முருங்கை கறிக் குழம்பு

தேதி: March 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

மட்டன் - கால் கிலோ
முருங்கை - ஒன்று
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
புதினா இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
அன்னாசிப்பூ - ஒன்று
பிரிஞ்சிஇலை - ஒன்று
கிராம்பு - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பெரியது)
அரைக்க:
இஞ்சி - கொஞ்சம்
பூண்டு - 5 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
மிளகு - 10
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
தனியாக அரைக்க:
தேங்காய் - 2 சில்


 

குக்கரில் கறியைப் போட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்த்து சிறிது மஞ்சள்தூள், சிறிது எண்ணெய் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள கறியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் முதலியவற்றை போடவும்.
அதில் மஞ்சள்தூள், மிளகாய்துள், மல்லித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
நன்கு கொதிக்க வைக்கவும்.
ஒரு வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பிறகு தனியாக அரைத்து வைத்துள்ள தேங்காயை அதனுடன் சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்
சுவையான முருங்கை கறிக்குழம்பு தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி

முருங்கை கறி குழம்பு அசத்திட்டீங்க..இப்போ முருங்கை சீசனா.. முருங்கையுடன் மட்டன் சேர்ந்து டேஸ்ட் சூப்பரா இருக்குமே.. கடைசி படம் எலும்புடன் பார்க்கவே அழகா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

பார்க்கவே சூப்பரா இருக்கு. சுவையும் சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள். எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இது நீங்க கொடுத்த குறிப்புன்னு நான் நினைக்கவே இல்லை... ஏன்னா இது போல் கறி + காய் காம்பினேஷன் ஃபாதிமா கொடுப்பாங்க. வித்தியாசமான காம்பினேஷன், பார்க்கவும் சூப்பர். அவசியம் ட்ரை பண்றேன். நல்ல சுலபமாவும் கொடுத்திருக்கீங்க. படங்கள் ப்ளிச். :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கெளதமி, முருங்கையும், கறியும் கூட்டணி வச்சு கலக்கி வாசனை இங்கே வரைக்கு வந்துருச்சி. ஊருக்கு வர்ற வரைக்கும் பொறுக்க முடியாது போலருக்கே. இங்கேயே செய்து பார்த்துட வைக்குது. அட்டகாச குறிப்பு தந்த உங்களுக்கு அமர்க்கள வாழ்த்துக்கள் கெளதமி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கௌதமி முருங்கையும்,கறியும் சூப்பர் காம்பினேசன் நானும் செய்வேன் உங்களோடதும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாக்யா, ரேவதி, வனிதா, கல்பனா, ஸ்வர்னா ஆனைவருக்கும் மிக்க நன்றி. ட்ரை பண்ணிப்பாருங்க ரொம்ப பிடிக்கும். அடிக்கடி செய்ய ஆரம்பித்து வீடுவிங்க.