உதவுவீங்களா தோழிகளே?

என் பெயர் சொல்ல மனசு கஷ்டமா இருக்கு அதான் தோழி என்ற புது பெயரில் வந்திருக்கேன் என் பிரச்சனை சொன்னால் யாராவது உதவுவீங்களா? நான் இப்போ சவுதியில் இருக்கேன் விசிட்டிங் விசாவில் வந்தேன் 9 மாதம் மேல் இருக்க கூடாது ஆனா நா வந்து 2 வருடம் முடிந்து விட்டது என் கனவர் சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிச்சாங்க திடீரென்று எல்லாம் தடையாகி நிக்குது நா இப்போ ஊருக்கு பொகனும்னா ஃபைன் கட்டனும் என் கனவர் ரொம்ப கஷ்ட படுரார் ஆனா ஒரு பலனும் கிடைக்கல 2 வருடமா ரத்தக்கன்னீர் விடுரோம் உறவினர் யாரும் எங்க கஷ்டத்தை பார்க்க மாட்டேங்கிறாங்க கடன் வேர இருக்கு நன்பர்கள் கூட கொடுத்த பனத்தை அப்புரம் கொடு இபோ நீ கஷ்டபடுர என்று சொல்லுறாங்க ஆனா என் கனவரோட அக்கா 20,000 பனம் கொடுத்ததை தினமும் கேட்டு தொல்லை பன்றாங்க நாங்க படும் வேதனை பக்கத்தில் இருந்து பாத்துகிடே இப்படி செய்ராங்க என் கனவருக்கு அவங்க வேலை பார்க்கும் இடத்தில் இருந்து 2லட்சம் கிட்ட பனம் வர வேன்டி உல்லது அவங்க செய்வது மேன் பவர் சப்லை ஒரு லச்சம் வந்துடுச்சு என் கனவருக்கு இப்போ இக்காமா இல்லை அதனால் வேர ஒருவர் பேரில் செக் வந்தது அந்த ஆல் பனம் தராமல் இழுக்க விடுரார் சில சமயம் பட்டினியாக கிடந்த நாட்களும் உன்டு தோழிகலே என்னால் முழு விவரத்தையும் டைப் பன்ன முடியல பா கையி குழ்ந்தை வேர இருக்கு விசிட்டிங்கில் வந்து யாரும் குழந்தை இங்கு பெர கூடாது ஆனா எனக்கு அதுவும் நடந்தது ஹாஸ்பிடலில் சேர்க்க மாட்டேனுடாங்க நா வலியால் துடித்ததை வைத்து இரக்கப்பட்டு சேர்த்தார்கள் இப்போ நாங்க என்ன செய்ரதுன்னு தெரில ஒவ்வொரு நாலும் செத்துடலானு தோனுது உரவினரிடம் பன உதவி கேட்ட நீ ஏன் பிஸ்னசில் இரங்கின அது இதுன்னு கேல்வி கேட்டு கேள்வியாலயே எங்கள பாதி சாகடிக்கிறாங்க என் பெற்றோரிடமும் பனம் இல்லை அதனால் நான் இங்கு படும் கஷ்டத்தை யாரிடமும் சொல்லல என்க்கு பைத்தியம் பிடிக்கிர மாதிரி இருக்கு இப்போ அவங்கலுக்கு தேவை பனம் நா என்ன செய்ரது பனம் இல்லாதவங்க உலகத்தில் வாழவே தகுதி இல்லப்பா எனக்கு யாரவது உதவ முடியுமா?????????????

நீங்க யாருன்னு எனக்கு தெரியல. ஏன்னா இப்போ அடிக்கடி பழைய தோழிகள் பலர் புது பெயரில் சொல்ல முடியாத பிரெச்சனைகளோடு வராங்க. பிரெச்சனை இல்லை... விடுங்க.

சொந்தங்கள்... அதை ஓரமா போடுங்க!!! அது என்னைக்கும் நாம நல்லா இருந்தா தான் நம்ம பின்னாடி இருக்கும்... முன்னாடி வரும்!!! நம்ம நிலை சரி இல்லைன்னா... காணாம போகும். நீங்க யாரா இருந்தாலும் என் மனசுக்கு பட்டதை சொல்லும் முன் சில கேள்விகள் கேட்கலாமா???

ஏன் தங்க வேண்டிய காலகட்டத்தை தாண்டி நீங்க அங்க இருந்தீங்க?

குழந்தை பெற்றெடுக்க அனுமதி இல்லாதப்போ நீங்க ஏன் அதையும் செய்தீங்க?

இப்போ இங்க என்ன மாதிரி உதவியை எதிர் பார்க்கறீங்க?? எனக்கு புரியல... மனதளவில் உங்களுக்கு ஆருதல் மட்டுமே இங்கே கிடைக்கும்... ஆனால் கண்டிப்பாக யாரும் உங்களுக்கு சொலுஷன் கொடுப்பாங்களான்னு எனக்கு தெரியல.

சவுதி போன்ற நாடுகளில் நம்ம ஊர்காரங்க எவ்வளவு உஷாரா இருக்கனும்னு முன்கூட்டியே நீங்க தெரிஞ்சிருக்கனும்... இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சு உங்களை மீட்க ஒரே வழி தான் உண்டு... இந்திய தூதரகம். உதவியை நாடியிருந்தா சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani romba nanri paa pathil loduththathukku silar sonnathai nambi ippadi aayiduchu paa vithi yara vittuchu sory ennaal thamilil type panna mudila silar sonnanga 12 maaatham irukkalam enru panam thaa prachanai 9 matham mudiya 2 naal varai enggalidam 1 paisa kuda illa visa ovvoru 3 mathamum renew panna veendum kadaisi thethiyil visa puthukka 300 riyal eduthuttu en kanavar ponar angu ini time kidaiyathu 15 natkalukkul poganum enru solittanga sarinu nanum kilamba ready anen thidirunu oruththar 3 matham kalithu pona fine 200 riyal extra adachutu polanu sonnar athunala wait panninom apo na conceiva irunthen en kanavarum business start panniya time so 100 riyal kuda illa kaiyil ooril poi irangum pothu banthava iranganum enra asai ellam illa pa ooruku poi irangi angirunthu bussil pogavavuthu kasu venume enru wait panninom 3 matham kalintha piragu oru valiya panam ready panninom enakku 6 masam ana doctor en udambu sari illanu sollitanga flightla poga mudiyathunu sollitanga bleeding anathal oru masam marubadi wait panninom 7 masam aanathu thirumba en udal sari illama pochu karpapai romba keela irukunu flightla poga certificate thara mudiyathunu sollitanga 4 doctoridam ketom yarum tharala vithi en valkaiyil romba vilaiyaduthu pa ninga aaruthalaa pesiyathu manasuku konjam nimmathi tharuthu

கவலைபடாதீங்க,என் கணவரின் நண்பர் தூதரகத்தில் வெல்பேர் செக்‌ஷனில் வேலை செய்றார்,அவரிடம் கேட்டு பதில் சொல்கிறேன்.
இங்க சட்டங்களும் ,அதை மீறினால் தண்டனையும் கடுமை என்று தெரிந்திருந்தும் நீங்க மீறியது தப்பு.குழந்தை பிறந்த்தை பதிவு செஞ்சீங்களா?,குழந்தைக்கு பாஸ்போர்ட் இருக்கா?

இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சு உங்களை மீட்க ஒரே வழி தான் உண்டு... இந்திய தூதரகம். உதவியை நாடியிருந்தா சொல்லுங்க.//தோழி :-அத பத்தி சொல்லுங்கப்பா...அப்போதான அடுத்து என்ன பண்ண முடியும்னு வனி சொல்லுவாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்க நிச்சயமா பல வழி தேடியிருப்பீங்கன்னு தெரியும்..ஆனால் அறுசுவையில் வந்து கேட்பதால் எந்த ப்ரிஜோஜனமும் இல்லை.காசை கொடுத்தவங்க திருப்பி கிடைக்காதுன்னு தெரிஞ்சா அவசரமா கேட்க தான் செய்வாங்க நம்ப தப்பு தானே பொறுத்து தான் ஆக வேண்டும்..வட்டி மேல வட்டி குட்டி மேல குட்டின்னு சேர்ந்துட்டே போகாம உடனடியா வனி சொன்ன மாதிரி அவங்களை தொடர்பு கொள்ள பாருங்க எத்தனையோ பேர் இதையெல்லாம் மீறி ஊர் போய் சேரத் தான் செய்றாங்க.கடவுளை நம்புங்க கைவிட மாட்டார்

அன்புத் தோழி, இந்த சமயத்தில் உங்களுக்கு தேவை தெளிவான சிந்தனையும், தன்னம்பிக்கை, தைரியமும் தான். இப்போது வேறெதை பற்றியும் சிந்திக்காமல, தோழி வனிதா சொன்னது போல அங்கிருக்கும் இந்திய தூதரகத்தை அணுகி உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி ஊர் வந்து சேர பாருங்கள். ஊரில் நிச்சயம் நல்ல வழி பிறக்கும். இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அங்கம் என நினைத்துக் கொள்ளுங்கள். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டங்களில் இதுபோன்ற சூழ்நிலையை கண்டிப்பாக எதிர்கொண்டு வந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு மட்டும் தான் இதுபோன்ற கஷ்டமோ என நினைத்து வருந்த வேண்டாம்.

//பனம் இல்லாதவங்க உலகத்தில் வாழவே தகுதி இல்லப்பா // அப்படி பார்த்தால் உலகில் பாதிக்கு மேற்பட்டோர் வாழ தகுதி இல்லாதவர்களாக தான் இருக்க வேண்டும். கஷ்டமான சூழ்நிலையில் இப்படியெல்லாம் நினைக்க தோன்றும். சீக்கிரமே உங்கள் கஷ்டங்கள் விலகி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் அதற்கு என் மற்றும் அறுசுவை தோழிகளின் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்கு உண்டு தோழியே. நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இருமுறை பதிவாகி விட்டது ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இப்போ தான் கவனிச்சேன் "செத்துடலாம் போல இருக்கு" தயவு செய்து பணக்கஷ்டத்துக்காக இப்படியெல்லாம் யோசிச்சுடாதிங்க..பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..எல்லாம் ஒரு சைக்கிள் தாங்க இவ்வளவு கஷ்டப்பட்டுட்டீங்க நிச்சயம் ஒரு வசந்தகாலம் வராமலா போகும்.எப்படியாவது கெஞ்சி உதவி கேட்டால் கண்டிப்பா உதவி கிடைக்கும்.ஊர் வந்து சேருங்க . உழைக்க ரெடியா இருந்தா நிச்சயம் நல்லபட்யா வாழலாம்

பயம் வேண்டாம்., இந்தியத்தூதரகம் அணுகுங்கள் கண்டிப்பா உதவுவாங்க.

Don't Worry Be Happy.

சொந்தபந்தங்களின் ஏச்சு, பேச்சு. கவலை, கண்ணீர், எல்லாத்தையும் ரெண்டு பேரும் தூக்கி குப்பையில் போடுங்க. எது வந்தாலும் இரும்பு நெஞ்சோடு இருங்கள்.
//பனம் இல்லாதவங்க உலகத்தில் வாழவே தகுதி இல்லப்பா// சரியா சொன்னீங்க. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்குனு வள்ளுவரே சொல்லியிருக்கார். அந்த பொருளை பெற நீங்க தொழிலில் ஜெயிக்கனும்னா,அதுக்கு மான, அவமானம் பார்க்காம எப்படியாவது சொந்த மண்ணுக்கு வந்துடுங்க. native place தர்ற தெம்பே தனி.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
இப்போதைய உங்களின் மனதுக்கு இந்த நம்பிக்கை வரிகள் மருந்து போடும்னு நினைக்கிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்