பேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ்

தேதி: March 1, 2012

5
Average: 4.5 (8 votes)

 

நான்காக மடிக்கப்பட்டு வரும் பேப்பர் சர்வியட்கள் மட்டும்தான்

 

<b>விசிறி (Fan) </b> சர்வியட்டின் முதல் மடிப்பை மட்டும் பிரித்து வைத்து ஒரு முனையில் இருந்து சிறிய மடிப்புகள் (pleats) மடித்து வரவும். பாதி அளவு மடித்ததும், மேலும் ஒரு மடிப்பு மட்டும் மடித்து நிறுத்தவும். (மொத்தமாக நான்கு அல்லது ஐந்து மடிப்புகள் கிடைத்தால் போதும்.)
விசிறி மடிப்புகளைச் சேர்த்துப் பிடித்து முழுவதையும் அப்படியே இரண்டாக மடிக்கவும்.
எஞ்சியுள்ள பகுதியை படத்தில் காட்டி உள்ள விதமாக மடித்துக்கொள்ளவும்.
அதனை ஸ்டாண்ட் போல வைத்து மேசையில் விசிறியை விரித்து வைக்கவும்.
<b>க்ரீடம் (crown) </b> சாதாரணமாக பேப்பர் சர்வியட் நான்காக மடித்திருக்கும். இடதுப்பக்கத்தில் உள்ள முதல் மடிப்பை மட்டும் பிரித்து வைக்கவும். வலதுப்பக்கத்தில் மேல் பகுதி மூலையை நடுக்கோட்டை ஒட்டி உட்புறமாக மடிக்கவும்.
மறு ஓரத்தை அதற்கு எதிர்மாறாக மடிக்கவும்.
இதனை திருப்பி வைத்து படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு குறுக்குமடிப்புகளையும் ஒன்றோடொன்று பொருந்தப் பிடித்து அழுத்தவும்.
ஒரு முக்கோணம் முடியும் இடத்தில் வலதுப்பக்கம் உள்ள மூலையை உள்நோக்கி மடிக்கவும்.
மறுபுறம் திருப்பி அங்கும் இதுபோல் மடித்துக்கொள்ளவும்.
இரண்டு மூலைகளையும் அந்தந்தப் பக்க மடிப்புக்களுள் சொருகி விடவும்.
மடிப்பின் நடுவே விரலை விட்டு மெதுவாகப் பிரித்து விட்டால் அழகான க்ரீடம் வடிவிலான சர்வியட் தயார்.
<b>Double Candle </b> சர்வியட்டை முழுவதாக சதுரமாக விரித்துக் கொண்டு, ஒரு மூலையிலிருந்து ஆரம்பித்து சதுரத்தின் நடுப்பகுதி வரை குறுக்காக சுருட்டிக் கொண்டு வரவும். அப்படியே மறு பக்க மூலையிலிருந்தும் சுருட்டி வர வேண்டும்.
சுருள்கள் வெளியே தெரிவதுபோல் பிடித்து ஒரு பக்கம் சிறிது உயரம் குறைவாக வைத்து இரண்டாக மடித்து மேசையில் ஒரு க்ளாஸ் அல்லது வைன் க்ளாசில் சொருகி விடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா,
அத்தனையும் அழகு.இவ்வளவு ஈஸியா ஃபோல்டிங்க் பண்ணலாமா?செர்வியட் செய்ய ட்ரை பண்ணதில்லை.உங்க கைவினை பார்த்ததும் நானும் செய்து பார்க்கிறேன்.அந்த விசிறி மடிப்பு ரொம்ப அழகா இருக்கு.பாராட்டுக்கள் இமா.

Outstanding! என்ன தான் சாப்பாடு செய்தாலும் அதை அழகாக ப்ரெசண்ட் செய்தால் தான் அது முழுமை அடையும். டேபுள் அலங்காரதை இது முழுமை செய்துள்ளது. உங்களுக்கு நாப்கின் வைத்து வாத்து மாதிரியெல்லாம் செய்வார்களே....அது தெரிந்தால் சொல்லிக்கொடுங்கள். அந்த polka dotted என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பாட்ரிக்ஸ் டே வரும் முன் இமாவிடமிருந்து எப்படியாது சிக்னல் வந்துடும் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இது முன்னால செபா பண்ணிக் காட்டினது லாவி.
http://www.arusuvai.com/tamil/node/13338
ம்.. திரும்ப பாட்ரிக்ஸ் டே வருதுல்ல! ;) ஐடியா எடுத்துக் கொடுத்திருக்கீங்க, நன்றி. ;)

நன்றி ஹர்ஷா. ;)

‍- இமா க்றிஸ்