ஆந்திரா பிரியாணி

தேதி: July 30, 2006

பரிமாறும் அளவு: 4 அல்லது 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசுமதி அரிசி - அரை கிலோ
மட்டன் - 3/4 கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 300 கிராம்
பச்சை மிளகாய் - 100 கிராம்
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2
தயிர் - 300 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
மல்லிக்கீரை - 2 கட்டு
எலுமிச்சைப்பழம் - பாதி
பாதாம் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிறிய ஸ்பூன்
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 100 மில்லி
கேசர் கலர் பவுடர் - ஒரு ஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்


 

கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அத்துடன் பொடியாக நறுக்கிய 50 கிராம் பச்சை மிளகாய், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயும், நெய்யும் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தில் மூன்றில் ஒரு பங்கை பொன்னிறமாக (தீயாமல்) பொரித்து எடுத்துக்கொண்டு, மீதி 50 கிராம் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி, பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
அதே எண்ணெயில் மீதி வெங்காயம், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு போட்டு முறுக ஆரம்பிக்கும்போது வெட்டிய தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு பிரட்டி வைத்துள்ள கறியைக்கொட்டி வேக வைக்கவும். வெந்தவுடன் அத்துடன் பாதாம் தூள், நைசாக நறுக்கி வைத்துள்ள மல்லிக்கீரை தூவி, எலுமிச்சைப்பழச்சாறு ஊற்றவும்.
அரிசியை பதமாக வடித்துக்கொட்டி, கலர் பவுடரை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அரிசி மேல் தெளித்து, பொரித்த வெங்காயம், பச்சை மிளகாயை அதன் மேல் தூவி தம்மில் போடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Dear madam,
What is meant by masala thool? Can we do this biriyani with chicken and if so, the measurements are same or different?

அன்புள்ள நிருபமா! வெரி ஸாரி! உங்களின் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். மசாலாத்தூள் என்றால், கரம் மசாலாப் பொடிதான். என்னுடைய குறிப்புகளில் அதையும் கொடுத்துள்ளேன். கீழுள்ள லிங்க்கில் பார்க்கவும்.

http://www.arusuvai.com/tamil/node/2057

தாராளமாக இதை கோழி கறியிலும் செய்யலாம். எந்த அளவுகளையும் மாற்றவேண்டியதில்லை. வேறு சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும். நன்றி!

நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் கூறிய குறிப்பில் எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைப்பிர்களா அன்பு சகோதரி. இந்த குறிப்பில் தேவையான பொருட்களில் பச்சை மிளகாய் 100 கிராம் என்று கூறி இருக்கிறீர்கள். ஆனால் செய்முறையில் கறியோடு 100 கிராம் பச்சை மிளகாய் சேர்த்து விட்டு பிறகு மீதம் உள்ள 50 கிராம் பச்சை மிளகாயை பொரித்து எடுத்துக் கொள்ளவும் என்று குறிப்பில் போட்டு இருக்கிறீர்கள். பச்சை மிளகாயை முலுசாக போட்டு பொரித்து எடுக்க வேண்டுமா? இல்லை எப்படி நறுக்க வேண்டும்.

அன்புள்ள ஷ்ருதி! நான் நலமே! நீங்கள் நலமா? ஸாரி, முதலில் 50 கிராம் பச்சை மிளகாய்தான். செய்முறையில் தவறுதலாக 100 கிராம் என்று போட்டுவிட்டேன். எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக்கொண்டுதான் செய்யவேண்டும். இப்போது திருத்திவிட்டேன், பார்க்கவும். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி! :)

ஆந்திரா பிரியாணி
மிகவும் அருமையாக இருக்கு

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்