சிக்கன் மசாலா

தேதி: March 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

சிக்கன் - கால் கிலோ
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் 65 தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
அரைக்க:
மிளகு - 15
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி


 

மேற்கூறியுள்ள அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிக்கனை நன்கு சுடுநீரில் கழுவிய பிறகு அதில் சேர்க்கவும்.
அதனோடு மிளகாய் தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சிக்கன் 65 தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதில் தண்ணீர், உப்பு, சிறிது எண்ணெயும் சேர்த்து ஊற்றி வேக வைக்கவும்.
சுவையான சிக்கன் மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் மசாலா அருமை.. கடைசி படத்தை பார்த்தாலே ருசி சூப்பரா இருக்கும்னு தெரியுது.. படங்கள் அழகாக இருக்கு.. வாழ்த்துக்கள்.. மட்டன், சிக்கன் என்று அசத்துறீங்க..

"எல்லாம் நன்மைக்கே"

சிக்கனை எந்த வடிவில் கொடுத்தாலும் முழுங்கிடுவேன் ;) இப்படி சுவையா கலக்கலா கொடுத்தா.... கேட்கவே வேணாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்ல இருக்கு இந்த சிக்கன் இந்த வாரம் ஞாயிற்று கிழமை இதை பண்ணிறேன் இது சப்பாத்திக்கு நல்ல இருக்குமா , இல்லை சாதத்துக்கு நல்ல இருக்குமா ? கௌதமி நல்ல நல்ல குறிப்பா தரிங்க வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Chiken pakupotha super.sapita aaha ooho than.innaiku night ithan enga vitula.

Be simple be sample

படங்கள் பார்த்தாலே சுவையா தெரியுது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான குறிப்பு. படங்களைப் பார்த்தாலே உடனே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.தக்காளி,வெங்காயம் போன்றவை கிராம் அளவில் தர முடியுமா.நன்றி.

கௌதமி இன்னைக்கு சிக்கன் மசாலா செய்தேன்.. செம டேஸ்ட்.. படத்தில் உள்ளது போலவே வந்தது.. எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.. வாழ்த்துக்கள்,..

"எல்லாம் நன்மைக்கே"

சிக்கன் மசலா அருமையா இருக்கு‌. அழகா செய்து காண்பித்து இருக்கிங்க. கடைசிப்படம் சாப்பிட தூண்டுவதா, சுவையா தெரியுது! :) வாழ்த்துக்க‌ள்.

அன்புடன்
சுஸ்ரீ

நேற்றிரவு சப்பாத்தியுடன் சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. நன்றி.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.