நியூஸ் பேப்பர் மல்டிப்ர்பஸ் ஸ்டாண்ட்

தேதி: March 12, 2012

4
Average: 3.7 (15 votes)

 

நியூஸ்பேப்பர்/ பழைய புத்தகம்
பழைய கோக், பெப்ஸி கேன்
பெவிக்கால்/மைதா பேஸ்ட்
பேப்பரிக் பெயிண்ட் - கோல்டு மற்றும் க்ரீன் நிறங்கள்
ஆர்காமி பேப்பர் - சிவப்புநிறம்
தண்ணீர்
சோளிகள்

 

நியூஸ் பேப்பர், பழைய புத்தகங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து கொண்டு பேப்பர்களை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மைதாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைதா பசை காய்ச்சிக் கொள்ளவும். அல்லது கடைகளில் பைண்டிங் கம் கிடைக்கும் அதையும் பயன்படுத்தலாம்.
பேப்பரை தண்ணீரில் நனைத்து பெப்ஸி கேனின் மீது ஒட்டவும். கேன் முழுவதும் தண்ணீர் தொட்டே ஒட்டவும்.
கேன் அடியிலும் அதன் வடிவத்திற்கேற்ப ஒட்டவும். 2 வரிசை ஒட்டினால் போதும்.
அடுத்த லேயர் ஒட்டும் பொழுது ஈரத்தன்மையோடு இருக்கும் பேப்பரின் மேல் மைதாபசை அல்லது பெவிக்கால் தடவவும். அதன் மேல் பேப்பரை ஒட்டவும்.
பெப்ஸி கேன் முழுவதும் தேவையான கனத்திற்கு பேப்பரை ஒட்டி முடிக்கவும். இரண்டு நாட்கள் இதனை அப்படியே காயவிடவும்.
ஒரு கத்தியை கொண்டு பெப்ஸி கேன் உள்ளே சொருகி பார்த்தால் தண்ணீரில் நனைத்து ஒட்டிய பேப்பர் காய்ந்து கேனுடன் ஒட்டாமல் இருப்பது போல் இருக்கும். அப்போது கேன் பகுதியை மெதுவாக சுழற்றி உருவி எடுக்கவும். இப்போது கேன் வடிவில் பேப்பர் ஸ்டாண்ட் தயார்.
கேனின் உள்பக்கம் எவ்வாறு உள்ளதோ, அந்த அச்சு போலவே பேப்பர் ஸ்டாண்ட் உள்ளேயும் வந்திருக்கும்.
இதனை அலங்கரிக்க பேப்பர் ஸ்டாண்ட்டின் சுற்றளவு + 5 செ,மீ கூடுதலாக ஆர்காமி பேப்பரை எடுத்துக் கொண்டு க்ளூ தடவி ஒட்டவும்.
மேல் விளிம்பை தாண்டி நிற்கும் பேப்பரை ஸ்டாண்டின் வாய்பகுதி வரை இடைவெளிவிட்டு நறுக்கி உள்பக்கம் க்ளூ தடவி ஒட்டி விடவும். பின்பக்கத்திலும் வட்டமாக நறுக்கி ஒட்டவும்.
12 சோளிகளில் கோல்டுநிற பெயிண்ட் செய்து வைக்கவும். சிறிய சங்கு போன்ற சோளிகளுக்கு க்ரீன் நிற பெயிண்ட் உபயோகிக்கவும்.
சிவப்புநிற ஆர்காமி பேப்பர் ஒட்டிய பேப்பர் ஸ்டாண்டின் கீழ் ஒரத்தில் மூன்று சோளிகளை பூக்கள் போல் வைத்து, அதன் கீழ் சிறிய சோளிகளை காம்புபோல் ஒட்டி சிறிது காய்ந்ததும் க்ரீன்நிறத்தில் பெயிண்ட் செய்யவும். இந்த பூக்களின் பின்புறப்பக்கத்திலும் இதேப்போல் ஒட்டி வைக்கவும்.
இதுப்போல் பூக்களை வலது, இடது பக்கத்தின் மேல் ஓரத்திலும் ஒட்டி வைக்கவும்.
பழைய செய்திதாள்களை கொண்டு செய்த மல்டிப்ர்பஸ் ஸ்டாண்ட் ரெடி. ப்ளவர், ஸ்கெட்ச், பேனா, ப்ரஷ் எதுவேண்டுமானாலும் போட்டு வைக்கலாம். பேப்பரை கொண்டு மறுசுழற்சி முறையில் செய்யும் கைவினையை பற்றி திருமதி. மஞ்சுளாஅரசு அவர்கள் கூறியபடி சிறிய மாற்றங்களுடன் செய்து பார்த்த மல்டி பர்பஸ் ஸ்டாண்ட் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர்!!! சூப்பர்!!! ஒவ்வொரு விஷயத்திலும் அசத்துறீங்க. கலர், சங்கு ஒட்டியது என எல்லாம் கலக்கல். அப்படியே வெச்ச கண் வாங்காம பார்க்கறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா செய்து காட்டிருக்கீங்க. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

சூப்பரா இருக்கு பேப்பர் ஸ்டான்ட். ஐடியா கொடுத்த மஞ்சுளாவுக்கும் என் பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

multi purpose paper stand romba nalla irunthuthu.

Ellam Nanmaikee

nice