-

-

நிறைய கருத்துகள் வந்துருக்கு ..எல்லாத்தையும் கவனிங்க ..
ஆனா . தன்னபிக்கையோட இருங்கன்னு எல்லாரும் சொல்றாங்களே ..உடனே வந்துருமா அது..நீங்க படிக்கரப்பவே (உங்க விட்ல நீங்க சொல்ற நபர்கள் )கிட்ட இருந்து அடுத்த பிரச்சினை யை சந்திக்கலாம் . அப்போ உங்க மனசுல (எல்லாரும் நல்லா பேசரிங்க..ஆறுதல் சொல்றிங்க .. என்முள் குத்துற ஷூ போட்டா தான் தெரியும் .. அப்படின்னு கோவம் அண்ட் விரக்தி வரலாம் )

ஏன்னா பிரச்சினைகளை சந்திப்பதே வாழ்க்கை.. இல்லையா ப்பா
சரி தன்னம்பிக்கையை எப்படி வளர்ப்பது ..
அதுக்கு ஒரு சிம்பிள் மெதட் இருக்கு
ரொம்ப ஈஸி

பயத்தையும் கோழைத்தனத்தையும் விரட்டுங்க..(உங்களுக்கு ஒரு பாறாங்கல் மாதிரி தோன்றும் பிரச்சினை அடுத்தவருக்கு ஒரு சிறு கல்லாக இருக்கலாம் )அப்பாடி நினைப்பவர்கள் நம் உறவுகள் ஆ இருந்தால் தான் இந்த சுயபச்சாதாபம் வரும் ..

அதான் உறவுகள்..கள் என்னும் போதை தலைக்கேறி இருக்காங்களே !!
நீங்க அவங்களை பார்த்து பரிதாபம் இல்லையா படனும்...ஒரு நாள் நம்ம சாய் அவங்களையும் தெளிய வைப்பார்..
அவங்க கள் குடிச்சா நாமும் குடிக்கலாமா ?

உங்களுக்கு நல்ல பொறுமை இருக்கு ..அது உங்க ரைட்டிங் பார்த்தாலே தெரியுது..
சோ சீக்கிரம் நல்லது நடக்கும்.
சாய் சொன்ன ஒரு விஷயம்.
எல்லாருக்கும் நாட்டுல பிரச்சினை இருக்கு ..
அது நூறு ரூபாய் போன்றது.
சிலர் ஒரு நூறு ரூபாய் நோட்டாக மாற்றி பாக்கெட் லேசாக்கி விடறாங்க ..சிரிச்சிகிட்டே துன்பத்தை எதிர்கொல்றாங்க..
ஆனா சிலர் நூறு ஒரு ரூபாய் நாணயங்களாக வைச்சு சுமக்கிறாங்க..
மாற்றுவதற்கு வழி இருக்கு ..
நான் சொல்லி தரேன்..
நம்பிக்கை ஒன்று தான்..
வழி தானா பிறக்கும்.

உங்க விருப்பம் ஒரு குழந்தை பெற வேண்டும் என்றால் சாய் சத்ச்சரிதம் அமைதியோட தினம் ஒரு பக்கம் படிங்க..
என்னால் சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலை சாய் ..
நீ எனக்கு பதிலா போ அப்பா ..
என் மனவருத்தத்தை போக்கு.
அப்படின்னு சொல்லி படிங்க..
யாரோ ரூபத்துல போய் உங்களுக்காக பேசுவார்.

சரியாபா
மற்ரவர்க்காக பிரார்த்தனையும் வாழ்வதும் தான் வாழ்வின் சிம்பிள் தத்துவம்.
நீங்க அடுத்தவருக்காக வேண்டுங்க (கணவருக்கு மனமாற்றம் )
உங்கள் வாழ்க்கையை அப்படியே பகவான் தருவார்.
ரொம்ப ஆச்சர்யங்கள் வரப போகுது
எல்லாம் அவன் செயல்

நேற்று இதை படித்ததில் இருந்து இதில் இருந்து என்னால் வெளியே வர முடிய வில்லை....
உங்கள் கணவர் மேல் கட்டுகடங்காத கோபம் வருது.அந்த கோபம் போகாம என்னால உங்களுக்கு எந்த விசயமும் சொல்ல முடியல ...உங்க கணவரை பற்றி எதாச்சும் நல்ல விஷயங்கள் நாலு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க தான்யா...
உங்களுக்கு இங்க இதனை தோழிகள் இருக்கும் போது நீங்க தனிமையா உணரதீங்க....
நீங்க இதுவரைக்கும் treatment எடுத்தீங்களா ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கும் உங்க பதிவை படித்த பின் உங்க கணவர் மேலே கோபமா வந்தது.ஆத்திரத்தில் தவறா எதாவது சொல்லிடுவமோ என்றுதான் நேற்று பதிவிடவில்லை.நான் சொல்ல நினைத்தது எல்லாம் கார்த்திகா சொல்லிட்டாங்க.மனைவியை ரத்தம் வரும் வரை அடிப்பது,நிச்சயமா ஏற்று கொள்ளமுடியாத ஒன்று.அவருக்கு கவுன்சிலிங் செய்யணும் என்று நினைக்கிறேன்.நீங்க முடிஞ்சா வேலைக்கு போங்க,இந்த நரகத்தில் இருந்து சில மணி நேரமாவது விடுத்லை கிடைக்கும்.
குழந்தையின்மைக்கு இப்போ எவ்வளவோ அட்வான்ஸ்ட்ரீட்மெண்ட் எல்லாம் வந்தாச்சு,உங்க கணவரையும் டாக்டர் கிட்ட அழைத்துச்செல்லுங்க.நல்லதே நடக்கும்.நம்பிக்கையோடு இருங்க.

தான்யா உங்கள் வேதனையை படிக்கும் போதே மனம் கனக்கிறது. அதை அனுபவிக்கும் உங்கள் நிலைமையும் எங்களுக்கு புரிகிறது. கவலை வேண்டாம் தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் முடிவு நிச்சயம் இருக்கும். சீக்கிரமே உங்கள் வாழ்க்கையும் மாறிவிடும். விரைவில் நீங்கள் ஒரு குட்டி தன்யாவை பெற போகின்றீர்கள். நம் தோழிகள் சொல்லும் அறிவுரைகள் கேட்டு அதன்படி நடந்துக் கொள்ளுங்கள். உங்களை விடவும் கஷ்டங்களை அனுப்பவிப்பவர்கள் அதிக பேர் இருக்கின்றார்கள். அதனால் உடைந்து போகாதீர்கள்.

---சபிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன்.--- நாம் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் இல்லை சாதனை படைக்க பிறந்தவர்கள். கல்ப்ஸ் சொன்னது போல் பட்டியில் அவ்வளவு அழகாக பேசிவிட்டு இப்படி நீ்ங்களே உடைந்து போகலாமா... எனக்கு அதிகம் பேச தெரியாது. உங்களுக்காக நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். கவலைப்படாமல் இருங்கள்... எல்லாம் அவன் செயல்... இதுவும் கடந்து போகும்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கவலைப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கை தான் உங்களை காப்பாற்றும்.

கல்பனா சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். அவர்கள் சொன்னது மிகவும் சரி. உங்கள் கணவரிடம் உள்ள நல்ல விஷயங்களை நீங்கள் இங்கு சொல்லவில்லை.

அவரின் நல்ல விஷயங்களை பெரிதுபடுத்தி பேசுங்கள். உங்கள் வீட்டை பற்றி திட்டினால் ஆமாம் என்று கேட்டு கொள்ளுங்கள். (தீ என்றால் சுட்டு விடாது)

பூங்காற்று சொன்னது போல் அவரின் சின்ன சின்ன செயலையும் பாராட்டி பேசுங்கள். I love you என்று அடிக்கடி சொல்லுங்கள். புகழ்ச்சிக்கும், அன்பிற்க்கும் மயங்காதவர்கள் யாரும் இல்லை. This is the manthra for love. pls expose your love and affection. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர வாழ்த்துக்கள்
(ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னியுங்கள்)

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ஹாய் தான்யா பட்டிக்கு பிறகு உங்களை ஆரவமுடன் தேடினேன் பா நீங்க வரவே இல்லை.
பட்டியில் தைரியமும்,விடாமுயர்ச்சியோடும் போராடின தான்யாவா நீங்க என்னப்பா மனசை தளர விடாதிங்க உங்களுக்கு ஒரு கவலை என்றால் நாங்க தாங்குவோமா .

சொந்த பந்தங்களின் தேவை இல்லாத பேச்சுகளை தூக்கி தூர போடுங்க அதற்க்கெல்லாம் மதிப்பு கொடுத்தா மனக்கஷ்ட்டம் தான் மிஞ்சும் சொந்தங்கள் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் அதனால அதை ஒரு பக்கம் தூர வச்சிட்டு
உங்க கணவரை உங்க வழிக்கு கொண்டுவர என்னலாம் செய்ய முடியுமோ அனைத்தயும் செய்ங்க.

//திருமணமான புதிதில் இன்னும் மோசமான அவலங்களை சந்தித்தேன். ஆனாலும் அதிலிருந்து மீண்டு, என் கணவரையும் கொஞ்சம் மாற்றி அவரை நிலைநிறுத்தியிருக்கிறேன்.//

திருமணமான புதுசுலயே உங்களவரை கொஞ்சமேனும் மாற்றி இருக்கீங்க அப்படீன்னா இப்ப அவருடைய குணமும் என்ன செய்தால் சரியா வரும் என்பதையும் இன்னும் அதிகமா தெரிந்தும்,புரிந்தும் வைத்து இருப்பீங்க அதன் படி போய் மாற்றுங்க
முடிந்தால் முடியாதது எதுவுமே இல்லை தான்யா.
வாழ்க்கை வாழ்வதற்க்கே வீழ்வத்ற்க்கு அல்ல.

உங்க தைரியமும்,விடாமுயர்ச்சியும் கூடவே நம்ம தோழிகளின் வேண்டுதலும் சீக்கிரமே உங்க கணவரை நல்வழிக்கு கொண்டுவண்டு சாந்தோசமாக இருக்கிறேன்னு சொல்வீங்க பாருங்க.
எப்பவும் போல அறுசுவைக்கு வாங்க தோழிகளோடு பேசினால மனசும் ரிலாக்ஸா ஆகும் நம்பிக்கையும் பிறக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இதய நோய், நீரிழிவு, மெனோபாஸ், ஹார்மோன் கோளாறு உள்ளவங்களுக்கெல்லாம் தாம்பத்ய உறவுல சிக்கல் இருக்கிறதோட, மலட்டுத்தன்மை பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம். மத்தபடி சின்ன வயசுலேர்ந்தே சரிவிகித சாப்பாடு சாப்பிடறவங்களுக்கு பிற்காலத்துல மலட்டுத்தன்மையால பாதிக்கப்படற அபாயம் கம்மி. அதாவது வைட்டமின் சி-யும், ஃபோலிக் அமிலமும் அதிகமா உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கிறவங்களுக்கு மலட்டுத்தன்மை பாதிப்பு கம்மி.

மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்ல முதலிடம், கொழுப்பு நிறைஞ்ச உணவுகளுக்கு. சின்ன வயசுலயே ஜங்க் உணவுகளுக்குப் பழகறாங்க. உடற்பயிற்சிங்கிறதே இல்லாத மந்தமான வாழ்க்கை முறை.... தவறான சாப்பாடு உதாரணத்துக்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சாப்பாடு... இது எல்லாமே செக்ஸ் உணர்வுகளைக் குறைச்சு, மலட்டுத்தன்மைல கொண்டு போய் விடும்.

அதிகக் கொழுப்புள்ள உணவு, இதயத்துக்குப் போகிற ரத்தக் குழாய்கள்ல அடைப்பை உண்டாக்கி, ஆண் ஹார்மோனை சரியா சுரக்க விடாமத் தடுத்து, தாம்பத்ய உறவுல ஆர்வத்தையும் குறைக்கும். கொழுப்புங்கிறது ஆணுக்கு மட்டுமில்லை. பெண்ணுக்கும் பிரச்சினைதான். பெண்களைப் பொறுத்தவரை அதிகக் கொழுப்பும் ஆபத்து... கொழுப்பே இல்லாத உணவும் ஆபத்து! அதிகக் கொழுப்பு இதயத்துக்குக் கேடு. ஓரளவு கொழுப்பு இருந்தா தான், பெண்களோட உடம்புல பிரதான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு சரியா நடக்கும். தினசரி 20 கிராம் கொழுப்பு பெண்களுக்குப் போதுமானது. அதுகூட இல்லாத உணவு. அந்த ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். மலட்டுத்தன்மை மட்டுமில்லாம, மத்த பிரச்சினைகளுக்கும் காரணமாயிடும் இது.

மலட்டுத்தன்மை வராமலிருக்கவும், ஆரோக்கியமான தாம்பத்ய உறவுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வைட்டமின் சி பெரியளவுல உதவும். ஆணுக்கு விந்தணு உற்பத்திக்கும், பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்திக்கும் உதவும். எலுமிச்சை, ஆரஞ்சுனு சுலபமா கிடைக்கக்கூடியது வைட்டமின் சி. சிகரெட், குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்குக் கூடுதல் வைட்டமின் சி தேவை. உணவு மூலமாக எடுக்கிறது போக, மாத்திரை, மருந்துகளாகவும் எடுத்துக்க வேண்டியிருக்கும்.

குடமிளகாய், கிவி, முலாம்பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பிராக்கோலி, பட்டர் ஃப்ரூட் - இதெல்லாம் ஆரோக்கியமான உயிரணு உற்பத்திக்கும், விந்துக்குழாய் அடைப்பு சரியாகவும் உதவக்கூடிய உணவுகள். பெண்களுக்கு வைட்டமின் சி தவிர, ஃபோலிக் அமிலமும் அவசியம். பிறக்கப் போற குழந்தை எந்தக் குறைகளும் இல்லாம, நல்லபடியா பிறக்கறதைத் தீர்மானிக்கிறது இந்த ஃபோலிக் அமிலம். கீரைல எக்கச்சக்கமா இருக்கு இது. அதனாலதான் கர்ப்ப காலத்துல பெண்களை தினம் கீரை சேர்த்துக்கக் கட்டாயப்படுத்தறோம்.

கல்யாணமாகி பல காலம் காத்திருந்து, அப்புறம் குழந்தையில்லையேங்கிற கவலையோட டாக்டர் டாக்டரா பார்க்கிறதுக்குப் பதில், முன்கூட்டியே கவனமாக இருக்கலாம் இல்லையா? குழந்தை வேணும்னு முடிவு செஞ்சதுமே, குறைஞ்சது 3 மாசத்துக்கு முன்னாடியே இந்த விஷயங்களை கவனத்துல வச்சுக்கிறது சீக்கிரமே உங்க வீட்ல குழந்தை சத்தம் கேட்க வைக்கும்! தான்யா இதை நான் எழுதவில்லை,வேறு ஒரு பதிவில் இருந்து எடுத்தது,முடிந்தால் இதை பாருங்கள்.

தான்யா நீங்கள் சபிக்கபட்டவள் என்று சொல்லாதிர்கள் இந்த உலகில் எல்லாரும் எதோ ஒரு விஷயத்தில் சாதிக்க பிறந்தவார்கள் தான் இந்த மாதிரி நீங்க நினைகதிர்கள் நீங்கள் உங்கள் கணவருடன் சேர்த்து ஒரு நல்ல டாக்டர் போயி பாருங்க சுற்றம் எதாவது சொல்லி கொண்டே தான் இருக்கும் நீங்கள் உங்கள் மனதை தளர விடாதிர்கள் உங்களுக்கு பிடித்த செயலில் உங்கள் கவனத்தை திருப்புங்கள் உங்கள் கணவருடன் அதிக நேரம் செலவு செய்யுங்கள் எல்லாம் நலத்தே நடக்கும் என்று நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை நான் எனக்கு தெரிந்ததை சொன்னேன் எதாவுது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்துவிடுங்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தான்யா மனசு கொஞ்சம் ரெம்பவே கனத்து விட்டது உங்கள் பதிவை பார்த்து
உங்க மனது நல்ல நிலைமைக்கு திரும்பவும் உங்கள் கணவர் சுற்றத்தார் உங்களை திரும்பி பார்க்கவும்
ஒரே வழி யோகாசன பயிற்சி தான் ரெம்ப எளிய பயிற்சி யின் லிங் என்னிடம் இருக்கு நம்பிக்கையுடன் செய்தீர்கள் என்றால் 10 நாளில் மாற்றம் தெரியும் உங்க பேஷ் புக் ஐடி குடுத்தா லிங்க் தாரேன்
அதை சரியாக படித்து சரியான நேரத்தில் சரியான முரையில் செதீங்கன்னா வெற்றி நிச்சயம்
தான்யா...............நான் அருசுவைக்கு வாரது இல்லை இன்னைக்கு எதற்ச்சையா உங்க பதிவை பார்த்தேன் பதில் குடுக்காமல் போக மனம் இல்லை உங்கள் பதிலை எதிர் பார்க்கிரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்பு தோழிகளே! உங்களிடம் நான் ஆலோசனை கேட்ட அன்றே, அவர் தங்கையின் மகன்களுக்கு எக்ஸாம் என்று லேப்டாப்பை கொடுத்துவிட்டார். நேற்று இரவுதான் வாங்கி வந்தார். உங்களின் பதிவையெல்லாம் படித்த பிறகு இன்னும் எனக்கு தெம்பாக இருக்கிறது.
வனிதா, karps, வெண்ணிலா, kuttiretama, musi, சுபா, கார்த்திகாராணி, கல்பனா, பூங்காற்று, ஜென்னிவினோ, உத்திரா, கோமதிமணி, ரீம், ரேவதி, தாமரைசெல்வி, ஸ்வர்ணா, தர்ஷினி, தனா, balkis. இந்த தோழிகள் கூட்டத்திற்கு மிக்க நன்றி.
தோழி கல்பனா!! நீங்கள்தான் மிக நீண்ட பதிவை போட்டிருக்கிறீர்கள். மிக மிக நன்றி. தோழி!! நான் மேற்படிப்பெல்லாம் படிக்க முடியாது. ஏற்கனவே எனக்கு திமிர் என்று சொல்கிறார்கள். என் கணவரும் படிக்கவெல்லாம் வேண்டாம் நம் வாழ்வின் முக்கிய தேவை குழந்தைதான் அதற்கு முயற்சிப்போம் என்று கூறிவிட்டார். திருமணமாகி 1 வருடத்தில் நான் சிகிச்சைக்கு சென்றபோது, அவர் உறவு, நட்புகளின் பேச்சை கேட்டு, நமக்கெல்லாம் குழந்தை ஒரு கேடா என்று கூறி ரிப்போர்ட்டை கிழித்து போட்டுவிட்டார். ஏழு வருடங்கள் கழித்து இப்போதுதான் என் கணவர் முன்வந்து சிகிச்சை எடுக்கலாம் என்று கூறியுள்ளார். காரணம் மற்ற குழந்தைகளை பார்த்து அவருக்கும் குழந்தை ஆசை வந்துவிட்டது. அவர் மனமாற்றத்திற்காக நான் காத்திருந்தது மிக அதிக காலம். ரிப்போர்ட் அவருக்கு நார்மல், எனக்கு பிசிஒடி. லேப்ரஸ்கோப் செய்து என் குழந்தைக்காக காத்திருக்கிறேன்.
அவர் அண்ணியின் பேச்சை கேட்டு, அவர் அண்ணன் அவரிடம் பேசுவதில்லை. இதனால் மனம் உடைந்துவிட்ட அவர், ஒருநாள் உறவுகள் எல்லாம் கூடியிருந்தபோதே அவர் அண்ணனின் காலில் விழுந்து கதறி பேசும்படி கெஞ்சினார். ஆனால் அதை எல்லோரும் வேடிக்கையாக பார்த்தார்களே தவிர கொஞ்சமும் கண்டுகொள்ளவேயில்லை. அவர் அண்ணன் இவரை எட்டி உதைக்கிறார் இவரோ ஒட்டி ஒட்டி போகிறார்.
2 வருடங்களுக்கு முன் குடும்ப ஜோசியரிடம் சென்றபோது, என் கணவரின் பூர்வீக சொத்தை என் பெயரில் மாற்றினால் நல்லது என்று கூறினார். என் கணவரும் முன்பின் யோசிக்காமல் மறுநாளே என் பெயரில் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். இந்த விஷயம் என் மாமியாருக்கு தெரிந்த உடன், அவர் அண்ணன், தங்கை, தங்கை கணவரிடம் இருந்தெல்லாம் ஆயிரம் செல்ஃபோன் அழைப்புகள். சொத்தை என் பெயரில் மாற்ற வேண்டாம், நாளையே சொத்தை எடுத்துக்கொண்டு உன்னை விட்டு போய்விடுவாள். நீ தெருவில் நிற்பாய் என்று. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவரிடம் பேசாத அவர் அண்ணன் கூட அன்று அக்கரையோடு அவரிடம் பேசியதுதான். இதற்கெல்லாம் அவர் சொன்ன ஒரே பதில் என் மனைவியை பற்றி எனக்கு தெரியும் என்பதுதான்.
என் கணவரின் இந்த ஒரு செயலே என்னை அவரிடம் கட்டி போட்டுவிட்டது. அவருக்கு என் மேல் நம்பிக்கையும், அன்பும் அதிகமாகவே இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு மாதத்திலேயே, மூளை சலவையில் மனம் மாறி ஒழுங்கா கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போய்டு, நீ என்னை ஏமாத்திடுவே என்று கூற தொடங்கிவிட்டார்.
எனக்கும் கோவம் வந்து, ஆமாம் நான் உங்களை ஏமாத்திட்டு போகதான் போறேன். கையெழுத்தெல்லாம் போட மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
ஆனால் 2 வாரங்களுக்கு முன் நான் அவர் பெயரில் மாற்றிவிட்டேன்.
நான் அவரை தனிக்குடித்தனம் அழைத்து சென்றால் மாறுவார் என்று தோன்றுகிறது. ஆனால் அது எப்படி முடியும் என்றுதான் தெரியவில்லை.
இப்போதுதான் சொல்ல விரும்பினேனில் வனிதா சொன்னதை பார்த்தேன். நான் கூகுள் தேடலில்தான் அறுசுவையை கண்டுபிடித்தேன். எனக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் நான் அறுசுவைக்குதான் வருவேன். நமக்காகவும் ஒரு தோழிகள் கூட்டம் இருக்கிறது என்ற நம்பிக்கையில். தோழிகளே!! நீங்கள் எனக்கு ஆலோசனை கூறினாலும் சரி, வேற வேலையில்லை என்று ஒதுங்கி போனாலும் சரி. எனக்கு ஆறுதல் அறுசுவைதான். உங்களில் ஒருத்தியாய் இருப்பதுதான்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மேலும் சில பதிவுகள்