சின்ன அம்மை ஆலோசனை

தோழிகளே என் 3 வயது மகளுக்கு சின்ன அம்மை வந்திருக்கிறது.அவளுக்கு எல்லா தடுப்பூசியும் போட்டும் இப்பொழுது வந்திருக்கிறது.
நான் இங்க தனியாக இருக்கிறேன் எனக்கு உங்கள் ஆலோசனை தேவை அம்மை வந்தாள் என்ன செய்வது,செய்ய கூடாது மருத்துவரிடம் கேட்டோம் வந்து
ஒரு ஊசி போட்டு கொள்ள சொன்னார்கள்.ஆனால் சிலர் மருத்துவரிடம் போக கூடாது என்று சொல்கிறார்கள்,நான் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அந்த
கொப்பளங்களின் மேல் தடவலாமா அப்படி செய்தால் இன்னும் அரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இது எத்தனை நாள் தங்கும் எனக்கு 1 வயதில் இன்னொரு மகளும்
உள்ளாள்.ஆனால் அவள் இப்பொழுதுதான் அதிகமாக அக்காவுடன் ஒட்டி ஒட்டி விளையாடுகிறாள்.என்னால் ஒண்ணும் செய்ய முடியவில்லை.எனக்கு இது முதல் அனுபவம்
யாரும் இல்லாமல் எனக்கு மிகவும் குழப்பமாகவும் உள்ளது கொஞ்சம் தெரிந்தவர்கள் முடிந்தவரை உடனடியாக பதில் கூறுங்கள் நேற்று முதல்
உள்ளது.உதவுங்கள்.

பெரிய அம்மைக்கு தான் தடுப்பூசி எல்லாம். இப்போ என் மகனுக்கும் போட்டிருக்கு. அதான் நானும் அறுசுவை பக்கம் வர முடியல. கொஞ்சம் படுத்தும். அம்மை எப்படி இருக்கு??? முத்து முத்தாக மேலே நீர் கட்டி போல், சிறு புள்ளியோட இருக்கா?? அப்படி இருந்தா விளையாட்டு அம்மை. இவனுக்கு அப்படி தான் இருக்கு. அரிக்கும். சொரிஞ்சுடாம பாருங்க. பிள்ளைக்கும், நீங்களும் மஞ்சள், வேப்பிலை பூசி குளிங்க. வீட்டை சுத்தமா வெச்சுக்கங்க. அந்த கட்டி வத்தி போன பிறகு காய துவங்கும், அதன் பின் குளிக்க வைக்கலாம். அது வரை வேப்பிலை, மஞ்சள் அரைத்து பூசி விடுங்க.

ரூமில் வேப்பிலை வைங்க. வெளி ஆட்கள், வெளிய போய் வருபவர்கள் தொடாம பாருங்க. காரம், புளிப்பு சேர்க்க கூடாது. சூடான உணவு கொடுக்க கூடாது. அதுக்காக குளிர்ச்சின்னு இளனீர், ஜூஸ்ம் கொடுக்காதீங்க... குழந்தைகளுக்கு உடனே மீண்டும் காய்ச்சல் வந்துடும். சளி பிடிக்காம பார்த்துக்கங்க.

குழந்தைகள் சேர்ந்து விளையாடாம பார்த்துக்கங்க... பரவும் எல்லாருக்கும். வீட்டை தினம் தொடைங்க. ஊசி போட கூடாது... போட்டா அதிகமாயிடும். சுத்தமா வெச்சுகிட்டு சொரியாம பார்த்து வேப்பிலை, மஞ்சள் பூசுங்க... சீக்கிரம் குறைஞ்சுடும். கவலை வேண்டாம்.

முதல் நீர் ஊற்றும் போது வேப்பிலை, மஞ்சள் அரைத்து உடம்பு தலை எல்லாம் பூசி ஊற விட்டு தண்ணி ஊற்றனும். 5வது நாள், 7வது நாளில் ஊற்றலாம். அதுக்குள்ள கட்டி வத்திடுச்சான்னு பாருங்க. வெள்ளி, செவ்வாய், ஞாயிறில் ஊற்ற கூடாதுன்னு நம்ம சீதாலஷ்மி சொன்னாங்க. அதையும் பார்த்துக்கங்க. சோப் போட கூடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல நல்ல நகம் வெட்டி விடுங்க.காலமைன் லோஷன் தடவலாமான்னு கேட்டு பாருங்க சொரிவது குறையும்.கவலை படாதீங்க இப்பவே அம்மை போடுவது நல்லது தான் பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதில் வந்துவிடுவது நல்லது..சீக்கிரம் மாறிடும்.சிலர் குளிக்காம வச்சிருப்பாங்க அப்படியில்லாம தினமும் வெதுவெதுப்பான நீர் ஊற்றி மென்மையா சோப்பில்லாம கழுவி பருத்தி துணியால் மென்மையா ஒப்பி ஒப்பி தண்ணீரை எடுத்து துணி மாத்தி விடுங்க

உடனே பதில் தந்ததுக்கு நன்றி என் கணவர்தான் ஊசி போடலாம்னு சொல்றாரு எனக்கு பயமா இருக்கு.தாளிகா சொன்ன மாதிரி நகம் வெட்டலாமா,குளிக்க வெக்கலாமா,இல்ல 9 நாள்தான் தண்ணி ஊத்தணும்னு அம்மா சொன்னாங்க அதான் கேட்டேன்,அவளுக்கு சின்னதா நீர் கட்டி மாதிரி இருக்கு வேப்பிலை
மஞ்சள் அரைச்சி பூசி விட்டு இருக்கேன் ஒரு நாளைக்கு ஒரு இள நீர் குடுக்கலாம்ல.சின்னது எவ்ளோ சொன்னாலும் அவகூடதான் போய் விளையாடுறா.
பயமா இருக்கு இத ஆன்மிக வழியில போறதா அறிவியல் வழியில போறதா

நீர் கட்டி போல் இருப்பது விளையாட்ட அம்மை தான்... 4 நாளில் தானே மறைஞ்சுடும், பயம் வேண்டாம். நகம் வெட்டனும்... அப்போ தான் சொரியாம இருப்பாங்க. ஊசி வேண்டாம்.. போட்டா அதிகமாகும்னு சொல்வாங்க. நிறைய டாக்டர்ஸ் போடவே மாட்டாங்க. இளனீர் இந்த வயது பிள்ளைக்கு வேண்டாம். மோர் சாதம், பால் சாதம் இப்படி கொடுங்க. நல்ல அரிசி கஞ்சி செய்து கொடுங்க. வாழைப்பழம் கொடுங்க... சூடு தானா குறையும்.... சளியும் பிடிக்காது. குளிக்க வைப்பது எனக்கும் பெரியவங்க கூடாதுன்னு தான் சொன்னாங்க. வத்திட்டா 5வது நாள், 7வது நாள் ஊத்தலாம். அப்பறம் உங்க விருப்பம். இதில் ஆன்மீகம், அறிவியல் ஏதும் இல்லை. இது சூடால் வருவது. சூடு தனிக்க உணவு முறை; கிருமி தொத்தாம இருக்க, அரிப்பு குறைய வேப்பிலை மஞ்சள்; வந்த கொப்பலங்களில் நீர் வைக்காம இருக்க சூடான உணவு, சூடான நீர் ஊற்றாமல் இருப்பது; சூடான உடம்பில் காரம் புளி சேர்த்தா வயிற்றுக்கு சேராது சீதபேதி வைக்கும், அதனால் காரம் புளிப்பு தவிர்பது என எல்லாமே அறிவியலை ஆன்மீக பூர்வமா பெரியவங்க சொன்னாங்க. எப்படி எடுத்துகிட்டாலும் முறை ஒன்று தான்... இதை இன்றைய டாக்டர்களும் ஏத்துக்கறாங்க தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ராதிகா,

குழந்தைக்கு லேசான காட்டன் உடை மட்டும் போட்டால் போதும். எதுவும் வளையல், பாசி போட்டிருந்தால் கழட்டி விட்டுடுங்க. புண்ணில் பட்டால் உறுத்தும்.

வேப்பிலையும் மஞ்சளும் கிருமி நாசினி, அரிப்பைக் கம்மி பண்ணும்.

அம்மை போட்டால், தானாகவே இம்யூனிடி டெவலப் ஆகிடும். பயப்பட வேணாம்.

காலமைன் லோஷன் தடவலாம். டாக்டர்கிட்டயும் காமிக்கலாம். ஊசி போடுவதைத் தவிர்க்க பாருங்க. மேல அப்ளை பண்றதுக்கு மட்டும் டாக்டர் கொடுக்கும் லோஷனைத் தடவுங்க.(தேவைப்பட்டால் மட்டும்)

இது செல்ஃப் கியூரபிள் - தானாகவே சரியாகிடும். ஆனாலும் ஜாக்கிரதையாகப் பாத்துக்கணும். சொரிஞ்சுடாமல் இருக்கணும்.

தண்ணி ஊத்தினதுக்கப்புறம் ரொம்பப் பசிக்கும். பால், சாப்பாடு எல்லாமே சூடு இல்லாமல், ஆற வச்சுக் கொடுங்க.

சீக்கிரம் சரியாகிடும், கவலைப் படாதீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

கண்டிப்பா ஊசி போடக்கூடாது,நகமும் வெட்டாதீங்க வேப்பிலை அரைச்சி பூசுங்க,அம்மை இறங்கியதும் தான் தண்ணீர் ஊத்தனும் நீர் கட்டி மாதிரி இருப்பது குறைந்து வரணும் 7 இல்லை 9 ஆம் நாள் தண்ணீரில் வேப்பிலை போட்டு வைத்து குளிக்க(சுடுநீர் கூடாது) வைங்க.தண்ணீர் சில்லுன்னு இருந்தா வெயிலில் வைத்து குளிப்பாட்டுங்க.வாழைப்பழம்,இளநீர்,கொடுக்கலாம். வீட்டையும் சுத்தமாக வைங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பதில் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.இப்பொழுது வரை நான் அவளை துனி வைத்து துடைத்து விடுகிறேன்.மஞ்சள் வேப்பிலை அரைத்து பூசி விட்டேன்.
உணவு மோர்,காய்காறிகள் பழங்கள் குடுக்கிரேன்.வீடு சுத்தமாக வைத்து இருக்கிரேன்.

பதில் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.இப்பொழுது வரை நான் அவளை துனி வைத்து துடைத்து விடுகிறேன்.மஞ்சள் வேப்பிலை அரைத்து பூசி விட்டேன்.
உணவு மோர்,காய்காறிகள் பழங்கள் குடுக்கிரேன்.வீடு சுத்தமாக வைத்து இருக்கிரேன்.

தெரியலைங்க..முன்பு என் மகளுக்கு லேசா அம்மை போல வந்தது ஆனால் அம்மை இல்லை அப்போ ஃபோன் போட்டு கேட்டப்போ டாக்டர் சொன்னார் நகம் வெட்டி விடவும்,தினம் நான் சொன்ன மாதிரி சும்மா தண்ணி ஊத்தியாவது எடுக்க சொன்னார் அப்ப தான் கிருமி மேல் கிருமி உடம்பில் படிஞ்சு நிக்காம இருக்குமாம்..குழந்தைக்கு காய்ச்சல்னா விட்டுடுங்க நல்லா இருந்தா தண்ணி ஊத்திட்டு மென்மையான துணி போட்டு விடலாம்..
நான் சொல்றத விட அனுபவசாலிகள் சொல்லியிருக்காங்க விஸ்வாசம் போல் செய்யலாம் இல்ல டாக்டர்கிட்ட கேட்டுக்கலாம்

அன்பு ராதிகா... குளிக்க வைக்க வேண்டாம்னு சொல்ல காரணம் இருக்கு. குளிக்க வெச்சா சில நேரம் நீர் வைத்து சீழ் வைக்கும். இல்ல சளி, காய்ச்சல் ஏற்படும்... உடல் சூடு அதிகமானா குணமாக நாளாகும். வேப்பிலை, மஞ்சள் தேய்ப்பதால் கிருமி அண்டாது... பயம் வேண்டாம் விரைவில் குணமாகும். தொடைக்காதீங்க... புண்ணாகும்.

எனக்கும் ஒன்னும் தெரியாது... மகன் கை காலில் பார்த்ததும் என்னன்னு தெரியாம பயந்து தான் போனேன். அம்மா தான் சொன்னாங்க. அதன் பின் மாமியார், சீதாலஷ்மி என் பலர் சொல்லி தான் இதை பற்றி தெரிஞ்சுகிட்டேன். அதையே உங்களிடமும் சொன்னேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்