மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

தோழியர் அனைவருக்கும்
முத்துக்களே பெண்கள்.
அப்படி முத்துக்களாக தன் வீட்டுப் பெண்கள் ஒளிர ஒத்துழைக்கும் ஆடவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெமாமி

முகமறியாது முகவரி தெரியாது ஆனாலும் தினம் நட்புடன் சங்கமிக்கும் என் அன்பு அறுசுவைத்தோழிகள் அனைவருக்கும் அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள், இப்படிக்கு பூங்காற்று,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அருசுவையின் அன்பு நட்புகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் - சிவகாமி

தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
பக்ரீத் பண்டிகையும் ஒரு தினம் தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....

வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....

பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு.....

அறுசுவை பதிவுலக மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..............

தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

இதுவும் கடந்து போகும்

உலக மகளிர் தின வாழ்த்துகள்..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
(பூர்விகா)

இந்த சிறப்பு மிக்க நூற்றாண்டு மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அறுசுவை வாசகிகள் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.

-sahina

அன்பு தோழிகளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

இப்படிக்கு ராணிநிக்சன்

வீட்டில் உள்ளவர்களை
தாயாக, மனைவியாக , தங்கையாக
நல்ல முறையில் வழிநடத்தும்
மற்றும்
நாட்டில் பல துறைகளிலும்
நட்சத்திமாக ஜொலிக்கும்
அனைத்து பெண்களுக்கும்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஒவ்வொரு துறையிலும் பலபல சாதனை படைத்து ஜொலிக்கும் தோழிகளுக்கு எனது மனமார்ந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

anaivarukkum mahalidhina valthukkal

மேலும் சில பதிவுகள்