தேதி: March 3, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சோயா (வேக வைத்து பிழிந்து 2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கியது) - ஒரு கப்
வெங்காயம் (பெரியது) - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
கடுகு
பட்டை - ஒன்று
அன்னாசி மொக்கு - ஒன்று
கிராம்பு - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கேசரி பவுடர் - சிறிது
சோயா சாஸ்
சில்லி சாஸ்
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்

பிறகு தூள் வகைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். பிறகு கேசரி பவுடர், உப்பு போட்டு கிளறவும்.

இப்போது வேகவைத்து நறுக்கிய சோயாவை சேர்த்து வதக்கவும்.

குக்கரை மூடி வேக விடவும். பின்னர் 5 நிமிடம் குக்கரை சிம்மில் வைத்து பிறகு திறக்கவும்.

பின்னர் அதில் சோயசாஸ், சில்லி சாஸ் கலந்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான மற்றும் சத்தான சோயா கிரேவி தயார். இதை சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

Comments
Sangee
Romba simple and easya kidikara porula vchi azhaga saithirukiga.nanum tri panidu sollaran.super
Be simple be sample
sangee
சங்கீதா... ரொம்ப சிம்பிளான சூப்பரான க்ரேவி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சங்கி செந்தில்
சோயாவில் கிரேவியா... சூப்பர். சீக்கிரமாக செய்யக் கூடிய கிரேவி. சத்தனானதும் கூட. பார்க்க ரொம்ப நல்ல இருக்கு. presentation super. வாழ்த்துக்கள்
சோயா கிரேவி
சோயா வைச்சு பண்ணுறது எனக்கு ரொம்ப புடிக்கும் அடுத்த முறை சப்பாத்திக்கு இதை தான் பண்ண போறேன் ரொம்ப நல்ல இருக்கு
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
சோயா கிரேவி
சூப்பர் குறிப்பு சங்கீதா.
- இமா க்றிஸ்
சோயா கிரேவி...
என் முதல் சமையல் குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்......
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
சோயா கிரேவி
அன்பு சங்கீ செந்தில்
குறிப்பு நல்லா இருக்கு. நல்ல சத்தான ரெசிபி.
அன்புடன்
சீதாலஷ்மி
revathi,vanitha,gowthami,dhana kumar,imma....
@REVATHI:என் முதல் குறிப்புக்கு முதல்ல வந்து கருத்துபோட்டதற்க்கு மிக்க நன்றி பா.....-ஆமா பா..ரொம்ப ஈசி...கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க...
@vanitha: ஆமாம் வனி.... சிம்பிலான க்ரேவிதான்... உங்க கருத்துக்கு மிக்க நன்றி....
@ gowthami: மிக்க நன்றி பா... சத்துக்கள் நிறைந்தது சோயா..
@dhana kumar:கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க..... உங்க கருத்துக்கு மிக்க நன்றி பா....
@ imma:மிக்க நன்றி இமா அம்மா...
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
seethalakshmi
மிக நன்றி பா.....
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
சோயா கிரேவி
சங்கீதா, சோயா கிரேவி நல்ல சுவையான குறிப்பு. செய்திருக்கும் விதம், விளக்கப்படங்கள் மிகவும் அருமை. கடைசிப்பட டெக்கரேஷன் ரொம்பவும் சூப்பர். வாழ்த்துக்கள் தோழியே :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சங்கீதா
சங்கீதா,
சோயா கிரேவி எளிமை, அருமையான குறிப்பு! இது முதல் குறிப்பா?! சூப்பரா சத்தானதொரு குறிப்போட ஆரம்பிச்சு இருக்கிங்க. தொடர்ந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
கல்பனா
மிக்க நன்றி பா...
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
சுஸ்ரீ
ஆமாம் சுஸ்ரீ.. முதல் குறிப்பு தான் இது.... உங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பா.....
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
சங்கீதா
சங்கீதா முதல் குறிப்பே அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.தொடர்ந்து கலக்குங்க:)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
swarna
மிக்க நன்றி பா......
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
Super
நேற்று நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நான் இதனுடன் உருளை, கொண்டை கடலை சேர்த்து செய்தேன். நன்றாக இருந்தது. நன்றி
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
தாமரை
மிக்க நன்றி பா.... உருளை , கொண்டை கடலை சேர்த்து நானும் செய்து பார்க்கிறேன்....
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"