் இருகி வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்து எடுக்க வேண்டியதுதான். அப்படியும் நான் செய்வதுண்டு.
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி கவிதா & கோமதி
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கவிதா!
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோமதி!
உங்களுக்கு கிடைக்கும்போது செய்து பார்த்து பிடிச்சுதான்னு வந்து சொல்லுங்க. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி ஹர்ஷா
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஹர்ஷா!
ஆமாம், ரொம்ப ஈசி பொரியல் இது! ரொம்ப அலுப்பாக, நேரம் பற்றாக்குறையான நாட்களில் உடனடியாக செய்து சாப்பிட உகந்தது.
குட்டி கடாய் பிடிச்சிருக்கா?! :) எனக்கும் இந்த சின்ன சைஸ் கடாய்கள் என்றால் ஒருவிதப்பிரியம்! :) ஒரு நான்கைந்து வைத்திருக்கேன், அப்பப்ப ரிஸீஸ் பண்ணறேன். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ..
நான் கொஞ்சம் முற்றலாக இருந்தால் தூக்கிப் போட்டு விடுவேன்.. இனி நீ்ங்கள் கூறியுள்ளது போல் செய்து பார்கிறேன்.. விளக்கத்தி்ற்கு நன்றி.. :)
susree
இன்னைக்கு உங்க கத்திரிக்காய் பொரியல்தான் எங்க வீட்டுல ரொம்ப நல்லா இருந்தது.. நன்றிங்க...
அன்புடன்,
zaina.
சுஸ்ரீ
சுஸ்ரீ, நேற்று உங்கள் கத்தரிக்காய் பொரியல் செய்தேன்.. மிகவும் நன்றாக இருந்தது... செய்வதற்கும் எளிதாக இருந்தது :)
மிக்க நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
ஹாய் பிந்து,
ஹாய் பிந்து,
கத்தரிக்காய் பொரியல் செய்திங்களா?! சுவை பிடித்து இருந்ததா?! ரொம்ப சந்தோஷம் பிந்து! :)
மிக்க நன்றி, குறிப்பை செய்து பார்த்தமைக்கும், அதை மறக்காமல் இங்கே வந்து என்னுடன் ஷேர் செய்து கொண்டதற்கும்!
அன்புடன்
சுஸ்ரீ
zaina
ஹாய் zaina,
நீங்களும் கத்தரிக்காய் பொரியல் செய்து பார்த்திங்களா?! ரொம்ப சந்தோஷம்! :) எப்பவோ பதிவு போட்டு இருக்கிங்க. ரொம்ப சாரிங்க, இன்றுதான் உங்க பதிவை (ரொம்ப லேட்டா) பார்க்கிறேன்.
(அதுகூட பிந்து அழைத்ததும், பார்க்க வந்ததால் தெரிந்தது. அதற்காகவும் பிந்துக்கு ஒரு போனஸ் நன்றி! :))
குறிப்பை செய்து பார்த்து, தவறாமல் அதை இங்கே வந்து பதிவு போட்டு சொன்னதற்கும் சேர்த்து மிக்க நன்றி! :)
அன்புடன்
சுஸ்ரீ
Susri...
Hai susri... Innaiku lunch ku unga kathirikkai poriyal with suraikkai morkuzhambu thaan pa veetla. Rendum nallaa vandhirukku. Thanks for your recipe's...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
சுஸ்ரீ நேற்று உங்கள்
சுஸ்ரீ நேற்று உங்கள் கத்தரிக்காய் பொரியல் செய்தேன். வெங்காயம், தக்காளி இல்லாமலே ரொம்ப நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன