மஷ்ரூம் தொக்கு

தேதி: March 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

 

காளான் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - ஒன்று (சிறியது)
லவங்கம் - ஒன்று


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வறுக்க வேண்டிய பொருட்களை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் விடாமல் வாசம் வரும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
மிகவும் நைசாக இல்லாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
அதனுடன் காளானை போட்டு தண்ணீர் விடாமல் நன்கு வேக விடவும். காளானே தண்ணீர் விடும் அதுவே போதுமானது.
இப்போது வறுத்த கலவையை போட்டு மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
சுவையான மஷ்ரூம் தொக்கு தயார். இது சாதத்துக்கு ஏற்ற சைடு டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் பாக்கியா மஷ்ரூம் தொக்கு சூப்பரா இருக்கும் போல படங்கள் ரொம்ப நல்லா அழகா வந்து இருக்கு எனக்கு மஷ்ரூம் னா ரொம்ப புடிக்கும் அடுத்த முறை மஷ்ரூம் வாங்கும் போது இதை பண்ணுறேன் வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உங்கள் மஷ்ரும் பார்க்க மிகவும் அருமையாக உள்ளது. படங்களும் மிகவும் அருமையாக வந்துள்ளது. நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி..

தனா மிக்க நன்றி..காளான் பிடிக்குமா? நிச்சயம் செய்து பாருங்க.. இது சாப்பிடும் போது மட்டன் சுக்கா சாப்பிடற மாதிரி இருந்தது..

கௌதமி மிக்க நன்றி அவசியம் செய்து பாருங்க..

"எல்லாம் நன்மைக்கே"

பாக்யா, படங்கள் நல்ல வந்துருக்கு . இந்த மஷ்ரூம் தொக்கு ஆந்திர ஸ்டைல் மாதிரி இருக்கு (பொடி அரைத்து போடுவது ),இது கண்டிப்பா நல்ல இருக்கும்னு படத்தை பார்த்தாலே தெரியுது . அடுத்த தடவ மஷ்ரூம் தொக்கு இந்த மாதிரி தான் . வாழ்த்துக்கள்.

சிவகாமி

உங்க தொக்கு செய்முறை ரொம்ப நல்லா இருக்கு. மஷ்ரூம் சாப்பிட்டது இல்லை. கிடைக்கும்போது வாங்கி செய்துப்பார்க்கிறேன்.

பாக்ய லக்‌ஷ்மி,
மஷ்ரூம் தொக்கு பொடி எல்லாம் சேர்த்து நல்லா இருக்கே.அடுத்த் முறை மஷ்ரூம் வாங்கியதும் செய்து பார்க்கணும்.படங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்கு.தொடர்ந்து குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

உங்க தொக்கு செய்முறை ரொம்ப நல்லா இருக்கு,நல்ல குறிப்பு படங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்கு

Mrs.Anantharaman

ungal mashrum thokku seithu parthen. mikavum arumayaga irunthathu. en
kanavarin paratai petren. valthukal.

சிவகாமி மிக்க நன்றி, இந்த முறையில் பொடி செய்து போடும் போது சுவை அபாரமா இருக்கும்.. முயற்சி செய்து பாருங்கள்..

ராஜேஸ்வரி.. நன்றி.. படங்களை போலவே தொக்கு நன்றாக வரும்.. செய்யுங்க..

ஹர்ஷா.. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.. வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்..

இஷா.. ரொம்ப பிடிச்சு இருந்ததா.. ரொம்ப தேங்க்ஸ்.. பாராட்டு மழையும் உங்களை நனைய வசிடுச்சா.. வெரி குட்.. அடிக்கடி செய்யுங்க...

"எல்லாம் நன்மைக்கே"

காளான் வாங்கியதும் இது போல் செய்யுங்க.. அப்புறம் அடிக்கடி சாப்பிடுவீங்க... உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி..

"எல்லாம் நன்மைக்கே"

நானும் மஷ்ரூம் தொக்கு செய்வேன், ஆனா உங்களுடையதை அதை விட சுவையா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது. வறுத்து அரைத்து சேர்த்திருப்பது சூப்பர். அவைச்யம் செய்யறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாக்யா மஸ்ரும் தொக்கு சூப்பரப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாக்கியா, மஷ்ரூம் தொக்கு டேஸ்டி..டேஸ்டி.. இந்த குறிப்பை பண்றதுக்காகவே மஷ்ரூமை தேடி பிடிச்சுடறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்த முறையிலும் செய்து பாருங்க.. சுவை ரொம்ப நல்லா இருக்கும்.. வறுத்து அரைத்தாலே வாசம் தூக்கும்..

"எல்லாம் நன்மைக்கே"

ஸ்வர்ணா.. மிக்க நன்றி.. தங்களுடைய வாழ்த்துக்கும்.. வருகைக்கும்...

கல்பனா.. தேங்க்ஸ்.. உடனே மஷ்ரூம் வாங்கி விடுங்க.. சாப்பிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க... டேஸ்டியா வரும்..

"எல்லாம் நன்மைக்கே"

மஷ்ரும் தொக்கு செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. மசாலா சூப்பர். சமைக்கும் போதே வாசனை சூப்பர். விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன். வாழ்த்துக்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

மிக்க நன்றி.. வாசனையே ரொம்ப நல்லா இருக்கும் உண்மை தான்..சுவை அருமையா இருக்கும்...

"எல்லாம் நன்மைக்கே"

மஷ்ரூம் தொக்கு சப்பாத்திக்கு செய்தேன் நீங்க சொன்னது போல் நல்ல வாசமா சுவையாக இருந்ததுநன்றி