3 அரை வயது குழந்தைக்கு பல் வலி!!!!

3 அரை வயது குழந்தைக்கு பல் சொத்தையாக இருக்கிறது.பல் வலியால் ரொம்ப அவதிபடுகிறாள் என்ன செய்வது தோழிகளே,யாராவது வந்து நல்ல யோசனை சொல்லுங்க ப்ளீஸ்....டாக்டரிடம் சென்று பல்லை இப்போது பிடுங்கலாமா???

மருந்துக்கடையில் லவங்கத் தைலம்(Cinnamon) கிடைக்கும். அதை பஞ்சில் நனைத்து, வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த வைத்தியத்தை செய்ய வேண்டும். கெட்ட நீர் வெளியே வருவதோடு கிருமித் தொற்றும் கட்டுப்படும்.

ஹாய் தர்ஷனி பல் துலக்குவது 1 நாளைக்கு 2 முறை செய்துவிடுவாள்.ஏன் பல் சொத்தை வந்துச்சுனு தெரியலப்பா, மருந்துனு சொன்னாலே அலறி ஓடுவா பக்கத்தில வரமாட்டா லவங்க தைலத்தை பல் மேலே வைத்தால் உள்ளே போகாதா அப்படி போனால் எதாவது செய்யுமா??குளிர் இருக்கிறதால பல் வலி அதிகமா ஆகிருச்சு பா, நன்றி தர்ஷனி நீங்க சொன்னதையும் நான் செய்து பார்க்கிறேன் பா..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

குழந்தை தானே பாவம் தாங்காது பல் வலி தாங்குவதை விட டாக்டரிடம் கொண்டு போய் படும் அவஸ்தை ஒன்னுமே இல்லை..கொஞ்சம் நல்ல டென்டிஸ்டா கொண்டு போங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க .உண்மையில் சொத்தை பல்லுக்கு பல் துலக்குவது மட்டும் காரணம் இல்லை பல்லே ஒழுங்கா விளக்காதவங்களுக்கு பலருக்கும் பல்லில் எந்த ப்ரச்சனையும் இருக்காது பாரம்பரியமாகவும் வரலாம்.இருந்தாலும் நம்மால் ஓரளவு தடுக்கவும் முடியும்

ரொம்ப நன்றி தளிகா இன்று மாலை தான் டாக்டரிடம் போகனும் நீங்க சொல்வது சரி தான் தளிகா பரம்பரை வழியா தான் வந்துருக்கு பா.என் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுக்கு ரொம்ப நன்றி தளிகா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

Hi Mrs. Kavitha , im sorry i dont know to write tamil , so i shall explain it to you in english, im a dentist, my mother is member in this site and she told mi your problem, so i thought i can help you! as ur child is 3years , do u bottle feed her in the night? how many decay teeth u can see?? if it is more than 6 , it is cald nursing bottle carries, if the decay is in the starting stage, we can do root canal therapy, its a simple procedure , nothing to worry about, and if the deacay is nli in 1 teeth , the same root canal procedure can be done, but it is not advised to extract the teeth at this early age, which will lead to other complications, kindly visit the dentist at the earliest, this is a very common problem which can be cured easily. take care.

கவிதா, இப்போதைக்கு டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள். அவர் குழந்தைகளுக்கு ஏற்ற வலி நிவாரணி மருந்து தருவார். வலி தீர்ந்ததும், பல்லை எடுத்து விடுங்கள். பெரியவர்களே இந்த வலியை தாங்குவது கடினம். பாவம் 3 வயது குழந்தை எப்படி தாங்கும். வீட்டு வைத்தியத்தோடு நிற்காமல், டாக்டரை அணுகுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்