வழி சொல்லுங்கள் please

அன்புள்ளவர்களுக்கு வணக்கம்
என் குழந்தை தற்போது இரண்டரை மாதம். தலையை ஓர் பக்கம் சாய்த்தே படுகிறாள். இதனால் அப்பக்கம் பள்ளம் போல உள்ளது.
எதனை தடவை திருப்பி விட்டும் பயன் இல்லை. எதாவது வழி சொல்லுங்கள் ப்ளீஸ். அவள் தூக்கத்தை நான் திருப்பி விடுவதால் கெடுக்கிறேன். இருந்தும் பயன் இல்லை. மீண்டும் அந்தபக்கம் சைர்த்தே படுகிறாள் . உதவுங்கள் ப்ளீஸ்.
அன்புடன் vikashi

அன்பு தோழியே ...

தங்களுடைய குழந்தை எவ்ளோ நாட்களாக இப்படி படுக்கிறாள்?

கொஞ்சம் பாயில் போட்டு பாருங்கள் ...அப்பொழுதும் ஒரு பக்கமாக படுத்தால்..நீங்கள் டாக்டர் consult செய்வது நன்று...
ஒரே பக்கம் படுப்பதால் அந்த இடத்தில கொஞ்சம் உள்ளே சென்றது போல் இருக்கும் பயப்பட தேவையில்லை ...

என்னுடைய தோழியின் குழந்தை அப்படிதான் படுத்து கொண்டிருந்தால் பின்பு மருத்துவரை consult செய்ததும் அவர் ஏதோ oil கொடுத்தார் ...அதை தடவி வர செரியானது...

நாட்களை கடத்த வேண்டாம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்...சீக்ரம் குணமாகும் ...கவலை வேண்டாம்...

குழந்தை இப்படி படுப்பது ஏதும் பிரெச்சனையான்னு எனக்கு தெரியல... நீங்க வேணும்னா டாக்டரை கேளுங்க. தலை ஷேப் தான் பாதிக்குதுன்னா புடவையில் தொட்டில் கட்டி போடுங்க, நல்லா ஷேப் வரும்னு சொல்வாங்க. அப்போ எந்த பக்கமா திரும்பி படுத்தாலும் அழுத்தம் வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மை தான் ஒரு பக்கமாகவே படுத்தால் அந்த பக்கம் மட்டும் அமுந்துடும்..என் மகள் அப்படி தான் இருந்தாள் பிறகு ஒருவர் சொல்லி தான் படுக்க வைக்கும்போது ஒரு டவலை இருபக்கமும் கீழ் நோக்கி சுருட்டி தன் நடுவில் தலை வைச்சு தூங்க வைக்கணும் அப்போ திரும்ப முடியாது.அல்லது தூங்கிய பின் இரு பக்கமும் துணி வைத்து தலையை நேரா வைக்கலாம்..கவலை படாதீங்க இப்போ தான் இப்படி கொஞ்சம் வளர்ந்தால் அவங்கிஷ்டம் போல் மாத்தி மாத்தி தூங்கி பழகிடுவாங்க

தீபி வனிதா அக்கா. தளிகா அக்க ரொம்ப ரொம்ப நன்றி. towel வச்சு பார்த்தேன் அக்கா. நல்ல force அக தலையை திருப்பி வச்சு ஒரு பக்கமாவே படுகிறாள்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன். பெண்பிள்ளை என்பதால் தலை ஒழுங்கா வரணும் என்று கவலையை இருக்கு. வளர்ந்த பின் அவள் வருதபடகூடதல்லவா
வருத்தமுடன் விகாஷி

ஹாய் விகாஷ்...
வருத்தம் வேண்டாமே ...மருத்துவரிடம் ஒரு முறை consult செய்து விட்டு நிம்மதியாக இருங்களேன் ...இன்னும் ஏன் தயக்கம் ....சரியாகிவிடும் தோழியே ....

வருத்தப்படாதீங்க இப்போ தான் இப்படி இன்னும் சில மாசம் போனாலே அவங்க இஷ்டத்துக்கு படுப்பாங்க ஓடுவாங்க குதிப்பாங்க அப்போ நாம ஒன்னும் செய்யாமலேயே தலை சரியாகி ஷேப் வந்துடும் இருந்தாலும் இப்பவும் towel வச்சு இன்னொரு பக்கமா திருப்பி விடுங்க.நாம பெரியவங்களில் ஒரு பக்கம் ஒடுங்கி போய் யாரையாவது பாத்திருக்கறீங்களா எல்லா தலையும் உருண்டையா தானே இருக்கு.அது போல தான்

மேலும் சில பதிவுகள்