பாலக் பனீர்

தேதி: March 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

பாலக் - 2 கப்
பனீர் - 100 கிராம்
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
லவங்கம் - 2
கசூரி மேத்தி - சிறிதளவு
பால் - கால் கப்
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு


 

பாலக் கீரையை சுத்தப்படுத்தி, ஒரு மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் போட்டு 2 - 3 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும். பின்னர் ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பனீர் துண்டுகளை போட்டு வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். (விரும்பினால் பனீரை எண்ணெயில் வறுக்காமல் அப்படியே கூட சேர்க்கலாம்.)
அதே கடாயில் சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சுருள வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
இப்போது அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும். தூள் வாசம் போனதும் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
இதனுடன் கசூரி மேத்தியை உள்ளங்கைகளால் நசுக்கி சேர்க்கவும்.
இப்போது பால் அல்லது க்ரீம் சேர்க்கவும்.
கடைசியில் வறுத்து வைத்துள்ள பனீர் துண்டுகள் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
சுவையான பாலக் பனீர் தயார். சப்பாத்தி, நாண் இவற்றுக்கு சரியான, ஹெல்தியான ஜோடி இந்த 'பாலக் பனீர்’.

பால் அல்லது க்ரீமுக்கு பதிலாக தயிரும் சேர்க்கலாம். பாலக் பனீர் நல்ல க்ரீன் கலரில் வேண்டுமெனில் கீரையுடன் அரை கப் கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். தக்காளிக்கு பதிலாக லெமன் ஜூஸ் சேர்ப்பதானால் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ஹெல்தியான டிஷ்,குழந்தைகளை கீரை சாப்பிட வைக்க சுலபமான வழி.படங்கள் சூப்பர்ப்.

பாலக் பனீர் பார்க்கவே சாப்பிட தூண்டுது கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்னைக்கு நைட் சப்பாத்திக்கு இந்த சைட் டிஷ்ஷை அனுப்பிடுங்க ப்ளீஸ். சிம்பிளான முறையில் அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு. சப்பாத்தி கூட சூப்பரா பொருந்து போல தெரியுதே நிச்சயம் செய்து பார்த்துட வேண்டியது தான். வாழ்த்துக்கள் அன்பு. போட்டோஸும் சூப்பரா இருக்கு.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ரீம்,
எப்படி இருக்கீங்க?உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.ஆமாம்...குட்டீஸ்க்கு பனீருடன் சேர்த்து கீரையும் கொடுக்கலாம்.ஈசியா உள்ள போகும். :-) முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி ரீம்.

ஸ்வர்ணா,
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி ஸ்வர்ணா. :-)

கல்ப்ஸ்,
ரொம்ப சுலபமான செய்முறைதான்.செய்து பாருங்க கல்ப்ஸ்.உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. :-)

யாழினி,
ஆமாம்...சப்பாத்திக்கு ரொம்ப நல்லா இருக்கும்.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.//போட்டோஸும் சூப்பரா இருக்கு.// நன்றி யாழினி. :-)

நான், ரொட்டிக்கு சம காம்பினேஷன். ரொம்ப நல்லா வந்திருக்கு படங்களும், குறிப்பும். அவசியம் மாலே போனதும் ட்ரை பண்றேன். பார்ட்டிக்கு ரொம்ப நல்லா இருக்கும். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப பசுமையா இருக்கு உங்க குறிப்பு. பார்க்க பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. சாப்பிடவும் ஆசையா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்குறேன் நான். வாழ்த்துக்களுடன் உங்கள் அன்பு தோழி சுபா.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அன்பு ஹர்ஷா,

சூப்பராக இருக்கு, ஸ்டார் ஹோட்டல் ப்ரிபரேஷன் போல, அருமையாக ப்ரெசெண்ட் பண்ணியிருக்கீங்க.

சப்பாத்திக்கு வித விதமாக சைட் டிஷ் ட்ரை பண்ணப் பிடிக்கும். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

படங்கள் தெளிவாகவும் கலர்புல்லாகவும் இருக்கு. சத்துள்ள சுவையான குறிப்பு. அசத்துறீங்க!

இந்த முறை செர்விங் மாட் டிஷ்ஷையும் மாற்றிய பிறகும் கூட கண்டு பிடித்து விட்டேனே !

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிதா,
பார்ட்டிக்கு செய்ய ஈஸியான டிஷ் தான்.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி

சுபாராம்,
அன்புத்தோழி உங்க அழகான பதிவுக்கு ரொம்ப நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
அந்த அளவுக்கெல்லாம் இல்லை.இருந்தாலும் உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி.ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

லாவண்யா,
இது போங்கு. நான் ஒத்துக்க மாட்டேன். :-) அடுத்து பாலக் பனீர் அனுப்பியிருக்கேன்னு நான் தான் முன்பே சொல்லியிருந்தேனே! உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

I'm searching for Palak Paneer recipe and found yours.
Gotta doubt.
Can i use baby spinach instead of the greens you used?
will the taste be same?

Preethi Vaasanth

இதுவும் கடந்து போகும் ..

ப்ரீத்தி வசந்த்,
நான் இங்கு பயன்படுத்தியிருப்பது ஸ்பினாச் தான்.பேபி ஸ்பினாச் தாராளமாக யூஸ் பண்ணலாம்.சுவையில் வித்தியாசம் இருக்காது.

ரொம்ப நன்றி ஹர்ஷா .. செய்து பாத்துட்டு உங்களுக்கு சொல்றேன் :)

இதுவும் கடந்து போகும் ..

இன்னைக்கு மதியம் உங்க சமையல் தான் பா :)..நான் rice eater.. naan,chapatikku ellam porumai illai.. சாதத்துக்கு வெச்சு சாப்டேன் .. ரொம்ப நல்லா வந்துச்சு ..
நன்றி ஹர்ஷா :)

இதுவும் கடந்து போகும் ..

ப்ரீத்தி வசந்த்,
பாலக் பனீர் செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு ரொம்ப நன்றி. அழகு தமிழில் பதிவிட்டதற்கும் நன்றி. :-)