சின்ன அம்மை ஆலோசனை

தோழிகளே என் 3 வயது மகளுக்கு சின்ன அம்மை வந்திருக்கிறது.அவளுக்கு எல்லா தடுப்பூசியும் போட்டும் இப்பொழுது வந்திருக்கிறது.
நான் இங்க தனியாக இருக்கிறேன் எனக்கு உங்கள் ஆலோசனை தேவை அம்மை வந்தாள் என்ன செய்வது,செய்ய கூடாது மருத்துவரிடம் கேட்டோம் வந்து
ஒரு ஊசி போட்டு கொள்ள சொன்னார்கள்.ஆனால் சிலர் மருத்துவரிடம் போக கூடாது என்று சொல்கிறார்கள்,நான் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அந்த
கொப்பளங்களின் மேல் தடவலாமா அப்படி செய்தால் இன்னும் அரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இது எத்தனை நாள் தங்கும் எனக்கு 1 வயதில் இன்னொரு மகளும்
உள்ளாள்.ஆனால் அவள் இப்பொழுதுதான் அதிகமாக அக்காவுடன் ஒட்டி ஒட்டி விளையாடுகிறாள்.என்னால் ஒண்ணும் செய்ய முடியவில்லை.எனக்கு இது முதல் அனுபவம்
யாரும் இல்லாமல் எனக்கு மிகவும் குழப்பமாகவும் உள்ளது கொஞ்சம் தெரிந்தவர்கள் முடிந்தவரை உடனடியாக பதில் கூறுங்கள் நேற்று முதல்
உள்ளது.உதவுங்கள்.

வனி அக்கா என் பொண்ணுக்கு சின்ன அம்மையா சொல்லுங்க சின்ன சின்ன நீர் கட்டி மாதிரி இருக்கு ஒடம்பு நிறைய இருக்கு வாயில ஒன்னு ரெண்டுதான் இருக்கு
முகத்துல கொஞ்சம் இருக்கு தலையில கொஞ்சம் இருக்கு இது 3 நாள்.அதுவா வத்திடுமா அக்கா எனக்கு 9 நாள் ஞாயிறு வருது 7 ம் நாள் வெள்ளி வருது என்ன
பண்ணலாம்.எப்படி வத்திடுச்சுனு தெரியும்
அவளுக்கு லோஷன் தடவினது கழுவ முடியாமா இருக்கு என்ன பண்றது பல்லு வலக்கி விடலாமா சொல்லுங்க.

பல்லெல்லாம் தேய்க்கலாம். ஒன்னும் பிரெச்சனை இல்லை. சின்ன அம்மை தாங்க. முகத்தில் தான் முதலில் வரும். வெள்ளி, ஞாயிறு கூடாது. ஆனா உங்களுக்கு எப்படி பார்த்தாலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறே வருது. :( இருங்க தோழிகள் யாராவது பதில் சொல்வாங்க, எனக்கு தெரியல. வத்திடுச்சுன்னா மேலே இருக்கும் நீர் இருக்காது, அந்த இடத்தில் குழி போல ஆகி சிவந்து நிக்கும். காய்ந்திருக்கும். தானே வத்திடும், நாம ஒன்னும் பண்ண வேணாம். முழுசா எல்லாம் வத்தின பின் தான் முதல் தண்ணி விடனும். சிலருக்கு 4, 5 நாள்... சிலருக்கு 10, 15 நாள் கூட ஆகும்... வந்திருக்கும் அளவை பொறுத்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதிகா குழந்தைக்கு இப்போது எப்படி இருக்கிறது. நன்றாக கவனித்து கொள்ளுங்கள். சனாவை அதிகம் நெருங்க விடாதீர்கள். சனாவிர்க்கும் உங்களுக்கும் வேண்டுமானால் முன்கூட்டியே தடுப்பூசி போட்டு விடுங்கள். வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவருக்கும் பரவும். கவலை வேண்டாம். சீக்கிரம் சரியாகி விடும். உங்களுக்கு அங்கு வேப்பிலை கிடைக்கிறதா?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ராதிகா குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கு? சரியாயிடும் கவலைப்படாதீங்க. அம்மை வடியும் நேரத்தில் சனாவை பக்கத்தில் விடாம பார்த்துக்கோங்க. அந்த நேரத்தில்தன் அதிகமா பரவும்னு கேள்விப்பட்டிருக்கேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அவளுக்கு அப்படியேதான் இருக்கு இன்னும் அதிகமாதான் இருக்கு.சின்னவள சமாளிக்க முடியல அவகிட்டதான் போறா,பெரியவளும் அவ இல்லனா அழுவுறா.
நான் அவகூடவே இருந்த பாத்துப்பன் நான் அப்படி இப்படி எங்கயாவது போகும்போது ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டுதான் இருக்குங்க என்ன பண்றது.
ரெண்டு பேரையும் தனி தனியா வெக்க நான் படற பாடு ? சின்னவளுக்கும் சளீ அதனால அவளும் நை நை நு தான் இருக்கா

வனி அக்கா நீங்க எப்படி ரெண்டு பேரையும் தனிதனியா சமாளீக்கிரீங்க.பெரிய பசங்களா.இப்போ நீங்க எங்க இருக்கீங்க சென்னைலயா.மாலே வா
தனியா எப்படி சமாளிக்கீர்ரிங்க

நான் என் மகளை தங்கை வீட்டில் விட்டுட்டேன். மகனும் நானும் சிறை கைதி போல அறை கைதி ஆயிட்டோம். வேற வழி???!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா நீங்க இப்போ எங்க இருக்கீங்க சென்னையா

குமரனுக்கு இப்போ எப்படி இருக்கு? அம்மை குறையும் நேரத்தில் யாழினியை அருகில் விடாதீங்க. அம்மை குறைந்து தண்ணீர் ஊற்றும் கால கட்டத்தில்தான் அதிகம் பரவும்னு சொல்லி கேள்வி பட்டிருக்கேன். முதல் மூன்று நாட்கள் பரவாதாம்.

இதற்கு ஹோமியோவில் மருந்துகள் இருக்கு. என் அண்ணாவின் ரூம் மேட்டுக்கு அம்மை வந்த போது இங்கிருந்து நாங்கள் ஹோமியோ மருந்து வாங்கி அனுப்பினோம். அண்ணனுக்கு தொற்றவில்லை.

மருந்து இல்லாமலேயே சரியாகி விடும்தான். ஆனால் பரவாமல் தடுக்க முடியும். சிறுவயதில் வந்து விடுவதும் கூட நல்லதுதான். எதிர்ப்பு சக்தி டெவலப் ஆகிவிடும். இனி எப்போதும் பயப்பட தேவையில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அவனுக்கு குறைஞ்சுடுச்சு. வியாழன் நீர் ஊற்றனும். கேட்டுட்டேன் அது என்ன மருந்துன்னு... ஆனா அவர் இனி இதனால் பயன் இருக்காது சாப்பிட்டா வந்தா இந்த அளவு உக்ரமா வராம இருக்கும் அவ்வளவு தான்னு சொல்லிருக்கார். எனி வே... உங்க தகவல் பார்த்து தான் இதை தெரிஞ்சுக்கிட்டோம். மிக்க நன்றி கவிசிவா. :)

டாக்டர்ஸ் சொல்வது... எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவங்க கூடவே இருந்தாலும் வராது. :) ஆனா நம்பும்படியா இல்லை. என்ன சொல்றீங்க??? ;) ஆனா உங்க புண்ணியத்தில் இன்னைக்கு நான் ஒரு பெரிய விஷயத்தை பெரிய அலச்சலுக்கு பின் தெரிந்து கொண்டேன்... இதோ பகிர்ந்து கொள்கிறேன் எல்லாரோடையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்