பட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமா?இல்லையா? ***

அறுசுவையின் அன்பு மலர்களே,அறிவு நட்சத்திரங்களே.,அனைவருக்கும்

வணக்கமுங்கோ…:-

மாத தொடக்கத்தில் மறுபடியும் ஒரு பட்டியில் உங்களோடு செலவிட கிடைத்த

பொன்னான தருணத்தில் புது தலைப்போடுஉங்களை சந்திப்பதில் மட்டற்ற

மகிழ்ச்சி,,,,

தலைப்பு இதுதானுங்கோ…

நம்ம அன்புத்தோழி லாவண்யாவோடது* பேஸ்புக் அவசியமா?இல்லையா? *

(இன்றைக்கு யோசிக்கவேண்டிய ஒரு விஷயமுங்கோ ..நன்றி லாவண்யா:))

இப்ப பட்டிதொட்டி எங்கும் பரபரப்பா பேசப்படற,நினைக்கப்படற விஷயம்

இணையத்துல இதுதானுங்கோ..

அது அப்படி இருந்தாலும் ஒரு சாராருக்கு இது வேணுமா?

கண்டிப்பான்னும்,மறுசாராருக்கு ஒருநாள் பேஸ்புக் பார்க்கலன்னா கையும்

ஓடலை,காலும் ஓடலை…..கண்டிப்பா வேணுமின்னும் தோணுமே...

தோணுதுங்களா?எனக்கு கூட நிறைய தோணுதுங்கோ...ஆனா நான் நம்ம

கல்ப்ஸ் சொன்னாப்பல சும்மா உக்காந்து நீங்க எல்லாரும் என்னா

சொல்றீங்கன்னு வேடிக்கை/பராக்குதான் பார்க்கப்போறேனுங்கோ..:)

அனைவரும் வருக....வாதங்களை தருக...:):)

வாங்க வந்து பேஸ்புக் அவசியமின்னு நினைச்சா ஏன்,எதுக்குன்னும்

அவசியமில்லன்னு நினைச்சா ஏன் ? எதுக்குன்னும்

உங்க சுவையான வாதங்கள சூடாக வைங்க…:):)

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது

2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது

3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.

4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.

6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.

7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எங்கள் அன்புக்கும்,பண்பிற்கும்,பாசத்திற்கும்,நட்பிற்கும்,நாவன்மைக்கும் பாத்திரமான நடுவர் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களுடன், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காலத்திற்கேற்ற மிகச்சரியான தலைப்பை தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதற்கே ஒரு ஸ்பெஷல் நன்றிகள். தலைப்பை தந்த அன்புதோழி லாவண்யாவிற்கும் என் நன்றிகள். பட்டியில் வாயாடப்போகும் சாரி..சாரி வாதாடப்போகும் மற்ற தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வாதத்தை துவக்குகிறேன்.

//கல்ப்ஸ் சொன்னாப்பல சும்மா உக்காந்து நீங்க எல்லாரும் என்னா

சொல்றீங்கன்னு வேடிக்கை/பராக்குதான் பார்க்கப்போறேனுங்கோ..:)// நடுவரே, நாங்க வெளியே போனா தான் பராக்கு பார்க்க சொன்னோம், பட்டியில் அல்ல. தொடக்கத்துலயே தப்பா புரிஞ்சுட்டேளே? ;) நீங்க பேசுறதை பராக்கு பார்க்கலாம்னு வந்தா எங்க பக்கமே பிளேட்டடை திருப்பி போட்டுட்டீங்க.

நடுவரே, பேஸ் புக் அவசியமே இல்லை என்ற பக்கத்திலிருந்து என் வாதத்தை தொடங்குகிறேன். பேஸ் புக்குன்னு போட்டாலும் போட்டாங்க, தங்களோட முகத்தை போடுறதோட இல்லாம வீட்ல எலி முகம் கோணிட்டு போஸ் தர்றதையும், பூனை நெளிஞ்சுட்டு இருக்கறதையுமா போட்டு எடுத்து போடுவாங்க. நீங்களே சொல்லுங்க நியாத்தை. என்னத்தான் கேக்குறதுக்கு ஆள் இல்லைனாலும் இப்படியா? பேஸ் புக்குல போட்ட பேஸை எல்லாம் பார்த்து பார்த்து எங்க பேஸே மறந்து போச்சுங்க நடுவரே. என் கல்யாண ஆல்பத்தை திருப்பினா, என் முகம் தெரியல, நேத்து பேஸ் புக்ல பார்த்தேனே முடியெல்லாம் சிலுப்பி விட்டுட்டு பேய் கதை கேட்ட மாதிரி அதிர்ச்சியா ஒரு ஹேர் ஸ்டைல் வச்சுட்டு ஒரு பொண்ணு போஸ் தந்துச்சே. அதான் முன்னாடி நிக்குது. எங்களுக்கு மைண்டே இல்லைனாலும், மைண்டல இதெல்லாம் வரிசைகட்டி நிக்குதுங்க.

இன்னொரு விசயம் பாருங்க. நம்ம வீட்டு பணம்,நகை, இன்னும் மத்த விஷயங்கள் எவ்வளவு இருக்கு? எங்கே இருக்குன்னு நமக்கு தெரிஞ்சா போதாதா? அதை தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சொல்லனுமா? திருடனுக்கு டீடெயில்டா ரூட்டு போட்டு தர்ற மாதிரி இவங்க முகம் வேற போட்டு சொல்றாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல? ஒரு அம்மா இப்படித்தான் ரெம்ப வெள்ளந்தி பேர்வழின்னு எல்லா டீடெயிலையும் பேஸ்புக்ல தந்து ஊருக்கு கிளம்பி போய்ருச்சி. அது இல்லாத நேரம் பார்த்து, அவங்க வீட்டுக்கு போன திருடன், எப்படி ஒளிஞ்சிருந்திருக்கான், ரிப்பேரான விண்டோ ஏசி வைக்கும் இடத்துல ஒளிஞ்சிருந்து திருடிட்டு, அந்தம்மாவோட தங்கையையும் போட்டு தள்ளிட்டு போயிருக்கான். எவ்ளோ கொடுமை பார்த்தீங்களா? வாய் கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்காங்க. இன்னும் இது போல பல சம்பவங்களை சொல்லிட்டே போகலாம். நான் சொன்ன இந்த நிகழ்ச்சி நம்ம தோழிகளுக்கும், ஏன் உங்களுக்கே கூட தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேலயும் பேஸ்புக் அவசியம்னு நினைக்கறீங்களா? நீங்களே சொல்லுங்க நடுவரே? இப்ப மணி எனக்கு 12.17. நான் நல்லா தூங்கி எழுந்து ரோசனை பண்ணிட்டு மீதியை நாளைக்கு சொல்றேங்க நடுவரே..

குட் நைட். பை..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் நடுவர் அவர்களே...

facebook கண்டிப்பாக அவசியம் நடுவர் அவர்களே...

facebook இருப்பதால் தான் பல பள்ளி மட்டும் கல்லூரி நண்பர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்க முடிகிறது. facebook இல்லாமல் தொடர்பில் இருக்க முடியாதா என்று கேட்டால் அது சாத்தியம் இல்லை என்றே சொல்ல முடியும்.

இன்று FB கில் இருப்பவர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கிறார்கள்.மற்றரவர்கள் பள்ளி காலங்களில் உபயோக படுத்திய நம்பர் களையோ இல்லை மெயில் id களையோ இப்போது உபயோக படுத்துவதில்லை. அவர்களோடு தொடர்பில்லாமல் போவது தே இன்றைய நிலை.FB இருப்பதால் பல தோழன் தோழிகளின் நட்பு இப்போதும் தொடர்கிறது.இது ஒன்று மட்டும் இல்லை.இன்னும் நிறைய இருக்கிறது.ஒவ்வொன்னா சொல்றோம்...

என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் சில நல்ல FB பக்கங்களை பற்றி பதிவிடுகிறேன்.லைக் போட்டு கொள்ளுங்கள் நடுவர் அவர்களே...;-) {நடுவர் மட்டும் அல்ல...எதிர் அணியில் வாதாடும் தோழிகளும் லைக் போட்டு கொள்ளல்லாம்...நாங்கள் அத லைக் பண்ணுவோம்...}
**************************************************************************
1)Doctor Vikatan
2)சித்தவைத்தியன்

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அன்பு நடுவருக்கு வணக்கம்,
சூப்பரான தலைப்புடன் பட்டியை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.தலைப்பு தந்த அன்புத்தோழி லாவண்யாவுக்கு நன்றி.
நடுவரே ஃபேஸ் புக் அவசியம் என்ற தலைப்பில் வாதிட விரும்புகிறேன்.

* ஃபேஸ் புக் வந்த பிறகு தான் முகம் தெரியாத பல அறுசுவை தோழிகளை பார்க்க முடிந்தது.
* அறுசுவையின் முகம் தெரியா,ஸ்டார் தோழியை நான் கண்டுபிடித்ததும் ஃபேஸ்புக்கில் தான் நடுவரே!
* நாமே மறந்து விட்ட பல தோழமைகளை கண்டுபிடித்து கொடுத்தது ஃபேஸ் புக் தான்.
* நாம் ரசித்துப் பார்க்கும்/பார்த்த ஃபோட்டோக்கள்,வீடியோக்களை நம் ஃப்ரெண்ட்ஸுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
* அதுவும் க்ரூப்பில் ஏகப்பட்ட வசதி இருக்கு.குரூப்பில் இருக்கும் அனைவரும் நமக்கு ஃப்ரெண்ட்ஸாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனாலும் நம் படைப்புகள்,வீடியோக்கள்,அனைத்தையும் அந்த குரூப்புக்குள் ஷேர் பண்ணிக்கலாம்.குரூப்பிலிருந்து வெளியேறவும் செட்டிங்ஸில் ஆப்ஷன் இருக்கு நடுவரே!
* நேர மாற்றத்தினால் ஃபோனில் பேச முடியாத,தோழிகளுடன் பேச,சாட் பண்ண ஃபேஸ் புக் ஒரு நல்ல தளம்.
* நம் வீட்டு விசேஷ ஃபோட்டோக்களை தனித்தனியே மெயில் பண்ண வேண்டிய அவசியமில்லை.ஒரே ஒரு அப்லோட்...ஷேர் பண்ணிக் கொள்ளலாம்.சிறிது காலம் கழித்து அவற்றை டெலீட்டும் செய்து கொள்ளலாம்.

நடுவரே!
இதில் இருக்கும் அட்வாண்ட்டேஜ் பார்த்தீங்கனா, நமக்கு அறிமுகமில்லாதவர்களை நம் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.அப்படியே யாராவது சேர்ந்திருந்தால் அவர்களை
லிஸ்ட்டில் இருந்து தூக்கவும் ஆப்ஷன்ஸ் இருக்கு.

நம்மை பற்றிய விவரங்கள்.ஃபோட்டோக்கள் எல்லாம் யார் யார் பார்க்கலாம்னு செட்டிங்க்ஸ்லயும் ஆப்ஷன்ஸ் இருக்கு நடுவரே!

இவற்றையெல்லாம் சரியா பயன்படுத்தினால்,"முகப்புத்தகம் முக நக புத்தகமாய் மட்டுமல்லாமல் நட்பின் அக நக புத்தகமாய் இருக்கும்" என்று கூறி முதல் கட்ட வாதத்தை பதிவு செய்கிறேன்.

பேஸ் புக் , டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களின் பயன்பாடு இன்று மிக அதிகரித்துள்ளது. பேஸ் புக்கில் சிலர் பேஃக் ஐடி மூலம் தவறான படங்களையும் கருத்துக்களையும் பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால் பேஸ் புக்கின் மூலம் பல வருடம் பிரிந்த நண்பர்களை இணைக்கும் பாலமாக பேஸ் புக் அமைந்துள்ளது. பேஸ் புக் பயன்படுத்தப்படுவது நன்று.

நட்புடன்
குணா

வாழ்த்துக்கள்!!! நல்ல ஒரு தலைப்போடு பட்டியை துவங்கிட்டீங்க :) தலைப்பை காண தான் ஓட்டோடி வந்தேன்.

ஆனா எனக்கு ஒரே குழப்பம்!!! நான் ஃபேஸ்புக் பயன்படுத்துவதில்லை... பாதுகாப்புக்காக என்றில்லை, பொதுவாக இதெல்லாம் தேவையில்லாதது என்ற எண்ணம். அதனால் எந்த பக்கம் தாவுவது என்ற குழப்பம் இப்போது. இன்னும் சிலர் வரட்டும்... வாதங்களை பார்த்த பின்பே முடிவு செய்கிறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே....வனிதா வை எங்கள் வாதங்கள் மூலம் FB A /c open செய்ய வைத்தே தீருவோம் என்பதை இங்கே கூறி கொள்ள ஆசை படுகிறோம்.;-)நம்மோடு இவ்வளவு நெருங்கிய தோழியாக இருக்கும் வனிதாவை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் ஆசை படுவீர்கள் என்றே நினைக்கிறேன்.
****************************************************************************
3)LIC India Forever
4)Pudhiya Thalaimurai (TV Channel)
5)Good Morning Heart

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

facebook ல் பல பள்ளிக்கால தோழிகளையும் கல்லூரி கால தோழிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. பல சங்கங்கள் முளைத்துள்ளன அவற்றால் பல நன்மைகள் உள்ளன. அண்மைச் செய்திகள், பிரபலங்களின் தகவல்கள், புகைப்படங்கள், அறிவியல் சார்ந்த வீடியோக்கள் பலவற்றை வெளியிடுகின்றன. பல அழகான புகைப்படங்கள் கண்டு ரசிக்கலாம் என்று இன்னும் பல்வேறு வகையான பயன்கள் உள்ளன.

முத்தான பதிவை முதலில் வந்து வைத்த நடமாடும் தமிழ் அகராதியே...வருக :)

//நாங்க வெளியே போனா தான் பராக்கு பார்க்க சொன்னோம், பட்டியில் அல்ல. தொடக்கத்துலயே தப்பா புரிஞ்சுட்டேளே? ;)//

அடடா நான் வாதம் பண்ணலன்ன உடனே குஷியாகி இப்படி காலைவாரி மூக்கை உடைக்கிறது எல்லாம் நல்லாவே இல்ல நீங்க ரெம்ப கெட்டவங்க :(

நான் ஏதோ பார்க்கற ,கேட்கிற எல்லாத்தையுமே கூர்ந்து உள் வாங்கறதுன்றதுன்னு நினைச்சா..நீங்க வெளிய பாரு பராக்..பராக் ந்னு சொல்லிட்டீங்களே...:)

//தங்களோட முகத்தை போடுறதோட இல்லாம வீட்ல எலி முகம் கோணிட்டு போஸ் தர்றதையும், பூனை நெளிஞ்சுட்டு இருக்கறதையுமா போட்டு எடுத்து போடுவாங்க. //

என்னமோ எது அழகா இருக்குதோ அத போடறாங்க ..விடுங்க பாவம்..

//நேத்து பேஸ் புக்ல பார்த்தேனே முடியெல்லாம் சிலுப்பி விட்டுட்டு பேய் கதை கேட்ட மாதிரி அதிர்ச்சியா ஒரு ஹேர் ஸ்டைல் வச்சுட்டு ஒரு பொண்ணு போஸ் தந்துச்சே. அதான் முன்னாடி நிக்குது.//

அடடே அது பொண்ணேதான்னு முடிவே பண்ணிட்டீங்களா அது சரி வெள்ளந்தி மனசுங்க.உங்களுக்கு :)

// எங்களுக்கு மைண்டே இல்லைனாலும், மைண்டல இதெல்லாம் வரிசைகட்டி நிக்குதுங்க. //

மண்டே காலையில மைண்டு பத்தி அர்த்தம் தேடினா மண்டைக்குள்ள ஓண்ணும் விளங்கலியே

//நான் சொன்ன இந்த நிகழ்ச்சி நம்ம தோழிகளுக்கும், ஏன் உங்களுக்கே கூட தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேலயும் பேஸ்புக் அவசியம்னு நினைக்கறீங்களா//

என்னங்க திடுக் சம்பவங்கள சொல்லி திக் திக் பண்ணிட்டு பட்டுன்னு பேஸ்புக் அவசியமான்னா பக் பக் ந்னு மனசு பட்டாம்பூச்சியா படபடக்குது...இருங்க

இந்த காபிய எடுத்துக்கிட்டு அப்படியே கையில ஸ்நாக்ஸ் எடுத்துக்கோங்கோ...
நான் போயி எதிரணியில் வாதவேகத்தை பதம் பார்த்துட்டு வர்றேனுங்கோ..:)

சூப்பர் சூப்பரா கொட்டுங்க தொடர்ந்து...நன்றி மீண்டும் வருக..தருக :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாங்கோ நண்பியே...:)

//FB இருப்பதால் பல தோழன் தோழிகளின் நட்பு இப்போதும் தொடர்கிறது//

நட்பு தினம் தினம் தொடர்கதையா இருக்க பேஸ்புக் முக்கியமின்னு சொல்றீங்க

சரிதானுங்கோ..

//என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் சில நல்ல FB பக்கங்களை பற்றி பதிவிடுகிறேன்.லைக் போட்டு கொள்ளுங்கள் நடுவர் அவர்களே...;-) //

ஆனாலும் உங்க அப்ரோச்....நான் ரெம்ப லைக் பண்றேனுங்கோ :)

//வனிதா வை எங்கள் வாதங்கள் மூலம் FB A /c open செய்ய வைத்தே தீருவோம் என்பதை இங்கே கூறி கொள்ள ஆசை படுகிறோம்.;-)//

அடடா அவங்க எதிரணின்னு முடிவு பண்ணி பேசறீங்களா?இல்ல உங்கணின்னு முடிவு பண்னி பேசறீங்களான்னு தெரியல...ஆனா உங்க பேஸ்புக் நட்பணியில சேர்த்துக்க முடிவோட இருக்கீங்கன்னு புரியுது..

ஆனா எனக்கு நல்லாத்தெரியுமே அவங்க எந்த கட்சின்னு..:)

புதுப்து பேஸ்புக் நல்ல பக்கங்களை தேடிபோடும் மதியே...உங்கள் கருத்து மனதுக்கு குளிர்ச்சி..நல்லது தொடர்ந்து வாங்கோ..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பட்டிமன்ற நடுவர் இளவரசி அவர்களே !மற்றும் நம் அருசுவையின் பங்கு பெரும் பங்குபெறா தோழிகளே !!(இப்பவே சொல்லிட்டேன் ..எல்லாரும் கண்டிப்பா படிக்க வேண்டிய தலைப்பு )வணக்கம் பல பல !(இதையும் இப்பவே சொல்லிடறேன் .. கோபத்துல குழப்பத்துல அடிக்கடி சொல்ல மறந்துருவேன் !! சோ ஸ்டாக் பண்ணி வைங்கப்பா )
நடுவரே !தலைப்பு எடுக்கவும் ஒரு திறமை வேனும்பாங்க !நீங்க அதுல ஒன் ஆப் தி பெஸ்ட் .(ஆனா ஒண்ணு!! ப்ளிஸ் ஒரு ரெண்டு வாரத்துக்கு நடத்துங்க .. ஏகப்பபட்ட விஷயம் பேச வேண்டியிருக்கு ரெண்டு சைட்லையும்.. எனக்கு மட்டுமில்ல !!) சில சமூக விஷயங்கள் தானா நடந்து நம்ம வாழ்க்கையை கெடுக்கும் >>அதுல இந்த பேஸ் புக்கும் ஒண்ணு ..ஆனா இந்த படித்த அப்பாவிகளுக்கு சமூகம் என்கிற ஒன்றே நம் கையிலிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் , முகம் தெரியாத யாரோ ஒருவரை திட்டி தள்ளிவிடுவோம்...சிலவற்றை லகான் போட்டு நிறுத்த தான் வேண்டும்.. என்ன ஒண்ணு லகான் ஓட ஸ்விட்ச் நம்மை போல நிறைய பேர் கையில இருக்கு .. மெஜாரிட்டி கிடைச்ச தான் அடங்கும் .. கடுகடங்காத மனக்குதிரை !

சோ , நல்ல ஒரு குழப்பமான மனநிலையில தெளிவா யோசிச்சு நான் இப்போதைக்கு(இந்த பட்டி முழுதும் ) என்ன சொல்ல வரேன்னா .. பேஸ் புக் என்ன பாடிபுக்கே தேவை இல்லை இல்லை .. வேணாம் வேணாம் ..
ரொம்பவ நொந்து போய் அவங்க அவங்க (சமூக ஆய்வாளர்கள் , வாழ்வியல் வல்லுனர்கள் , கலாசார சிந்தனையாளர்கள் )எல்லாரும் மேல்மட்ட லெவல்ல கூட்டம் போட்டு பை ஸ்டார் சாப்பாடு சாப்பிட்டு முடிவெடுக்க முடியாம .கிடந்து அல்லாடுற விஷயத்தை சரியான இடத்துல கொண்டு வந்த உங்களுக்கும் .முன்மொழிஞ்ச லாவண்யா வுக்கும் வாழுத்துக்கள் !!
ஆனானப்பட்ட அருமையான அறுசுவை தளத்தையே ..குழந்தை வளர்ப்பு.கணவர், மற்றும் அவர் குடும்பத்தாரை கவனித்த பின்பு தான் இந்த(எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாம )கவனிக்கற என்னை கேட்டாஇது வேலியில போற ஓணானை மடியில வுட்டுக்கற கதை தான் ..
என்னை கேட்டா இந்த பேஸ் புக் பண்ற அநியாயம் ஒண்ணு சொல்றேன்..
ஷேர் ஷேர் ன்னு இவங்க ஷேர் பண்ற விஷயங்கள் னாலே இருக்கற கொஞ்ச நஞ்ச பிரெண்ட்ஷிப்பும் போயி ,, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா டூ விட்டுகிறாங்க போங்க..
அதனாலே வருதே அப்செட்.!!!..லைக் பட்டனை தொடரதுக்கு ஏகப்பட்ட ஈகோ .
இதுக்கெல்லாம் அப்பப்போ உதாரணங்களையும் சொல்லி மேலும் வந்து குதிப்பேன்.. ஒவ்வொரு நாளும்..(காத்திருப்புக்கு நன்றி )

மேலும் சில பதிவுகள்