என் பையன் ரப்பரை முழுங்கி விட்டான்

ப்ளிஸ் உதவுங்கள் தோழிகளே. என் பையன் ரப்பரை முழுங்கி விட்டான். என்ன செய்வது சொல்லுங்க.........

குழந்தை மூச்சு விடுவதில் சிரமப் படுகிறாரா? தூங்கும் போது குறட்டை போல சத்தம் வருதா? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். இல்லைன்னாலும் மருத்துவரை பார்த்து விடுங்கள். அதுதான் நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

This should have been done immediately after your son has swallowed. YOu should turn him on this back, and hold him and pat on his back so that whatever he has swallowed would come out. Manamadhan ambu padathil kamal pannuvare....Mudhalla doctorai poi parunga. Let us hope it would come in stool but kindly do not delay visiting a doctor.

நித்யா,
நித்யா,
முதலில் பதட்டபடாதீங்க..பிள்ளைகள் எதாவது விழுங்கி விட்டால் தொண்டையில் அடைக்குதாணு பார்க்கணும்...தொண்டை சுற்றி வீக்கம்,கொஞ்சம் வாயில் நாற்றம்,மூச்சு சிரமம் இருக்கான்னு பாருங்க..
உடனே ஒரு முழு உருண்டை வெள்ளை சாதம் விழுங்க சொல்வாங்க..
90 % இரண்டு நாட்களில் வெளியே வந்து விடும்.
எதோ சில பேருக்கு எதாவது பிரச்சினை வரலாம் எதற்கும் தொண்டை,மார்பு பகுதியை xray செய்து பாருங்க..டாக்டரிடம் சென்று பார்ப்பது அவசியம்..

என்றும் அன்புடன்,
கவிதா

குழந்தைகள் எதாவது சப்பிடக்கூடாதை விழுங்கி விட்டால் தோழிகள் சொல்லியது போல் குப்புற படுக்க வைத்து முதுகில் தட்டியிருக்க வேண்டும். இது விழுங்கிய உடனே மட்டும் தான் செய்யனும். சரியாக எப்படி என்று தெரியவில்லை என்றால் முயற்சி கூட செய்யாதீர்கள்.

பின்பு அவர்களுக்கு சாப்பிடுகிறார்களா, ஒழுங்காக விளையாடுறாங்களா, அழுதுகிட்டே இருக்காங்களா, தொண்டையில் அல்லது வயற்றில் வலிக்கிறதா என்று பாருங்கள்.இதில் எதாவது ஒன்றென்றாலும் நீங்கள் உடனே மருத்துவரை அணுகவும்.

அதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு நன்றாக தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். அவர்கள் மலம் கழித்த பின் அதில் அவர்கள் முழுங்கியது வெளியேறுகிறதா என்றும் பார்க்கவும். இரண்டு மூன்று நாட்களில் வரவில்லை என்றாலும் மருத்துவரை பார்க்கவும்.

என் மகள் இதோடு இரண்டு முறை இந்த மாதிரி முழுங்கி இருக்கிறாள். முதல் முறை மாலையில் உள்ள முத்து மற்றொரு முறை குழந்தைகளின் பட்டு பாவடையில் வைத்து தைப்போமே சளைங்கை :O முதல் முறை மருத்துவரிடன் கூடிப்போகவே இல்லை. அதுவே மறுநாள் வெளியேறிவிட்டது. இரண்டாவது முறை அது மெட்டல் அதுவும் இல்லாமல் கூர் முனை இருந்ததால் தான் எக்ஸ்-ரே என்றெல்லாம் போய் தண்டம் அழுதோம். இருந்தும் ஒன்றும் இல்லை அதுவும் வெளியேறிவிட்டதாம்! அதனால் ஒன்றும் கவலை படாதீர்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நித்யா உங்க குழந்தைய முதல்ல டாக்டரிடம் அழைத்து செல்லுங்க பா,அசால்ட்டா இருக்காதிங்க பா....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி. அவனை உடனே டாக்டாரிடம் காண்பித்தோம்.எக்ஸ்ரே எடுக்க சொன்னார்கள். அவனுக்கு இப்ப 8 வயது முடிய போகுது. விளையாடும் போது இந்த மாதிரி ஆயிடுச்சு. ஆனா மோட்சன்லா பார்த்த திரி திரியா வருது.பார்ப்போம் ஆனா என்ன மனசுலாதான் பயமா இருக்கு. அவனோட ஒவ்வொரும் பிறந்த நாள் போதும் அவன் ரொம்ப கஷ்ட படுறான்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நித்யா எக்ஸ்-ரேயில் என்ன சொன்னார்கள்.எளிதில் சீரணம் ஆகும் உணவுகள் (பருப்பு,வாழைப்பழம்,கீரை,தயிர்)கொடுங்கள்.எப்பவுமே குழைந்தைகள் பொருளை விழுங்கினால் தலைகீழாக் கவிழ்த்து பொடனியில் 2 தட்டு தட்டினால் கீழே விழுந்துவிடும்.என் அம்மா பக்கத்து வீட்டுப்பையன் பால் பாட்டில் நிப்பில் மூடியை விழுங்கியபோது இப்படிட்தான் செய்தர்கள். வந்து விட்டது.

மேலும் சில பதிவுகள்