நார்மல் டெலிவரிக்கு பிறகு மூட்டுவலி

அன்பு தோழிகளே எனக்கு 7 மாதங்களுக்கு முன்பு நார்மல் டெலிவரி ஆனது,நான் தற்பொழுது என் குழந்தைக்கு பால் குடுத்து வருகிறேன்,எனக்கு 1 மாதமாக உட்காரும் போது எந்திரிக்கும் பொழுது பயங்கரமாக மூட்டு வலிக்கிறது,ரொம்ப கஸ்டமாக இருக்கிறது,இது எதனால் ஏற்படுகிறது,எனக்கு இதுவரை மூட்டுவலி வந்ததில்லை,எனக்கு வயது 27 ஆகிறது,இந்த வயதில் மூட்டு வலி வருமா?இதற்கு எதாவது வைத்தியம் இருந்தால் கூறுங்கள்

நல்ல வெயிட் போட்டீங்களான்னு பாருங்க..ஆமாம்னா வெயிட்டை குறைங்க

எனக்கும் டெலிவெரி ஆகி 9 மாதம் ஆகிறது எனக்கு முதுகு வலி அதிகம் இருக்கிறது என்ன செய்யலாம்

தளிகா,நான் இப்ப டெலிவரிக்கு பிறகு 5 கிலோ குறைந்திருக்கிறேன்,வெயிட்டினால பிரச்சனை இல்லை

இருவருமே... வெயிட் அதிகம் இல்லை என்றால், முதல் பிரெச்சனை கேல்ஷியம் பற்றாக்குறை. குழந்தை பெற்றதும் நம்ம ஊரில் பாதி பெண்கள் மருந்தை விட்டுடுவாங்க. ஆனா குழந்தைக்கு தாய்பால் ஊட்டும் வரை அயர்ன் மற்றும் கேல்ஷியம் மருந்துகளை தினமும் டாக்டர் ஆலோசனைபடி தொடரனும். நீங்க இதை செய்யலன்னா இது தான் உங்க மூட்டு வலி, முதுகு வலிக்கு காரணம்.

முதுகு வலிக்கு இன்னொரு காரணம்... பிரசவத்தின் போது தண்டு வடத்தில் போடப்படும் எபிடியூரல்... போட்டிருந்தா முதுகு வலி சிலருக்கு ஏற்படும். நஃபி... நீங்க போட்டுகிட்டீங்களா??? அப்படி போட்டிருந்தா நிறைய தண்னி குடிங்க... அந்த மருந்தின் தாக்கம் உடலில் இன்னும் இருந்தா அது நீரின் மூலமே வெளியேரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இல்லை வனி எனக்கு நார்மல் டெலிவெரி தான் எபிடியூரல் கிடயாது எனக்கும் வெயிட் 12 கிலோ குறைந்து விட்டது நீங்க சொன்ன மாதிரி கால்சியம்,அயர்ன் மாத்திரை கன்டிப்பா எடுத்துகனும் இப்ப போட ஆரம்பிச்சிருக்கேன்

அப்படின்னா டிஃபீஷியன்ஸி தான்... சரியா மருந்து எடுங்க... அப்படியும் தொடர்ந்து வலி இருந்தா மருத்துவரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,எனக்கு 2 மாதங்களாக எனக்கு வலி குறையவில்லை,நானாக மெடிக்கல் ஷாப்பில் கால்சியம்,அயர்ன் மாத்திரை வாங்கி சாப்பிடலாமா?

வேணாங்க... முறைய மருத்துவர் கொடுப்பதை எடுங்க. இல்லன்னா நீங்க கர்ப்பமா இருந்த போது கொடுத்த கேல்ஷியம் மருந்தை தொடருங்க. (கேல்ஷியம் மட்டும்)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் முதல் பையன் பிறந்திருந்த போது இந்த பிரச்சினை இருந்தது. டாக்டரின் அட்வைசின் படி கல்சியம் மாத்திரை எடுக்க சரியாகிவிட்டது. 1 போட்டு சரியாகவில்லை. 2 போட்டதும் தான் சரியாகியது.முதலில் 1 இனை போடுங்கள் சரியாகவிட்டால் தான் 2 போடுங்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

மாத்திரை பேரெல்லாம் இங்கே சஜச்ட் பண்ணாதீங்க... அவங்க உடலுக்கு ஏற்ரபடி டாக்டர் கொடுப்பதை சாப்பிடட்டும். அவர் அவர் உடல் நலன் பார்த்தே சாப்பிடனும். அதுக்காக தான் சொல்றேன். கேல்ஷியம் அளவுக்கு அதிகமானாலும் நல்லதில்லை இல்லையா. :) மாத்திரை பேரை மட்டும் நீக்கிடுங்க ரதியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்