காளான் மசாலா

தேதி: March 17, 2012

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

காளான் -- 250 கிராம் (நறுக்கியது)
சின்ன வெங்காயம் -- 10 என்னம் (நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (நறுக்கியது)
உப்பு -- தே. அ
அரைக்க:
தேங்காய் -- 1/2 பத்தை அளவு
காய்ந்த மிளகாய் வற்றல் -- 5 என்னம்
மிளகு -- 3/4 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணைய் -- 1 ஸ்பூன்
பட்டை -- 1 அங்குல அளவு
கிராம்பு -- 2 என்னம்
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

வாணலியில் எண்ணையில் ஊற்றி தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கிய பின் காளான் போட்டு வதக்கவும்.

காளானில் உள்ள தண்ணீரே போதும். தண்ணீர் வெளியே வந்து அந்த நீரிலேயே வேகவிடவும்.

பின் அரைத்த கலவையை விட்டு மீண்டும் வேகவிடவும்.

பின் 1 டீஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கல்ந்து 1 நிமிடம் கலந்து அடுப்பை அணைத்து விடவும்.

காளான் மசாலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்