காரடையான் நோன்பு -செவ்வாய் கிழமை மாலை அமெரிக்காவில்

காரடையான் நோன்பு செவ்வாய் கிழமை மாலை அமெரிக்காவில் வருகிறது.
ஐயங்கார் வழக்கப்படி என்ன தளிகை
செய்ய வேண்டும். பெண்கள் வெறும் பலகாரம் மட்டுமே சாப்பிடனுமா?
அன்று ஸ்பெஷல் ஆக என்ன பலகாரம் பண்ண வேண்டும்.

அன்று மாத பிறப்பு தர்பனமும் வருகிறது. சீமந்தம் அன்று செய்வது இந்த நாளுக்கு பொருந்துமா? மாத பிறப்பும் சேர்ந்து வருவதால் இந்த சந்தேகம்.

தவராக நினைக்க வேண்டாம் தோழியே, அறுசுவையில் ஒரு மதத்தை சார்ந்த கலந்துரையாடல் அல்லது பழக்க வழக்கங்கள் பற்றி பேச வேண்டாமே? நீங்கள் தனியாக இருப்பீர்கள் தெரிந்துக் கொள்ள தான் கேட்டீங்க....இருந்தாலும் இது இங்கே தேவையில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் தோழி!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி லாவண்யா. மிகவும் வரவேற்கிறேன் உங்கள் ஆலோசனையை.

வீட்டு வாயில் பூஜை அறையில் மாவிலை தோரணம் கட்டி, பூரணகும்பம் வைத்து அதற்கு ஒரு சரடு கட்ட வேண்டும். காமாட்சி அம்மனுக்கு ஒரு சரடு (பூரணகும்பம் வைக்காமல் காமாட்சி அம்மனுக்கு சரடு கட்டும் வழக்கம் ஒரு சிலருக்கு உண்டு). சரடில் பசுமஞ்சள் அல்லது பூவைத்து கட்டி அம்மனுக்கு அணிவிக்க வேண்டும். இரட்டை படையில் சரடு இருக்க வேண்டும். பெண் குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கும் சேர்த்து சரடு வைக்க வேண்டும். கார அடை, வெல்ல அடை, உப்பில்லாத வெண்ணெய் வைத்து பூஜை செய்ய வேண்டும். அன்று பலகாரம் மட்டும் உண்ண வேண்டும்.

இதே நோன்பு பற்றிய வேறொரு சந்தேகத்தை தீர்க்கத்தான் நானும் இங்கு வந்தேன். எங்களைப்போல் பலர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கக்கூடும். இது குறிப்பிட்ட சாதி, மதத்தை உயர்த்தி விவாதிக்கப்பட்ட இழை அல்ல. எல்லாருக்கும் வரும் சந்தேகம் இவங்களுக்கும் வந்ததால் இங்கு பதில் சொல்லி இருக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்