சொல்ல விரும்பினேன் - 7 !!

நம்ம முந்தைய சொல்ல விரும்பினேன் 100 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

புதிய இழையில் தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெண்ணுக்கு பெண்ணே எதிரி... இதை கேட்கும் போதெல்லாம் செம கோபம் வரும். அதெப்படி பெண் பெண்ணுக்கு எதிரியாக முடியும் எல்லாம் ஆணாதிக்க வெளிப்பாடு, தன் பிழையை பெண்ணின் மேல் போட்டு மறைந்து கொள்கிறார்கள்னு கூட பக்குவமில்லாமல் நினைச்சிருக்கிறேன். ஆனால் தோழிகளின் பிரச்சினைகளைப் படிக்கும் போது பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது புரிகிறது.

சில ஆண்கள் ஏன் இப்படி மனைவிய சக மனுஷியாய் மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறார்கள்? வளர்ப்பு சரியில்லையோ! இங்கே தங்கள் பிரச்சினையை சொன்ன பல தோழிகளின் அனுபவங்களிலும் அவர்களது பிரச்சினைக்கு மூல காரணமாக இருப்பது மாமியார், நாத்தனார் என்ற பெண் உறவுகள். ஏன் இப்படி பெண்களே பெண்ணுக்கு எதிரியாக நடந்து கொள்கிறார்கள்? ஆண் வெறும் கைப்பாவையாக மட்டுமே செயல் படுகிறான் அப்படி செயல்பட இப்படிப்பட்ட பெண்களால் வளர்க்கப் படுகிறான் (ஒரு சில சைக்கோக்களைத் தவிர). இதில் படித்த, படிக்காத பெண்கள் என்று வித்தியாசம் எல்லாம் இல்லை.

தன் கணவரிடம், புகுந்த வீட்டினரிடம் இருந்து தனக்கு கிடைக்காத பாசமும் அன்பும் தன் மகனிடமிருந்து பெறத் துடிக்கிறாள் அந்த பெண். நிச்சயம் தவறில்லை. ஆனால் அதே மகனுக்கு மனைவி என்று வரும் போது மட்டும் ஏன் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை? அப்படி இன்னொரு பெண் உங்கள் பிள்ளையின் வாழ்வில் வருவது பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள் சுயநல அம்மாக்களே!

நமது தலைமுறையிலாவது இந்நிலை மாற வேண்டும். அதுவும் இன்றைய அம்மாக்களாகிய பெண்களின் கையில்தான் உள்ளது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நம் தோழிகளின் (அடி,உதை) பதிவை வைத்து இதை போட தோன்றியதால் போட்டேன்.

ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் சம்பந்தப்பட்ட இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் தானே நடக்கிறது. அப்படி இருக்க, வீட்டுக்கு வந்த மகாலஷ்மியை அட விடுங்க மனுஷியாவே நினைக்கல. அந்த பெரியவர்கள் முன்னிலையில் தானே அடித்து துன்புறுத்துகிறார்கள். நல்லது கெட்டது நடக்கும் போது தட்டி கேட்பது அவர்களின் கடமை அல்லவா? பெண்ணுக்கு கொடுமை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இது போன்ற உணர்ச்சியில்லா ஜந்துக்களை வைத்து திருமணம் முடிப்பதை விட, இவர்கள் இல்லாமலேயே பண்ணிவிட்டு போகலாம். இந்த இடத்தில் பெண்களை நினைத்தால் அதுவும் அடிவாங்கும் பெண்களை நினைத்தால் இவர்களையெல்லாம் ஒரு பெரிய அமவுண்ட் தள்ளி கயிறு கட்டி இழுத்து வந்த ஆடு,மாடுகளை போல தான் நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது என்றே எண்ண தோன்றுகிறது. பாருங்க.. இந்த மனுசன் வாழ்க்கைல அந்த காசை மொத்தமா பார்த்து இருப்பாரோ இல்லையோ, நான் சொல்றது அதிகமான வரதட்சணையுடன் நடக்கும் அடி,உதை சம்பவங்களில். மொத்தமா வாங்கிட்டு அடியும் வாங்கிட்டு. கரும்பு தின்ன கூலியும் வேணுமா கதை மாதிரி தாங்க இருக்கு. நாம சம்பாதிக்கிறோம்ங்கற நினைப்பு கூட வேண்டாங்க. நம்மை ஒண்ணும் சும்மா கொண்டு வரல. அதுக்குரிய விலை நாம் கொடுத்து தான் இங்கே வந்திருக்கோம். அந்த ஒரு உரிமையிலாவது நீங்க எதிர்த்து நில்லுங்களேன். கைகொள்ளாம கொண்டு வந்திருக்கும்போதே இத்தனை கொடுமை நடக்குதுன்னா, சும்மா வந்தா அன்னைக்கே கொன்னு போட்டுட்டுவாங்க போலருக்கே ;(

ஒரு தோழி அட்வைஸ் பண்ணி எங்க நேரத்தை வீணாக்க விரும்பவில்லைன்னு சொல்லிட்டு அவர் அடிவாங்கியே அவர் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார். தோழிகளே, தப்பா நினைச்சாலும் சரி, நான் இதை சொல்வேன். உங்களிடம் எனக்கு சக தோழி என்ற உரிமையில். நேத்து பிறந்த நண்டு, நறுவானங்களை நாம் அடிக்க கை தூக்கும் போதே அதுங்க நம்மை 4 போட்டுட்டு போய்டுதுங்க. நான் சொல்வது எங்க வீட்டில் நடப்பது. அதுங்களுக்கு இப்பவே தெரியுது பாருங்க. மானக்குறைவு, தன்மானக்குறைவு எல்லாம். திட்டினால் உடனே ஒரு ரியாக்ஷன் கைக்கு கிடைச்சதை தூக்கி போட்டு. புரியுது நீங்க சொல்றது. அவங்க குழந்தைங்க புரியாம பண்றாங்க. அதெல்லாம் இங்கே கணக்கில் சேர்த்துக்க முடியாதுன்னு. இந்த இடத்தில் நீங்க அவங்களை குழந்தையா பார்க்காதீங்க. இப்போதைக்கு அவங்களுக்கும் ஐந்தறிவுன்னே வச்சுப்போம். ஆக ஐந்தறிவுன்னாலும், அவங்களுக்கு திருப்பி தாக்கவும், அவங்களோட தன்மானத்தை காப்பாத்திக்கவும் யாருங்க சொல்லி தந்தா? இன்னும் ஒழுங்கா பேசவே வரல. இவங்ககிட்டயா நாம தன்மானத்தை பத்தி சொல்லி தந்து புரிய வச்சிருக்க போறோம். இல்லையா?

படிக்காதவங்களை விடுங்க. படிச்சவங்களே இது போன்ற கொடுமைகளுக்கு அடிபணிந்து போறது கொடுமையிலும் கொடுமைங்க. வாழ்க்கைங்கறது ஒரே முறை தான். அடுத்த பிறவில நாம நாயா பிறக்க போறோமா? பேயா பிறக்க போறோமா? இல்லை மனித பிறவியே இந்த ஜென்மத்தோடு முடியப்போகிறதா? ஒன்றும் தெரியாது. அப்படி இருக்கும் போது, இப்போது நமக்கு கிடைத்துள்ள இந்த அற்புதமான மனித வாழ்க்கையை இதுபோன்ற மிருக புத்தி கொண்ட ஆறறிவுடைய மிருகத்திடம் வீணாக்க அனுமதிக்கலாமா?

உங்களுக்கெல்லாம் பொழப்பு இருப்பே இல்லையா? யாராவது கஷ்டம்னு சொல்லிட்டு வந்தா இப்படி அட்வைசா பண்ணி தள்ளிடுங்கன்னு சொல்றவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கறேன். ரத்த சொந்தங்கள்கிட்ட இருந்தே அருமையா நல்லார்க்கியான்னு ஒரு வார்த்தை வர்றதில்லை. ஆனா, நாங்க ஏன் எங்க நேரத்தை, வேலையை ஒதுக்கி உங்களுக்கு கை வலிக்க டைப் பண்ணி அட்வைஸ் பண்ணப்போறோம் யோசியுங்க தோழிகளே. உங்களை நான் நேர்ல பார்ப்போமா? இல்லை நீங்க இனி அறுசுவைக்கு வருவீங்களா?வரமாட்டீங்களா? எதுவும் தெரியாது. இருந்தாலும், நீங்க எப்படிப்பட்ட தோழியா இருந்தாலும், எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்ங்கற நல்ல எண்ணத்தை தவிர வேறெந்த கோட்பாடும் இல்லை. அப்படி நினைத்து தான் இங்கே ஒவ்வொரு தோழிகளும் உங்களுக்கு உதவிகரமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

என்னமோ போங்க தோழிகளே. உங்களை நினைத்து பரிதாபப்படுவதா? கோவப்படுவதா? ஒன்றும் புரியவில்லை. நாங்கள் சொல்வதை இந்த காதில் வாங்கி அந்தக்காதில் விடத்தான் போகிறீர்கள். நீங்கள் உங்களுக்காக தெளிவு பெறாவிட்டாலும், தினம், தினம் உங்கள் கொடுமைகளை கண்டு ரத்த கண்ணீர் விடும் உங்கள் பெற்றோருக்காவாவது, தினம் தினம் அந்த கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்காகவாவது திருந்த பாருங்கள். திருத்த பாருங்கள். முடியாத போது எதாவது ஒரு முடிவை துணிந்து எடுங்கள். முனை மங்கிய கத்தியாக வெட்டவும் பயன்படாத, தூக்கி போடவும் முடியாத நிலையில் இருக்காதீர்கள்.

படித்த தோழிகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். உறவுகள் வாயிலாக அவற்றிற்கு ஒரு தீர்வு கிடைக்காதபட்சத்தில், அல்லது பரஸ்பர புரிதலிலோ, பரஸ்பர ஆலோசனையிலோ தீர்வு கிடைக்காத பட்சத்தில் காலம் முழுக்க இந்த கொடுமைகளை சந்திக்க விருப்பம் இல்லாத பட்சத்தில் சட்டத்தின் உதவியை நாடுவது தவறே இல்லை. உடனே விவாகரத்து என்று கற்பனை செய்யாதீர்கள் தோழிகளே. சட்டம் என்றாலே பிரித்து வைக்க மட்டும் என்றில்லை, இதுபோன்ற அடி உதைகளுக்கும் சட்டம் உதவி புரியும். ஆடுகிற மாட்டை ஆடி தான் கறக்க வேண்டும். இது போன்ற ஆட்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை,அறிவுரைகளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். இவர்களுக்கு சட்டத்தின் வாயிலாக தான் சூடு வைக்க வேண்டும். அப்புறம் பாருங்க தெனாலிராமன் பூனைக்கு பால் வச்ச கதை தான். எப்ப பாலை பார்த்தாலும் பயம் வரும்.

சமீபமாக இது போன்ற பதிவுகள் அறுசுவையில் அதிகம் வந்து கொண்டிருப்பது மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது சகோதரிகளே !!

அவர்கள் அனைவருக்கும் சீக்கிரமே அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கட்டும் என்பதே என் மற்றும் அனைத்து தோழிகளின் பிரார்த்தனையும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவி வனி கல்பனா நான் உங்களுக்குப் புதிதாய் இருந்தாலும் நீங்கள் யாரும் எனக்குப் புதிது இல்லை. நான்கு வருடங்களுக்கும் மேலாக நான் அறுசுவை உறுப்பினர். இதன் நிகழ்வுகளை அவ்வப்போது கவனித்து வருபவள்.(எதிலும் பங்கேற்க வில்லை என்றாலும் கூட.)
பழைய உறுப்பினர்கள், அவர்களில் பலர் காணாமல் போனது,பல சண்டைகள்,குதர்க்கங்கள்,அற்புதமான கருத்துக்கள் என்று அனைத்தையும் கவனித்திருக்கிறேன்.
உங்களிடம் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அடிக்கடி முடியாவிட்டாலும் அவ்வப்போது பேச விரும்புகிறேன்.தோழியாய் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
(இந்தப் பதிவை இழை 6லும் போட்டிருக்கிறேன்.தோழிகள் பொறுத்துக் கொள்க)

இந்த நிமிடத்தை வாழுங்கள் ஒரு குழந்தை போல...

Uma

எங்களுக்கு நீங்க எல்லாருமே நல்ல தோழிகள் தான்... எந்த நிலையிலும் எங்களால் முடிந்த உதவியை செய்ய காத்திருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai

உமா, வனி சொன்னதையேதான் நானும் சொல்றேன். எல்லோருமே தோழிகள்தான். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம் ஆறுதலாய் இருக்கிறோம். நீங்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாயிடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதிகா நான்கு வருட கஷ்ட்டதுக்கு பின் எடுத்த முடிவு இதுவரை பொறுமையா இருந்ததே பெரிய விசயம் தான் இது சரியா தவறான்னு சொல்லதெரில எதுவா இருந்தாலும அனுபவிச்ச உங்களுக்குதான் தெரியும் வலியும்,வேதனையும்
இந்த முடிவுக்கு பின்னாவது நீங்க சந்தோசாமாக இருக்கனும்னு கடவுளிடம் வேண்டிக்கிறேன்.
உங்களுக்கும்,உங்க குழந்தைகளுக்கும் எங்க பிரார்த்தனைகள் கண்டிப்பா எப்பவும் இருக்கும்.

இது நிரந்தர பிரிவா இல்லாம உங்களவர் திருந்தி உங்களை அழைத்து போகனும்னு வேண்டிக்கிறேன் கண்டிப்பா மாறுவார்
இளவரசியோட வரிகள் போல புரியாத பிரியம் பிரியும் போது புரியும் நம்பிக்கையோடு தைரியமா இருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வனிதா, கவிசிவா....

இந்த நிமிடத்தை வாழுங்கள் ஒரு குழந்தை போல...

Uma

இங்க நம்ம தோழிகள் ஒவ்வொருவரோட வரிகளும் அவர்கள் வாழ்க்கையை கையாலும் முறை, அவர்கள் மன நிலை என் பல விஷயங்களையும் நல்ல கருத்தையும் சொல்லுது. எத்தனை பேர் இதை எல்லாம் கவனிச்சிருப்பீங்கன்னு தெரியல...

இளவரசி - புரியாத பிரியம் பிரியும் போது புரியும்

சுவர்ணா - இதுவும் கடந்து போகும்

உமா - இந்த நிமிடத்தை வாழுங்கள் ஒரு குழந்தை போல

கவிசிவா - வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கல்பனா - நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

லாவி - கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ராதா - கடமையைச் செய்...பலனை எதிர் பார்க்காதே!

என்னுடையது - துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!!

உத்ரா - நீ இல்லாவிட்டாலும் உன்னை பற்றிய நல்ல நினைவுகளை விட்டுச் செல்.

தனா - உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ரேணுகா - அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

சுகி - ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இன்னும் நிறைய... இவை அவர்கள் குணத்தை மட்டுமல்லாது, நமக்கு வாழ்வில் எந்த பிரெச்சனை வந்தாலும் எல்லா மன நிலையிலும் நமக்கு தேவையான கருத்துகளை ஏதோ ஒரு வாசகம் காட்டிடுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்